எத்திலீன் ஈரமீன் ஈரைதரோவயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்திலீன் ஈரமீன் ஈரைதரோவயோடைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எத்தேன்-1,2-டையமீன் டைஐதரோவயோடைடு
வேறு பெயர்கள்
எத்திலீன் ஈரமோனியம் ஈரயோடைடு
யோடெத்தமீன்
ஐதரோடீன்
இனங்காட்டிகள்
5700-49-2 Y
Abbreviations EDDI
ChemSpider 20604 Y
InChI
  • InChI=1S/C2H8N2.2HI/c3-1-2-4;;/h1-4H2;2*1H Y
    Key: IWNWLPUNKAYUAW-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2H8N2.2HI/c3-1-2-4;;/h1-4H2;2*1H
    Key: IWNWLPUNKAYUAW-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 21921
SMILES
  • NCCN.I.I
  • I.I.NCCN
பண்புகள்
C2H10I2N2
வாய்ப்பாட்டு எடை 315.92 g/mol
தோற்றம் நிறமற்றது மற்றும் இளமஞ்சள் நிறமுடைய படிகத்தூள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

எத்திலீன் ஈரமீன் ஈரைதரோவயோடைடு (Ethylenediamine dihydriodide) என்பது எத்திலீன் ஈரமீன் மற்றும் ஐதரயோடிக் அமிலம் சேர்த்து வருவிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நீரில் கரையக்கூடிய இச்சேர்மம் நிறமற்றும் இளமஞ்சள் நிறத்திலுமான படிகவடிவ தூளாகக் காணப்படுகிறது. மேலும் இவ்வுப்பானது எத்திலீன் ஈரமோனியம் இரு நேர்மின்னயனி C2H4(NH3)22+ மற்றும் அயோடேட்டு அயனிகளால் ஆக்கப்பட்டுள்ளது.

பயன்கள்[தொகு]

எத்திலீன் ஈரமீன் ஈரைதரோவயோடைடு சேர்மத்தை செல்லப் பிராணிகளுக்கான உணவாகவும் மற்றும் மாடுகளுக்கு அவற்றின் உடல் உட்கிரகிக்கும் அளவுக்கு நரம்பூடாக செலுத்தும் உணவாகவும் பயன்படுகிறது. அயோடின் பற்றாக்குறைக்கு மருந்தாகவும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.[1] அயோடினின் முக்கியப்பயன்பாடுகளில் ஒன்று இவ்வுப்பைத் தயாரித்தலாகும். ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 மில்லிகிராம் அளவுக்கு இவ்வுப்பை உட்கொள்ளலாம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் பரிந்துரைக்கிறது.[2] பொதுவாக எத்திலீன் ஈரமீன் ஈரைதரோவயோடைடு, அயோடினின் ஊட்டச்சத்து மூலமாகவும் பாதுகாப்பான ஒரு சேர்மமாகவும் கருதப்படுகிறது. மேலும் மாடுகளின் குளம்பு அழுகல் நோயைத் தடுக்கும் மருந்தாகவும் இவ்வுப்பு பயன்படுத்தப்படுகிறது.[3]

கால்சியம் அயோடேட்டு மற்றும் பொட்டசியம் அயோடைடு ஆகியன பிற கால்நடை உணவு சேர்க்கைப் பொருட்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lyday, Phyllis A. "Iodine and Iodine Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim, ISBN 978-3-527-30673-2 எஆசு:10.1002/14356007.a14_381 Vol. A14 pp. 382–390.
  2. The Elimination of Iodine Deficiency Disorders பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம், A Resource Package for Central and Eastern Europe, the Commonwealth of Independent States and Baltic States
  3. Berg JN, Maas JP, Paterson JA, Krause GF, Davis LE (1984). "Efficacy of ethylenediamine dihydriodide as an agent to prevent experimentally induced bovine foot rot". Am. J. Vet. Res. 45 (6): 1073–8. பப்மெட்:6146277. https://archive.org/details/sim_american-journal-of-veterinary-research_1984-06_45_6/page/1073.