எச்ஏஎல் இலகுரக போர் உலங்கு வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலகுரக போர் உலங்கு வானூர்தி
HAL LCH TD-1.JPG
வகை தாக்கும் உலங்கு வானூர்தி
National origin இந்தியா
உற்பத்தியாளர் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
முதல் பயணம் 29 மார்ச் 2010
தற்போதைய நிலை மேம்பாட்டில் உள்ளது (சோதனை ஓட்டம்)
பயன்பாட்டாளர்கள் இந்திய இராணுவம்
இந்திய வான்படை
உற்பத்தி 2010–present
முன்னோடி எச்ஏஎல் துருவ்

எச்ஏஎல் இலகுரக போர் உலங்கு வானூர்தி (HAL Light Combat Helicopter) என்பது பல்பணி போர் உலங்கு வானூர்தி ஆகும். இது இந்தியாவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் இந்திய இராணுவம் மற்றும் இந்திய வான்படையினரின் உபயோகத்திற்காக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உருவாக்கம்[தொகு]

ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட மி-35ன் செயல்பாடுகள் அதிக உயரமுள்ள போர்க்களப் பகுதிகளான கார்கில் போன்ற இடங்களில் தோல்வி அடைந்ததாலும், திருப்திகரமாக இல்லாததாலும், இது போன்ற செயல்பாடுகளுக்காக ஒரு தாக்கும் உலங்கு வானூர்தியின் தேவையை உருவாக்கியது எனலாம். இந்த புதிய உலங்கு வானூர்தியின் முதன்மை தேவையாக மிக அதிக பறப்புயர்வு எல்லையை (service ceiling) கொண்டுள்ளது.

2006ல் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இலகுரக உலங்கு வானூர்தி உருவாக்கத்திற்கான அதன் திட்டத்தை அறிவித்தது. இந்திய இராணுவம் மற்றும் இந்திய வான்படையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான இலகுரக உலங்கு வானூர்தியின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கான நிதி அக்டோபர் 2006ல் வழங்கப்பட்டது. தற்போதைய வடிவமைப்பில் இந்த உலங்கு வானூர்தி 6500மீ பறப்புயர்வு எல்லையை கொண்டது.[1]

இந்த இலகுர உலங்கு வானூர்தியின் வடிவமைப்பு இந்திய ஆயுதப் படைகளில் உள்ள எச்ஏஎல் துருவ் வடிவமைப்பிலிருந்து பெறப்பட்டதாகும். இந்திய வான்படை 65 உலங்கு வானூர்திகளையும், இந்திய இராணுவம் 114 உலங்கு வானூர்திகளையும் வாங்கவிருக்கிறது.[2].

5.5 டன் எடையுள்ள இந்த இலகுரக போர் உலங்கு வானூர்தி 2012-2013க்குள் இந்திய வான்படையில் செயல்பாட்டுக்கு வரும் எனக் கருதப்படுகிறது..[3]

இந்த இலகுர போர் உலங்கு வானூர்தியின் முதல் மாதிரி வடிவம் 4 பெப்ரவரி 2010 அன்று முதல் தரை ஓட்டத்தை முடித்தது.[4] இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்தய வான்படையிடம் இருந்து 65 ஒப்பந்தங்களையும், இந்திய இராணுவத்திடம் இருந்து 114 ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளது. [5]

பயன்படுத்துபவர்கள்[தொகு]

LCH TD2
 இந்தியா

விவரக்குறிப்புகள்[தொகு]

Data from Globalsecurity[7]

பொதுவான அம்சங்கள்

செயல்திறன்

ஆயுதங்கள்

மேற்கோள்கள்[தொகு]