உள்ளடக்கத்துக்குச் செல்

எம். ஜி. ஆர். நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். ஜி. ஆர் நகர் (MGR Nagar எம்.ஜி. ராமச்சந்திரன் நகரிலிருந்து சுருக்கப்பட்டது) என்பது இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள ஒரு சுற்றுப்பகுதியாகும்.[1] இப்பகுதியானது காய்கறி சந்தை மற்றும் மீன் சந்தைக்கு பெயர் பெற்றது.[2]

அமைவிடம்[தொகு]

இது, சென்னை கே.கே.நகரில் அண்ணா முக்கிய சாலையின் தெற்கே அமைந்துள்ளது. இது வடக்கில் கே.கே நகர், மேற்கில் நெசப்பாக்கம், தெற்கில் அடையாறு ஆறு மற்றும் தென்கிழக்கில் ஜாபர்கான்பேட்டை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

போக்குவரத்து[தொகு]

KK நகர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அல்லது நிறுத்தப்படும் அனைத்து MTC பேருந்துகளும், அண்ணா முக்கியச் சாலையில் உள்ள MGR நகரின் மூன்று பேருந்து நிறுத்தங்கள் வழியாகச் செல்கின்றன. [3]

பொது சேவைகள்[தொகு]

எம்ஜிஆர் நகர் காவல் நிலையம் (R10) வெங்கட்ராமன் சாலையில் அமைந்துள்ளது. [4]

நிகழ்வுகள்[தொகு]

2005 அக்டோபரில் வெள்ள நிவாரணம் வழங்குவதற்காகக் கூடியிருந்த 4000 பேரில் கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "For residents of MGR Nagar, a Black Sunday". தி இந்து. 19 December 2005 இம் மூலத்தில் இருந்து 11 January 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080111081949/http://www.hindu.com/2005/12/19/stories/2005121913050400.htm. 
  2. "Residents appeal for public health centre". The Hindu. 31 July 2011. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/article2309749.ece. 
  3. V. Soundararani (27 November 2008). "Corporation removes encroachments on Anna Main Road". Arcot Road Times. http://arcotroadtimes.com/2008/11/corporation-removes-encroachments-on-anna-main-road/. 
  4. Shoba Srikanth (2 April 2010). "MGR Nagar police officers host meeting with residents". Arcot Road Times. http://arcotroadtimes.com/2010/04/mgr-nagar-police-officers-host-meeting-with-residents/. 
  5. "42 killed in Chennai stampede". தி இந்து. 19 December 2005 இம் மூலத்தில் இருந்து 21 December 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051221050623/http://www.hindu.com/2005/12/19/stories/2005121912500100.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஜி._ஆர்._நகர்&oldid=3971451" இலிருந்து மீள்விக்கப்பட்டது