எண்ணுண்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண்ணுண்மி அல்லது பைட்டு அல்லது பைட் அல்லது பைற் (Byte) என்பது தகவல் தொழில்நுட்பத்தில் 8 பிட்டுகள் கொண்ட ஓர் அலகு ஆகும். கணினியின் ஆரம்பகாலம் முதல் பைட்டு ஒரு தனி எழுத்தை குறி ஏற்ற பயன்பட்டு வருகிறது. இதனால் கணினி கட்டுமான அடிப்படை பதிவகத்தின் அடிப்படை அலகாக இது பயன்பட்டு வருகிறது.

பைட்டு ஆனது எப்பொதுமே கணினி வன்பொருளின் மீது தங்கி உள்ளது, இதற்கென ஒரு வரையறுக்கப்பட்ட ஓர் அளவு இல்லை. பயன்பாட்டுக்கு இலகுவாக 8 பிட்டுக்களை ஒரு பைட்டு ஆக கொள்வதனால், இரண்டின் அடுக்குகளான 0 இலிருந்து 255 வரை பைட்டாக கொள்ளக்கூடியதாக உள்ளது. நுண்செயலக வடிவமைப்பளர்கள் பைட்டிலுள்ள பிட்டுக்களின் எண்ணிக்கையை தத்தமது கணினி கட்டுமானத்திற்கேற்ப வடிவமைத்து வந்தாலும் பெரும்பாலான பிரபல்யமான கணினி கட்டுமானங்கள் 8 பிட்டுக்களையே பைட்டுக்களாக பாவித்து வருகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணுண்மி&oldid=3366581" இருந்து மீள்விக்கப்பட்டது