எஜின் ஹோரோ பேனர் என்பது சீனாவின் உள் மங்கோலியா மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியில் ஓர்டோஸ் நகரத்தில் அமைந்துள்ள ஒரு பகுதி ஆகும். இது எஜின் ஹோரோ கி அல்லது இஜின்ஹுவோலுவோ கவுண்டி என்றும் அழைக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு நிலவரப்படி இதன் பரப்பளவு 5,600 சதுர கிலோமீட்டர் ஆகும். இதன் மக்கள் தொகை 1,60,000 ஆகும். அம்மக்களில் பெரும்பாலானவர்கள் ஹான் சீனர்கள் ஆவர்.[1]
சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் காரணமாக கடந்த சில வருடங்களில் எஜின் ஹோரோ பேனர் பகுதியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சாலைகள், போக்குவரத்து மையங்கள் மற்றும், பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன அல்லது தரப்படுத்தப்பட்டுள்ளன.[2] இங்குதான் செங்கிஸ்கானின் கல்லறை அமைந்துள்ளது. அது ஒரு AAAAA-தர சுற்றுலா தலம் ஆகும். [a] ஆனால் இங்கு செங்கிஸ்கானின் உடல் பாதுகாக்கப்படவில்லை. பண்பாட்டுப் புரட்சிக்குப் பிறகு செங்கிஸ்கான் வாழ்க்கையுடன் தொடர்புடைய பொருட்களும் இங்கு இல்லாமல் போய்விட்டன. ஆனால் மங்கோலிய மதத்தில் முக்கியமான வழிபடும் தலமாக இந்த இடம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
↑"Archived copy" 中国民政部-行政区划网 [Ministry of Civil Affairs - Administrative Division Network] (in சீனம்). Archived from the original on 2 December 2010. பார்க்கப்பட்ட நாள் 19 January 2011.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)