எண்முறை உரிமைகள் முகாமைத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண்முறை உரிமைகள் முகாமைத்துவம் (Digital Rights Management/DRM) என்பது, மென்பொருள், வன்பொருள் மற்றும் எண்முறை வடிவங்களில் கிடைக்கும் இசை, ஒளிப்படம், தகவல்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை, பயன்படுத்துவதற்கான அனுமதிகளை ஒழுங்குபடுத்துகின்ற/கட்டுப்படுத்துகின்ற கொள்கைகளையும், உரிம ஒப்பந்தங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் எந்தவொரு தொழிநுட்பத்தையும் குறிக்கும் பொதுச்சொல்லாகும்.[1]

எண்முறை தடுப்பு முகாமைத்துவம்[தொகு]

எண்முறை உரிமைகள் முகாமைத்துவமானது, குறித்த எண்முறை ஆக்கம் ஒன்று கொண்டிருக்கும் உரிமைகளை, உரிமக் கட்டுப்பாடுகளை விபரித்தல், பயன்படுத்தல் விற்றல், போன்ற விடயங்களை கையாள்கிறது.[2] காப்புரிமை மீறல்களைத் தடுக்க இந்த தொழில்நுட்பம் பயனாகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் எந்தவொரு எண்முறை ஆக்கத்தையும் நகலெடுப்பது கடினமாகும். இவை சிலநேரங்களில் காப்புரிமை சட்டங்களை விடக் கடுமையாக இருப்பதாக உள்ளது. இதனால் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினர் இதனை எண்முறை தடுப்பு முகாமைத்துவம் (Digital Restrictions Management) எனப் பெயரிடல் பொருத்தமானது எனக் கருதுகின்றனர்.

எண்முறை உரிமைகள் முகாமைத்துவமும், க்னூ பொதுமக்கள் உரிமமும்[தொகு]

தற்போது வெளியிடபட்டிருக்கும், க்னூ பொதுமக்கள் உரிமத்தின் மூன்றாம் வெளியீட்டின் முதலாவது முன்வரைவானது தன்னகத்தே, எண்முறை உரிமைகள் முகாமைத்துவம் தொடர்பான வியாக்கியானங்களையும் கொண்டிருக்கிறது.

தற்போது எண்முறை உரிமைகள் முகாமைத்துவத்தை பயன்படுத்தும் சாதனங்கள்[தொகு]

  • Amazon Kindle
  • Xbox
  • Xbox 360
  • DVD Players
  • Sony Ericsson V800
  • Apple iPod
  • Microsoft PlaysForSure devices
  • Sony PS2 Memory Card
  • Sony Memory Stick

முகாமைத்துவ மென்பொருளை மீறல்[தொகு]

எண்முறை உரிமைகள் முகாமைத்துவத்தை செயல்படுத்தும் மொன்பொருள் நிரலை மாற்றி மீறிட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நிரல் மீறப்பட்டல் நகலெடுப்பது எளிதாகும். இதுவரை உள்ள அனைத்து பொதுவான முகாமைத்துவ நிரல்களும் மீறப்பட்டுள்ளன. வருங்கால நிரல்களும் மீறப்படக்கூடும். இவ்வாறு நிரல்மீறல் ஐக்கிய அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பானதாகும்.

உசாத்துணை[தொகு]

  1. "Computer Forensics: Investigating Network Intrusions and Cyber Crime, Volume 4". EC-Council. அக்டோபர் 20, 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "The pros, cons, and future of DRM". அக்டோபர் 20, 2016 அன்று பார்க்கப்பட்டது.