கணினி வன்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வன்பொருள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒரு தனிப்பட்ட கணினி, கணினி வன்பொருள் களின் பல்வேறு இருப்புக் கூறுகளால் ஆனது, அதன் மீது ஒரு இயங்குதள அமைப்பு மற்றும் இயக்கபவரின் விருப்ப செயல்பாடுகளைச் செய்வதற்கான மென்பொருளும் நிறுவப்பட்டுள்ளது.

வழக்கமாயுள்ள ஒரு தனிப்பட்ட கணினி வன்பொருள்[தொகு]

தனிப்பட்ட கணினியில் வன்பொருள்.1. கணினித்திரை2. மதர்போர்ட்3. சி.பி.யு.4.ரேம் நினைவகம் 5. விரிவாக்க கார்ட் 6. மின் அமைப்பு 7. சி.டி.ரோம் டிரைவ் 8.வன் தகடு9. விசைப்பலகை 10. மௌஸ்
விருப்பிற்கேற்ற கணினியின் உள்ளே

தனிப்பட்ட கணினி பல்வேறு வடிவக் காரணிகளுடன் கிடைக்கப்பெற்றாலும் ஒரு வழக்கமான தனிப்பட்ட கணினி செங்குத்து கோபுர வடிவிலான பெட்டி மற்றும் பின்வரும் பாகங்களை உள்ளடக்கியிருக்கிறது:

மதர்போர்ட்[தொகு]

மதர்போர்ட் தான் கணினியின் "உடற்கூறு"[மேற்கோள் தேவை].மதர்போர்டுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள பாகங்கள் பின்வருமாறு:

 • 'சென்ட்ரல் ப்ராசஸிங் யூனிட்' (சிபியு) பெரும்பான்மையான கணக்கீடுகளையும் செயலாக்குகிறது . மேலும் இது கணினியின் மூளை என்று அழைக்கப்படுகிறது. இது வழக்கமாக ஒரு வெப்ப மூழ்கி மற்றும் விசிறியால் குளிரவைக்கப்படுகிறது.
 • சிப்செட் , முதன்மை நினைவகம் உட்பட சிபியு மற்றும் இதர பாகங்களை இணைத்து தொடர்புபடுத்துகிறது.
 • ரேம் செயல்முறையில் இருக்கும் அணைத்தையும் மற்றும் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் இயங்குதளத்தையும் நினைவில் வைத்திருக்கும். ரேம் என்பது ரேண்டம் அக்கேச்ஸ் மெமெரி என்பதன் சுருக்கமாகும்
 • பையாஸ் தொடக்க சிறு தானியங்கி மற்றும் மின் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியது. தி பேசிக் இன்புட் அவுட்புட் சிஸ்டம் என்பதன் சுருக்கமான இதன் செயல்பாடுகள் இயங்குதள் அமைப்பு செயலூக்கிகளால் கையாளப்படுகிறது.
 • இன்டெர்னல் பஸ்ஸ்ஸ் இது சிபியு-வை பல்வேறு உள் பாகங்களுடன் இணைப்பதுடன் ஒலி மற்றும் வரைகலை ஆகியவற்றின் விரிவாக்க கார்டுகளுடன் இணைக்கிறது.
  • தற்போதிருப்பவை
  • வழக்கற்று போனவை
   • ஏ.டி.ஏ. (சாடா-வால் மாற்றப்பட்டது)
   • ஏ.ஜி.பி. (பி.சி.ஐ.-யால் மாற்றப்பட்டது)
   • வி.எல்.பி. வெசா லோக்கல் பஸ்(ஏ.ஜி.பி-யால் மாற்றப்பட்டது)
   • ஐ.எஸ். ஏ. (விரிவாக்க அட்டை ஒதுக்கிட முறை தனிப்பட்ட கணினியில் வழக்கற்று போனது, இன்னும் தொழிலக கணினிகளில் பயன்படுத்தப்படுகிறது)
 • எக்ஸ்டெர்னல் பஸ் கான்ட்ரோலர்கள் போர்ட்டுகளுக்கு வெளிப்புற பாகங்களை இணைப்பதில் உதவுகின்றன.இந்த போர்ofடுகள் சௌத் பிரிட்ஜ் ஐ.ஓ. கண்ட்ரோலர்களுடன் நேரடியாக கட்டுப்படுத்தப்படுகின்றன அல்லது பி.சி.ஐ. பஸ் மூலம் மதர்போர்டுடன் இணைக்கப்படுள்ள விரிவாக்க கார்டுகளை ஆதாரமாகக் கொண்டுள்ளன.

மின்ஆற்றல் அமைப்பு[தொகு]

இது பவர் கார்டு, சுவிட்ச் மற்றும் கூலிங் பேன் ஆகியற்றை உள்ளடக்கியுள்ளது. மதர்போர்டு மற்றும் இன்டெர்னல் டிஸ்க் டிரைவ்களுக்கு தேவையான மின்ஆற்றலை அளிக்கிறது. மேலும் ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றி வழங்குவதுடன் வெவ்வேறு கணினி பாகங்களுக்கு வெவ்வேறு மின்ஆற்றலை வழங்குகிறது.

வீடீயோ காட்சிபடுத்தும் ஊக்கி[தொகு]

விசுவல் டிஸ்ப்ளே யூனிட்டுக்கான வெளியீடை ஏற்படுத்துகிறது. இது மதர்போர்டில் அல்லது ஒரு கிராபிக் கார்ட் வடிவில் தனதே ஆன ஒரு தனித்து ஒதுக்கீட்டில் (பி.சி.ஐ., பி.சி.ஐ-ஈ, பி.சி.ஐ-ஈ 2.0 அல்லது ஏ.ஜி.பி) இணைக்கப்பட்டிருக்கும்.

நீக்கப்படக்கூடிய ஊடக சாதனங்கள்[தொகு]

 • சி.டி.(குறுந்தகடு) - இசை மற்றும் தரவுகளுக்கு ஏற்ற மிகவும் பிரபல வகையாக இருக்கும் நீக்கப்படக்கூடிய சாதனம்
  • சி.டி-ரோம் டிரைவ் - ஒரு குறுந்தகட்டிலிருந்து தரவுகளைப் படிக்க உதவும் கருவி
  • சி.டி. ரைட்டர் - ஒரு குறுந்தகட்டிலிருந்து படிக்கவும் அதனுள்ளே பதியவும் உதவும் கருவி.
 • டி.வி.டி (டிஜிட்டல் வெர்சடைல் டிஸ்க், தமிழில்: இறுவட்டு) - ஒரு குறந்தகட்டைப் போன்றே அளவைக் கொண்டது ஆனால் அதைவிட 12 மடங்கு தகவல்களை பதிவு செய்யக்கூடிய நீக்கப்படும் சாதனம்.இது மிகப் பொதுவான டிஜிட்டல் வீடியோவை மாற்றம் செய்வதற்கு இது தான் மிகவும் பயனுள்ள வழிமுறை மற்றும் தரவு சேமிப்பிற்கு இது மிகப் பிரபலமானது.
 • ப்ளு-ரே டிஸ்க் - தரவு மற்றும் உயர் வரையறையிலான வீடியோக்களுக்கான அதிக தொகுப்புகளுடன் கூடிய ஆப்டிகல் வட்டு.இது குறுந்தகடை போல் 70 மடங்கு தகவல்களை பதியும் திறன் கொண்டது.
  • பி.டி-ரோம் டிரைவ் - ப்ளு-ரே டிஸ்க்கிலிருந்து தரவைப் படிக்க உதவும் கருவி.
  • பி.டி-ரைட்டர் - ப்ளு-ரே டிஸ்க்கிலிருந்து டேட்டாவை படிக்கவும் அதனுள்ளே பதியவும் பயன்படும் சாதனம்.
 • ஹெச்.டீ. டீ.வீ.டீ. - ப்ளூ-ரே வடிவமுறைக்கு இணையானது இப்போது கைவிடப்பட்டது
 • ப்ளாப்பி டிஸ்க் - மெல்லிய வளையக்கூடிய காந்தத்தாலான வழக்கிழந்த பதிவுசெய்யும் சாதனம்தற்போது முக்கியமாக ரைடு டிரைவுகளை தொடக்கி வைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
 • ஜிப் டிரைவ் - 1994 ஆம் ஆண்டில் லோமேகாவால் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட இது வழக்கில் இல்லாத மத்தியதர கொள்திறன் கொண்ட ஒரு நீக்கப்படக்கூடிய சாதனமாகும்.
 • யூ.எஸ்.பி. ஃபிளாஷ் டிரைவ் - ஒரு யூ.எஸ்.பி. இடைமுகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ப்ளாஷ் நினைவ தரவு சேமிப்பு சாதனமான இது சிறிய லேசான கழற்றி மாட்ட மீண்டும் மீண்டும் பதியக்கூடிய வகையில் அமைந்தது. கொள்ளளவுகள் நூற்றுக்கணக்கான மெகா பைட்டுகள் (குறுந்தகடுகளில் உள்ளது போல) முதல் சில கிகா பைட்டுகள் (விலையுயர்ந்த ப்ளு-ரே டிஸ்க்குகளை விஞ்சுகிறது) வரை வேறுபடுகிறது.
 • டேப் டிரைவ் - நீண்டகால பதிவுகளுக்காகவும் பதிப்பெடுத்லுக்காகவும் தரவை மின்காந்த டேப்பில் படிக்கவும் பதியவும் செய்யும் கருவி.

உள்ளார்ந்த சேமிப்பகம்[தொகு]

பின்னர் பயன்பயன்படுத்துவதற்காக தரவை கணினியில் வைத்திருக்கும் வன்பொருளான இது கணினிக்கு மின்ஆற்றல் இல்லாதபோதும் தொடர்ந்து நிலையாக இருக்கும்.

 • ஹார்ட் டிஸ்க் - மிதமான காலத்திற்கான தரவு சேமிப்பிற்கு.
 • சாலிட் ஸ்டேட் டிரைவ் - அசையா பகுதிகளை உடைய டிஜிட்டல் முறையில் டேட்டாவை பதிவுசெய்யும் ஹார்ட் டிஸ்க் போன்ற சாதனம்.
 • ரெய்ட் அர்ரே கண்ட்ரோலர் - ரெய்ட் ஆர்ரே என அழைக்கப்படக்கூடிய செயல்பாட்டுத்தன்மை அல்லது நம்பகத்தன்மையில் மேம்பாட்டை அடையும் நோக்கில் பலவிதமான உள்ளார்ந்த மற்றும் வெளிப்புற வன் தகுடுகளை நிர்வகிக்க உதவும் ஒரு சாதனம்.

சவுண்ட் கார்ட்[தொகு]

முதன்மை கட்டுரை: Sound card

ஆடியோ சாதனங்களுக்கு ஒலியை வெளியிட கணினியை இயலச்செய்கிறது, அதேபோல் மைக்ரோபோனிலிருந்து உள்ளிடலையும் ஏற்றுக்கொள்ளச் செய்கிறது. பெரும்பாலான நவீன கணினிகளில் சவுண்டு கார்டு மதர்போர்டிலேயே அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சவுண்டு கார்டு தனியாகவும் நிறுவிக் கொள்ளலாம். முன்பதியப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட பெரும்பாலான சவுண்டு கார்டுகள் சுற்றிவரும் ஒலித் திறனைப் பெற்றுள்ளன.

இதர பாகங்கள்[தொகு]

அத்துடன், ஒரு கணினி அமைப்பின் வெளிப்புற பாகங்களையும் வன்பொருள் உள்ளடக்கியிருக்கலாம்.பின்வருவன நிலையானவை அல்லது மிகப் பொதுவான பாகங்களாகும்.

வீல் மௌஸ்

பல்வேறு உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்களை உள்ளடக்கியிருக்கிறது, வழக்கமாக இவை கணினி அமைப்பின் வெளிப்புறம் இருக்கும்.

உள்ளீடு[தொகு]

 • உரை உள்ளீட்டு சாதனங்கள்
  • விசைப் பலகை- பொத்தான்களை அழுத்துவதன் மூலம் உரை மற்றும் வரியுருகளை உள்ளிடுவதற்கான ஒரு சாதனம் இது தட்டச்சு இயந்திரம் போன்றதாகும்.பெரும்பாலும் பொதுவாக இருக்கும் ஆங்கில மொழி விசை பலகை அமைப்பு குவேர்டி அமைப்பாகும்.
 • சுட்டும் சாதனங்கள்
  • மௌஸ் - தன்னுடைய ஆதரவு தளத்திற்கு தொடர்புடைய இரு பரிமாண நகர்வை கண்டுணர துணை புரியும் சுட்டும் சாதனமாகும்.
  • ஆப்டிகல் மௌஸ்- லேசர்கள் அல்லது மிகப் பொதுவாக எல்.ஈ.டி களைப் பயன்படுத்தி மௌசின் நகர்வை தீர்மானிப்பதற்காக மௌசின் அடியில் இருக்கும் தளத்தை உணர்ந்து, திரையில் மௌசின் நகர்வாக மாற்றிக் காட்டுகிற ஒரு புதிய தொழில்நுட்பமாகும்.
  • டிராக்பால் - சாக்கெட்டில் வைக்கப்பட்ட உருளும் தன்மை கொண்ட ஒரு சுட்டும் சாதனம். இது இரு துருவங்களிலும் நகர்வை கண்டுணர்கிறது.
 • விளையாடுவதற்கான சாதனங்கள்
  • ஜாய்ஸ்டிக்- இரண்டு அல்லது மூன்று பரிமாணங்களில் கோணங்களைக் கண்டறிவதற்காக, கைகளில் பிடிக்கக்கூடிய கோல்களைக் கொண்ட பொதுவான கட்டுப்பாட்டு சாதனமாகும்.
  • கேம்பேட்- உள்ளீடுகளை வழங்குவதற்காக இலக்கங்களை (குறிப்பாக கட்டைவிரல்களை) சார்ந்திருக்கும் கையால் இயக்கப்படும் ஒரு பொதுவான விளையாட்டு கட்டுப்பாட்டு சாதனமாகும்.
  • கேம் கண்ட்ரோலர் - சில குறிப்பிட்ட விளையாட்டுகளின் உபயோகத்துக்கான குறிப்பிடத்தக்க வகையிலான் கட்டுப்பாட்டு சாதனம்.
 • பிம்பம், வீடியோ உள்ளீட்டு சாதனங்கள்
  • இமேஜ் ஸ்கேனர் - படங்கள், அச்சு எழுத்துக்கள், கையெழுத்துக்கள் அல்லது பொருளை அலசி ஆராய்ந்து உள்ளீடாக வழங்கும் சாதனம்.
  • வெப்கேம்- பார்வைக்குரிய உள்ளீட்டை சுலபமாக இணையத்தில் கடத்தும் தன்மைக்கொண்ட குறைந்த தெளிவுத்திறனுடைய வீடியோ கேமிரா.
 • ஆடியோ உள்ளீட்டு சாதனங்கள்
  • மைக்ரோபோன் - ஒலியை மின்னணு சமிக்கைகளாக சிக்னல்களாக மாற்றுவதன் மூலம் உள்ளீடுகளை வழங்கக்கூடிய அக்கொஸ்டிக் சென்சார் சாதனமாகும்.
  • மைக்- ஆடியோ சமிக்கைகளை மின்னணு சமிக்கையாக மாற்றும்.

வெளியீடுகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணினி_வன்பொருள்&oldid=2440596" இருந்து மீள்விக்கப்பட்டது