அயோடேட்டு

அயோடேட்டு (Iodate) என்பது அயோடிக் அமிலத்தினுடைய இணைப்புக் காரமாகும்.[1] அயோடேட்டு எதிர்மின் அயனியில் அயோடின் மூன்று ஆக்சிசன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இதனுடைய மூலக்கூறு வாய்பாடு IO3− ஆகும். அயோடேட்டு அயனியின் மூலக்கூறானது முக்கோண பட்டைக்கூம்பு வடிவமைப்பு கொண்டுள்ளது.
பெரயோடேட்டை தையோயீத்தருடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி அயோடேட்டைத் தயாரிக்க முடியும். இவ்வினையில் சல்பாக்சைடு உடன்விளை பொருளாக கிடைக்கிறது.[2]
அயோடேட்டு குழுவைக் கொண்ட வேதிச் சேர்மங்கள் ஒரே வகையான பண்புகளுடன் உள்ளன. எடுத்துக்காட்டாக, சோடியம் அயோடேட்டு, (NaIO3), வெள்ளி அயோடேட்டு (AgIO3) மற்றும் கால்சியம் அயோடேட்டு (Ca(IO3)2) ஆகியனவற்றைக் கூறலாம். இவ்வகை அயோடேட்டுகள் பொதுவாக குளோரேட்டுகளை ஒத்திருக்கின்றன. அயோடினுக்குப் பதிலாக குளோரின் என்பது மட்டுமே வேறுபாடாக இருக்கின்றது.
அமிலச்சூழலில் அயோடிக்கமிலம் உருவாகிறது. பொட்டாசியம் ஐதரசன் அயோடேட்டு (KH(IO3)2) என்பது பொட்டாசியம் அயோடேட்டு மற்றும் அயோடிக் அமிலத்தினுடைய ஒர் இரட்டை உப்பு ஆகும். அதேவேளையில் இது ஒரு அமிலமாகவும் இருக்கிறது. அயோடின் மணிப்பொறி வினையில் அயோடேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. பொட்டாசியம் அயோடைடு போலவே பொட்டாசியம் அயோடேட்டும், கதிரியக்க அயோடின் ஈர்ப்பை எதிர்க்கும் முற்காப்பு நடவடிக்கையில் பயன்படுகிறது.[3][4]
ஆக்சி எதிர்மின்னயனிகள்[தொகு]
அயோடினால் −1, +1, +3, +5, அல்லது +7 என்ற ஆக்சிசனேற்ற நிலைகளை ஏற்க முடியும். மின்சுமை ஏதுமற்ற பலஅயோடின் ஆக்சைடுகள் அறியப்பட்டுள்ளன.
அயோடின் ஆக்சிசனேற்ற நிலை | −1 | +1 | +3 | +5 | +7 |
---|---|---|---|---|---|
பெயர் | அயோடைடு | ஐப்போ அயோடைடு | அயோடைட்டு | அயோடேட்டு | பெரயோடேட்டு |
வாய்பாடு | I− | IO− | IO2− | IO3− | IO4− or IO65− |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Merriam-Webster definition". 2007-09-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-04-29 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|https://web.archive.org/web/20070930031958/http://www.m-w.com/cgi-bin/dictionary?book=
ignored (உதவி) - ↑ Qiu, Chao; Sheng Han; Xingguo Cheng; Tianhui Ren (2005). "Distribution of Thioethers in Hydrotreated Transformer Base Oil by Oxidation and ICP-AES Analysis" (abstract). Industrial & Engineering Chemistry Research 44 (11): 4151–4155. doi:10.1021/ie048833b. http://pubs.acs.org/cgi-bin/abstract.cgi/iecred/2005/44/i11/abs/ie048833b.html. பார்த்த நாள்: 2007-05-03. "Thioethers can be oxidized to sulfoxides by periodate, and periodate is reduced to iodate".
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-10-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-04-29 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-10-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-04-29 அன்று பார்க்கப்பட்டது.