எக்ரா கோட்டைச் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எக்ரா கோட்டைச் சண்டை
நார்வே போர்த்தொடரின் பகுதி
Hegra Fortress - surrender 5 May 1940.jpg
சரணடைந்த எக்ரா பாதுகாவலர்கள் போர்க்கைதிகளாக
நாள் ஏப்ரல் 15 - மே 5, 1940
இடம் எக்ரா, நார்வே
ஜெர்மானிய வெற்றி
எக்ரா கோட்டை சரணடைந்தது.[1]
பிரிவினர்
 நோர்வே  நாட்சி ஜெர்மனி
இழப்புகள்
6 பேர் கொல்லப்பட்டனர்
14 பேர் காயமடைந்தனர்[2]
191 பேர் போர்க்கைதிகளாயினர்[3]

எக்ரா கோட்டைச் சண்டை (Battle of Hegra Fortress) இரண்டாம் உலகப் போரின் போது நார்வேயில் நிகழ்ந்த ஒரு முற்றுகைச் சண்டை. நார்வே போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நார்வேயின் எக்ரா கோட்டையை இருபத்தி ஐந்து நாள் முற்றுகைக்குப் பின்னர் ஜெர்மானியப் படைகள் கைப்பற்றின.

ஏப்ரல் 9, 1940ல் நார்வே மீதான ஜெர்மானியப் படையெடுப்பு தொடங்கியது. கடல்வழியாகவும், வான்வழியாகவும் நார்வே மீது ஜெர்மானியப் படைகள் தாக்குதல் தொடுத்தன. தெற்கு நார்வேயின் முக்கிய நகரங்களான ஓஸ்லோ, பேர்கன், துரோன்ஹெய்ம் ஆகிய நகரங்களை ஜெர்மானியப் படைகள் விரைவில் கைப்பற்றின. தெற்கு நார்வேயின் பெரும் பகுதிகள் ஜெர்மானியர் வசமானபின்னரும் எக்ரா கோட்டையில் சுமார் 250 பேர் அடங்கிய நார்வீஜிய தன்னார்வலர் படைப்பிரிவொன்று தொடர்ந்து போரிட்டு வந்தது. ஏப்ரல் 15 முதல் மே 5ம் தேதி வரை ஜெர்மானியர்கள் இதனை முற்றுகையிட்டுத் தாக்கினர். ஆனால் எக்ரா கோட்டையைக் கைப்பற்ற இயலவில்லை. மே முதல் வாரத்தில் நார்வீஜியப் படைகளும், அவற்றுக்குத் துணையாக நார்வேக்கு வந்திருந்த நேச நாட்டுப் படைகளும் வடக்கு நார்வேக்கு பின்வாங்கிவிட்டன. இதன் பின் ஜெர்மானியரை எதிர்ப்பதால் பலன் இல்லை என்பதை உணர்ந்த எக்ராவின் பாதுகாவலர்கள் மே 5ம் தேதி ஜெர்மானியர்களிடம் சரணடைந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nissen, Hans (2007). "Hegra Festning" (Norwegian). Historisk kilde- og kunnskapsbase for Trøndelag. Sør-Trøndelag County Municipality, Trondheim municipality and the Norwegian Archive, Library and Museum Authority. பார்த்த நாள் 5 April 2010.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Mil.no என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. Soldat 1985: 39
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்ரா_கோட்டைச்_சண்டை&oldid=2202089" இருந்து மீள்விக்கப்பட்டது