உள்ளடக்கத்துக்குச் செல்

என். எஸ். சுந்தரராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். எஸ். சுந்தரராஜன்
சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு
பதவியில்
1957 - 1962
1962 - 1967
பின்னவர்கோவிந்தன்
தொகுதிதாரமங்கலம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

என். எஸ். சுந்தரராஜன் (N. S. Sundararajan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அக்டோபர் 3, 1909-இல் பிறந்தார். செப்டம்பர் 12, 1984-இல் இறந்தார். 1957 மற்றும் 1962 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக தாரமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2]

சுந்தரராஜன் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், இன்றைய நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நஞ்சை எடையார் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். பின்னர் வழக்கறிஞர் தொழிலுக்காகத் தனது குடும்பத்துடன் சேலத்தில் குடியேறினார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த சுந்தரராஜன் வழக்கறிஞராகத் தொழில் புரிந்து பின்னர் அரசியல்வாதியாக மாறினார். இவர் தி. இரா. சுந்தரத்திற்குச் சொந்தமான மாடர்ன் தியேட்டர் நிறுவனத்துடன் (அப்போது மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று) தொடர்பிலிருந்தார். இவர் திரைப்பட விநியோக நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இவருக்குத் தொழில் மற்றும் அரசியல் ஆர்வங்கள் தவிர, மொழி மற்றும் இலக்கியத்தின் மீதும் காதல் இருந்தது.

இவருடைய மகன்கள் மருத்துவர் என். எஸ்.சந்திரசேகரன் மற்றும் என். எஸ். ஆர். முரளிதரன் ஆகியோர் இப்போது இவரது பெயரில் விருட்சம் அறக்கட்டளையின் நிறுவினர்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._எஸ்._சுந்தரராஜன்&oldid=4104991" இலிருந்து மீள்விக்கப்பட்டது