இரண்டாம் உலகப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இரண்டாவது உலகப் போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரண்டாம் உலகப்போர்
Alliances during the Second World War
இரண்டாம் உலகப் போரின் கூட்டணிகள். அடர் பச்சை: பேர்ல் துறைமுகத் தாக்குதலுக்கு முன்னரான நேச நாடுகள்; இளம் பச்சை: பேர்ல் துறைமுகத் தாக்குதலுக்குப் பின் நேசநாடுகளாக இணைந்தவை; நீலம்: அச்சு அணி; சாம்பல்: நடுநிலை நாடுகள்.
நாள் செப்டம்பர் 1, 1939செப்டம்பர் 2, 1945
இடம் ஐரோப்பா, பசிபிக், தெற்கு-கிழக்கு ஆசியா, சீனா, மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல், ஆப்பிரிக்கா
நேச நாடுகள் வெற்றி. ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கம். ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் உலக வல்லரசுகளாக வளர்ச்சி.ஐரோப்பாவின் பனிப் போருக்கான ஏதுநிலைகள் உருவாயின.
பிரிவினர்
நேச நாடுகள் அச்சு நாடுகள்
தளபதிகள், தலைவர்கள்
நேச நாட்டுத் தலைவர்கள் அச்சு நாட்டுத் தலைவர்கள்
இழப்புகள்
படைத்துறைச் சாவு:
14,000,000க்கும் மேல்
பொதுமக்கள் சாவு:
36,000,000க்கும் மேல்
மொத்தச் சாவு:
50,000,000க்கும் மேல்
...மேலதிக தகவல்கள்.
படைத்துறைச் சாவு:
8,000,000க்கும் மேல்
பொதுமக்கள் சாவு:
4,000,000க்கும் மேல்
மொத்தச் சாவு:
12,000,000க்கும் மேல்
...மேலதிக தகவல்கள்.
சீனப்படை(மேற்புறம்:இடது);ஆத்திரேலியப்படை(மேற்புறம்:வலது)
'ஸ்டாலின்கிரேடு' போர்களம்(நடு:இடது)
செருமானிய குண்டு விமானங்கள்(நடு:வலது)
செருமனிய சரணடை ஒப்பந்தம்(கீழ்:இடது)
அமெரிக்கப் போர்கப்பல்கள்(கீழ்:வலது)

இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப் போர் 2 (Second World War) என்பது 1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போர். இதில் அனைத்து பெரும் அரசுகள் (great powers) உள்பட உலக நாடுகளுள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் ஈடுபட்டன. இவை அச்சு நாடுகள், நேச நாடுகள் என இரு பெரும் தரப்புகளாகப் பிரிந்திருந்தன. உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இப்போர் நடைபெற்றது. ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் இதில் பங்கு கொண்டனர். ஒட்டுமொத்த போர் என்னும் கோட்பாட்டிற்கு இணங்க, இப்போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களது ஒட்டுமொத்த பொருளாதார, உற்பத்தி, தொழில், படைத்துறை மற்றும் அறிவியல் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழிக்க முயன்றன. இதனால் இராணுவ மற்றும் குடிசார் வளங்களுக் கிடையேயான வேறுபாடு மறைந்து போனது. பெரும் இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் உயிரிழப்பு நிகழ்வுகள் நடந்த இப்போரே வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய போராகும்.[1]

செப்டம்பர் 1, 1939ல் நாசி ஜெர்மனியின் போலந்து படையெடுப்புடன் இப்போர் துவங்கியதாகப் பொதுவாக வரலாற்றாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு புறம் பிரிட்டன் அதன் பேரரசில் இடம் பெற்றிருந்த நாடுகள் பிரான்சு ஆகியவை நேச நாட்டு அணியிலிருந்தன. மறுபுறம் நாசி ஜெர்மனி மற்றும் பாசிச இத்தாலி ஆகியவை சேர்ந்து அச்சு அணியை உருவாக்கின. 1939–41ல் அச்சுப் படைகள் மேற்கு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றின. பிரிட்டன் மட்டும் அவற்றின் பிடியிலிருந்து தப்பியது. பின் வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்ற அச்சுப் படைகள் முயன்றன. ஜூன் 1941ல் அச்சுப் படைகள் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்ததால் சோவியத் ஒன்றியம் நேச நாட்டு அணியில் இணைந்தது. 1930களின் துவக்கத்திலிருந்து சீனா மீது போர் தொடுத்து அதன் பல பகுதிகளைக் ஆக்கிரமித்திருந்த சப்பானியப் பேரரசும் அச்சு அணியில் இணைந்தது.

டிசம்பர் 1941ல் ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கியதன் மூலம் சப்பான் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது. அதுவரை நேச நாடுகளுக்குத் தளவாட வழங்கலை மட்டும் செய்து வந்த அமெரிக்காவும் போரில் நேரடியாக ஈடுபட்டது. சப்பானியப் படைகள் விரைவில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி இந்தியாவின் கிழக்கெல்லை வரை முன்னேறி விட்டன. 1942 வரை அச்சு நாடுகளுக்குச் சாதகமாக இருந்த போர் நிலவரம் அவ்வாண்டு நேரெதிரானது. ஐரோப்பாவின் கிழக்கு முனையில் அச்சு நாட்டு முன்னேற்றம் சோவியத் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. வடக்கு ஆப்பிரிக்காவிலும் அச்சுப் படைகள் முறியடிக்கப்பட்டு பின்வாங்கின. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கப் படைகள் நேச நாட்டு படைகள் இழந்த பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றத் தொடங்கின. 1943ல் இத்தாலி மீது நேச நாட்டுப் படைகள் படையெடுத்தன; விரைவில் அந்நாடு சரணடைந்தது. 1944ல் மேற்கு ஐரோப்பாவை மீட்க நேச நாட்டுப் படைகள் கடல் வழியாகப் படையெடுத்தன. கிழக்கில் சோவியத் படைகளாலும் மேற்கில் பிரிட்டானிய, அமெரிக்க, பிரெஞ்சுப் படைகளாலும் தாக்கப்பட்ட ஜெர்மனி ஈராண்டுகளுக்குள்ளாகத் தோற்கடிக்கப்பட்டது. மே 1945ல் ஜெர்மனியின் சரணடைவுடன் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. 1943-45 காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றிச் சப்பானியத் தாயகத் தீவுகளை நோக்கி முன்னேறிய அமெரிக்கா, ஆகஸ்ட் 1945ல் சப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள்மீது அணு குண்டுகளை வீசியது. இதன் விளைவாகச் சப்பான் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.

இப்போரின் விளைவாக உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய பேரரசுகள் தங்கள் வல்லமையை இழந்தன; ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காலனிமயமழித்தல் தொடங்கியது. அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகின் புதிய வல்லரசுகளாகின; அவற்றுக்கிடையே பனிப்போர் துவங்கியது. உலக அமைதிக்காகச் செயல்பட ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது.

கால கட்டம்[தொகு]

இரண்டாம் உலகப் போரின் தொடக்கமாகப் போலந்தின் மீதான ஜெர்மன் படையெடுப்பு நடந்த செப்டம்பர் 1, 1939ம் ஆண்டு கருதப்படுகிறது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஜெர்மனி மீது போரை அறிவித்தன. பலர் போரின் தொடக்கமாக இரண்டாம் சீன-ஜப்பானிய போர் தொடங்கிய ஜூலை 7, 1937 நாளைக் குறிப்பிடுகின்றனர்.[2]

ஆங்கில வரலாற்றாசிரியர் ஏ.ஜே.பி. டெய்லர் (A.J.P. Taylor) கூற்றுப்படி, கிழக்காசியாவின் சீன-ஜப்பானிய போரும், ஐரோப்பிய மற்றும் அதன் காலனி நாடுகளை உள்ளடக்கிய இரண்டாம் ஐரோப்பிய போரும் தனித்தனியாக நடைபெற்று வந்தது. இந்த இரண்டு போர்களும் 1941ல் இணைந்து உலகளாவிய போராக உருவெடுத்து 1945 வரை தொடர்ந்தது.

இரண்டாம் உலகப்போரின் இறுதி நாள்குறித்து ஒத்த கருத்து எதுவும் எட்டப்படவில்லை. இரண்டாம் உலகப்போர், ஜப்பான் வீழ்ந்த, ஆகஸ்ட் 14, 1945 அன்று முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டாலும் ஜப்பான் செப்டம்பர் 2, 1945 அன்றுதான் அதிகாரப்பூர்வமாகச் சரணடைந்தது. சில ஐரோப்பிய வரலாற்று நூல்கள் ஜெர்மனி தோல்வியடைந்த, மே 8, 1945ம் நாளைக் குறிப்பிடுகின்றன. எனினும் ஜப்பான் உடனான நேச நாடுகளின் அமைதி ஒப்பந்தம் 1951ல்தான் கையெழுத்தானது.[3] அவ்வாறே செருமனியுடன் இறுதி தீர்வு ஒப்பந்தம் 1990 வரை மேற்கொள்ளப்படவில்லை.[4]

போரின் பின்னணி[தொகு]

முதல் உலகப்போரில் மைய சக்தி நாடுகளான ஆஸ்திரிய-ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சி, ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் மற்றும் ராஜதந்திர நிலவரங்களை வெகுவாக மாற்றியது. 1917ல் ரஷ்ய பொதுவுடைமைக் கட்சியின் போல்ஷெவிக் பிரிவு ரஷ்யாவில் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கிடையில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, செர்பியா, மற்றும் ருமேனியா ஆகிய நேச நாடுகளின் வெற்றி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி மற்றும் ரஷ்ய பேரரசின் சரிவால் உருவான புதிய நாடுகள் ஆகியவை கிழக்கு ஐரோப்பாவின் வரைபடத்தில் பெரிய மாற்றங்களை உண்டாக்கின. போருக்குப் பிறகு ஐரோப்பாவில் அமைதியின்மை நிலவியது. வெர்சாய் உடன்படிக்கையின்படி, ஜெர்மனி பொருளாதார, பிராந்திய மற்றும் காலனியாதிக்க ரீதியாக நிறைய இழப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஜெர்மனி தனது நிலப்பரப்பில் பதின்மூன்று சதவீதத்தையும் தனது அனைத்து காலனிகளையும் இழந்தது. மேலும் ஜெர்மனி மீது ராணுவ ரீதியான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கிடையில் ரஷ்ய உள்நாட்டு போரின் விளைவாகச் சோவியத் யூனியன் உருவாகியது. 1924ல் லெனினின் மரணத்திற்கு பிறகு சோவியத் யூனியனின் அதிகாரத்திற்கு வந்த ஜோசப் ஸ்டாலின், புதிய பொருளாதார கொள்கைகளுக்குப் பதிலாக ஐந்தாண்டுத் திட்டங்களை அமல்படுத்த தொடங்கினார்.

ஜெர்மன் பேரரசு 1918–19 ஜெர்மன் புரட்சியில் கலைக்கப்பட்டு, ஒரு ஜனநாயக அரசு உருவானது. போர்களுக்கு இடையிலான காலத்தில், ஜெர்மனி தேசியவாதிகள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் இடையே உள்நாட்டு மோதல்கள் ஏற்பட்டது. இதே போன்ற நிலைமை இத்தாலியிலும் உருவானது. நேச நாடுகளின் அணியிலிருந்து இத்தாலி சில பிராந்திய வெற்றியை அடைந்தது என்றாலும், இத்தாலிய தேசியவாதிகள் இலண்டன் உடன்படிக்கை மீது கோபம் கொண்டிருந்தனர். 1922 முதல் 1925 வரை, பெனிட்டோ முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிச இயக்கம் புதிய ரோமானிய பேரரசை உருவாக்கும் உறுதியுடன் அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஜெர்மனியில், அடோல்ப் ஹிட்லர் தலைமையிலான நாட்சி கட்சி ஆட்சியைப் பிடித்து, 1933 இல், ஹிட்லர் அதிபர் ஆனார்.

சீனாவில் குவோமின்டாங் கட்சி 1920களில் சீன ஒருங்கிணைப்புக்கான ராணுவ நடவடிக்கையைக் குறுநில மன்னர்களுக்கு எதிராகத் தொடங்கியது. ஆனால் விரைவிலேயே அதன் முன்னாள் சீன கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு எதிராக உள்நாட்டு போரில் இறங்கியது. நீண்ட நாட்களாகச் சீனாவை ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் இருந்த ஜப்பான், 1931ல், மஞ்சூரியன் சம்பவத்தைக் காரணமாக வைத்து மஞ்சூரியாவை ஆக்கிரமித்து மஞ்சுகோ என்று அழைக்கப்பட்ட பொம்மை அரசாங்கத்தை நிறுவியது. ஜப்பானை எதிர்க்க வலு இல்லாத சீனா, உலக நாடுகள் சங்கத்திடம் உதவி கோரியது. உலக நாடுகள் சங்கம் ஜப்பானை மஞ்சூரிய ஆக்கிரமிப்புக்காகக் கண்டித்தது. அதனால் ஜப்பான், உலக நாடுகள் சங்கத்திலிருந்து விலகியது. பின்னர் இரண்டு நாடுகளும் 1933ல் Tanggu போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திடும் வரை, ஷாங்காய், ரேஹே மற்றும் ஹெபெய் பகுதிகளில் பல சிறு மோதல்களில் இறங்கின. அதன் பின்னரும் சீன தன்னார்வ படைகள் மஞ்சூரியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்தன.

அடால்ஃப் ஹிட்லர், 1923ல் ஜெர்மன் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, 1933ல் ஜெர்மனின் அதிபர் ஆனார். அவர் சனநாயகத்தை ஒழித்து நாஜிக்கொள்கையை அறிமுகப்படுத்தினார். அதோடு வெர்சாய் உடன்படிக்கையை மீறும் விதமாக ராணுவ சீர்திருத்த நடவடிக்கைகளையும் ஆயுத கொள்வனவுகளையும் செய்யத் தொடங்கினார். இதற்கிடையில் பிரான்ஸ், இத்தாலியுடன் கூட்டணி வைக்கும் எண்ணத்துடன், இத்தாலிக்கு எதியோப்பியா மீதான காலனி ஆக்கிரமிப்பை அனுமதித்தது. 1935ல், ஜெர்மனி சார் பேசின் பகுதியை சட்டபூர்வமாகத் தன்னுடன் இணைத்துக் கொண்டதால் நிலைமை இன்னும் மோசமடைந்தது.

ஜெர்மனி கட்டுப்படுத்த நினைத்த, ஐக்கிய ராஜ்யம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகள் Stresa முன்னணி அமைப்பை உருவாக்கின. கிழக்கு ஐரோப்பாவின் பரந்த பகுதிகளைக் கைப்பற்றும் ஜெர்மனியின் நோக்கங்களால் கவலையடைந்த சோவியத் யூனியன், பிரான்ஸ் உடன் பரஸ்பர உதவி ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் முன்பாக, உலக நாடுகள் சங்கத்தின் ஒப்புதலுக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவ்வளவாகப் பயன் தராமல் போனது. எனினும், ஜூன் 1935 ல், ஐக்கிய ராஜ்யம் ஜெர்மனி உடன் ஒரு சுயாதீன கடற்படை ஒப்பந்தம் செய்து, சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. ஐரோப்பா மற்றும் ஆசிய நிகழ்வுகளை பற்றிக் கவலை கொண்ட அமெரிக்கா, ஆகஸ்ட் மாதம் நடுநிலைத்தன்மை சட்டத்தை நிறைவேற்றியது. அக்டோபர் மாதம், இத்தாலி எத்தியோப்பியா மீது படையெடுத்தது. இந்தப் படையெடுப்புக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்ததால் அதற்குப் பிரதி பலனாக இத்தாலி, ஜெர்மனியின் ஆஸ்திரிய ஆக்கிரமிப்பு நோக்கத்தின் மீதான ஆட்சேபணைகளை திரும்பப் பெற்றது.

ஹிட்லர் வெர்சாய் மற்றும் லோகர்னோ உடன்படிக்கையை மீறி Rhineland பகுதியில் ராணுவத்தை குவித்தார். இதற்கு மற்ற ஐரோப்பிய வல்லரசுகளிடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்பு வரவில்லை. ஜூலையில் ஸ்பெயின் உள்நாட்டு போர் தொடங்கிய போது, ஹிட்லரும் முசோலினியும் "பாசிச தேசியவாத படைகளையும்", சோவியத் யூனியன் ஸ்பானிய குடியரசையும் ஆதரித்தன. இரண்டு தரப்புமே இந்த சண்டையைத் தங்களது புதிய ஆயுதங்களையும் போர் தந்திரங்களையும் பரிசோதிக்கப் பயன்படுத்தி கொண்டன. 1939 ஆம் ஆண்டு தேசியவாதப்படைகள் போரை வென்றன. அக்டோபர் 1936 இல், ஜெர்மனியும் இத்தாலியும் அச்சு நாடுகள் அமைப்பை உருவாக்கின. ஒரு மாதம் கழித்து, ஜெர்மனியும் ஜப்பானும் அனைத்துலக பொதுவுடைமை இயக்க எதிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒரு வருடம் கழித்து இத்தாலியும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தது. சீனாவில் Xi'an சம்பவத்திற்கு பிறகு குவோமின்டாங் மற்றும் கம்யூனிச படைகள் ஜப்பானை எதிர்த்து ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கும் பொருட்டு யுத்த நிறுத்தத்தை அறிவித்தன.

போருக்கு முந்தைய நிகழ்வுகள்[தொகு]

இத்தாலியின் எத்தியோப்பிய ஆக்கிரமிப்பு[தொகு]

இரண்டாம் இத்தாலிய-அபிசீனிய போர், அக்டோபர் 1935 ல் தொடங்கி மே 1936 இல் முடிவடைந்த ஒரு சுருக்கமான காலனித்துவ போர். இந்தப் போர் இத்தாலிய பேரரசின் ஆயுதப்படைகளுக்கும் எத்தியோப்பிய பேரரசின் (அபிசீனியா) ஆயுதப்படைகளுக்கும் இடையே நடந்தது. போரின் முடிவில் இத்தாலி வெற்றி பெற்று எத்தியோப்பியாவில் தனது காலனியை நிறுவியது. இதனால் எத்தியோப்பியா கிழக்கு ஆப்பிரிக்க இத்தாலியில் இணைக்கப்பட்டது. இந்தப் போர் உலக நாடுகள் அமைப்பு அமைதியை நிலை நாட்டும் ஒரு வலுவான அமைப்பாக இல்லை என்பதை வெளிப்படுத்தியது. இத்தாலியும் எத்தியோப்பியாவும் உலக நாடுகள் அமைப்பின் அங்கத்தினர்களாக இருந்த போதிலும் அந்த அமைப்பு இத்தாலியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஸ்பானிய உள்நாட்டு போர்[தொகு]

ஸ்பானிய உள்நாட்டு போர், 1 ஏப்ரல் 1939 முதல் 17 ஜூலை 1939 வரை ஸ்பெயினில் நடந்த பெரிய உள்நாட்டு போர். ஜெர்மனி மற்றும் இத்தாலி, கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையிலான தேசியவாத படைகளுக்கு ஆதரவு கொடுத்தன. சோவியத் யூனியன் தனது ஆதரவை இடதுசாரி சிந்தனை உடைய அங்கு ஏற்கனவே ஆட்சியில் இருந்த ஸ்பானிய குடியரசுக்குக் கொடுத்தது. ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் இந்த சண்டையைத் தங்களது புதிய ஆயுதங்களையும் போர் தந்திரங்களையும் பரிசோதிக்கப் பயன்படுத்தி கொண்டன. ஜெர்மனியின் கொண்டோர் லீஜியன் திட்டமிட்டு நிகழ்த்திய ஜெர்னீகா குண்டுவீச்சு அடுத்த பெரிய போர் பொதுமக்கள்மீது பயங்கரவாத குண்டு தாக்குதல்களை உள்ளடக்கலாம் என்ற பரவலான கவலைகளுக்குப் பங்களித்தது.

ஜப்பானின் சீன ஆக்கிரமிப்பு[தொகு]

ஜூலை 1937ல், ஜப்பான், மார்கோ போலோ பாலம் சம்பவம் நடந்த பிறகு, சீனாவின் முந்தைய தலை நகரான பெய்ஜிங்கை கைப்பற்றியது. இந்தச் சம்பவம் ஜப்பான் முழுமையான சீன ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வித்திட்டது. இந்த நேரத்தில் விரைவாகச் செயல்பட்ட சோவியத், சீனாவுக்கு தளவாடங்கள் வழங்கி உதவி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் சீன – ஜெர்மனி ஒத்துழைப்பு (1911–1941) முடிவுக்கு வந்தது. சீனப் போர்ப்படை தளபதி சங் கை செக் ஷாங்காய் நகரத்தைப் பாதுகாக்க ஜெர்மனியால் பயிற்றுவிக்கப்பட்ட தனது சிறந்த படைபிரிவை பயன்படுத்தியும் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஷாங்காய் நகரம் ஜப்பானியர்கள் வசம் வீழ்ந்தது. ஜப்பானிய படைகள் சீனப்படைகளை பின்தள்ளி முன்னேறி டிசம்பர் 1937ல் தலைநகர் நாஞ்சிங்கை கைப்பற்றின. இதன்பின் நடந்த நாஞ்சிங் படுகொலை சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் சரணடைந்த சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான சீனப்பெண்கள் ஜப்பானிய ராணுவ வீரர்களால் கற்பழிக்கப்பட்டனர்.

ஜூன் 1938ல், சீன படைகள் ஜப்பானிய படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்க மஞ்சள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தின. இதன் மூலம் சீனப்படையினருக்கு வுஹன் (Wuhan) நகரத்தில் தற்காப்பு முயற்சிகள் எடுக்கச் சிறிது நேரம் கிடைத்தது. ஆனாலும் வுஹன் நகரம் அக்டோபர் மாதத்தில் ஜப்பானிய படையினரிடம் வீழ்ந்தது. ஜப்பானியர்கள் எதிர்பார்த்தது போல் இந்த வெற்றிகளால் சீனர்களின் எதிர்ப்பை முறியடிக்க முடியவில்லை. சீன அரசாங்கம் தனது இருப்பிடத்தை நாட்டின் உட்பகுதிக்கு மாற்றி அங்கிருந்து போரைத் தொடர்ந்தது.

ஜப்பானின் சோவியத் யூனியன் மற்றும் மங்கோலிய ஆக்கிரமிப்பு[தொகு]

1938 ம் ஆண்டு ஜூலை 29 அன்று, ஜப்பானிய படைகள் சோவியத் ஒன்றியத்தில் நுழைந்ததும் காசன் ஏரிப்போர் மூண்டது. இந்தச் சண்டையில் சோவியத் வெற்றி அடைந்தாலும் ஜப்பான் போரின் முடிவைத் தோல்வி என்று ஒப்புக்கொள்ளவில்லை. இதற்குப் பின்னும் ஜப்பானிய-மங்கோலியன் எல்லையை விரிவாக்க 11 மே 1939 அன்று கல்கின் கோல் நதிப்போரை தொடங்கியது. ஜப்பானிய தாக்குதல் முதலில் சிறிது வெற்றி அடைந்தாலும் பின் சோவியத் படைகளிடம் ஜப்பானிய படைகள் பெரிய தோல்வியைத் தழுவின.

இந்த மோதல்களின் முடிவுகளால் ஜப்பானிய அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் சீனப்போரில் சோவியத் ஒன்றியத்தின் தலையீட்டை தவிர்க்கச் சோவியத் ஒன்றியத்துடன் சமாதானமாகச் செல்ல வேண்டும் என்று கருதத் தொடங்கினர். அதற்குப் பதிலாக அவர்கள் ஜப்பானிய அரசாங்கம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் கவனம் செலுத்த விரும்பினர்.

ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள்[தொகு]

ஐரோப்பாவில், ஜெர்மனியும் இத்தாலியும், பல வெளிப்படையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தன. மார்ச் 1938 இல், ஜெர்மனி ஆஸ்திரியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டது. ஆனாலும் பிற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து பெரிய அளவில் ஆட்சேபனைகள் எழவில்லை. இதனால் உந்தப்பட்ட ஹிட்லர் செக்கோஸ்லோவாக்கியாவின் ஜெர்மானியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியான சுதேண்டேன்லாந்துவை ஜெர்மனியின் ஒரு பகுதியாகக் கோர ஆரம்பித்தார். விரைவிலேயே பிரிட்டனும் பிரான்சும் செக்கோஸ்லோவாக்கியா அரசின் விருப்பத்திற்கு எதிராக இந்தப் பகுதியை ஜெர்மனுக்கு விட்டுக்கொடுத்தன. இதற்குப் பதிலாக ஜெர்மனியும் வேறெந்த நிலப்பகுதியின் மீதும் உரிமை கோரப்படாது என்று உறுதி அளித்தது. இதற்குப் பின்னும், ஜெர்மனியும் இத்தாலியும், செக்கோஸ்லோவாக்கியா தனது நிலப்பரப்பை ஹங்கேரிக்கும் போலந்திற்கும் விட்டுக் கொடுக்க வைத்தன. மார்ச் 1939 ல் ஜெர்மனி, செக்கோஸ்லோவாக்கியாவின் எஞ்சிய பகுதிகளை ஆக்கிரமித்தது. பின் நாட்டை இரண்டாகப் பிரித்து ஸ்லோவாக் குடியரசு எனும் பகுதியையும் பொஹிமியா மற்றும் மொராவியா பாதுகாக்கபட்ட பகுதியையும் உருவாக்கியது.

ஹிட்லர் டான்ஜிக் பகுதியின் மீது உரிமை கோர ஆரம்பித்தும் விழித்துக் கொண்ட பிரிட்டனும் பிரான்சும், போலந்தின் சுதந்திரத்திற்கு உதவி செய்வதாக உறுதி அளித்தன. இத்தாலி அல்பேனியாவை கைப்பற்றியதை தொடர்ந்து இதே உறுதி மொழி ருமேனியாவிற்கும் கிரீசுவிற்கும் அளிக்கப்பட்டது. போலந்திற்கு பிரிட்டன்-பிரெஞ்சு உறுதி மொழியைத் தொடர்ந்து ஜெர்மனியும் இத்தாலியும் நட்புறவு மற்றும் கூட்டணிக்கான இரும்பு ஒப்பந்தம் செய்து கொண்டன.

ஆகஸ்ட் 1939 இல், ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் தங்களின் மற்ற நாடுகளுடனான போர்களின் போது பரஸ்பரமாக நடுநிலை வகிக்கும் ரகசிய மொலோடோவ்-ரிப்பன்ட்ராப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான அரசியல் மற்றும் பிராந்திய உரிமைகளை வரையறுத்துக் கொண்டன. மேற்கு போலந்து (இரண்டாம் போலந்துக் குடியரசு) மற்றும் லித்துவேனியா மீது செல்வாக்கு செலுத்தும் உரிமை ஜெர்மனிக்கும் கிழக்கு போலந்து, பின்லாந்து, எசுத்தோனியா, லாத்வியா மற்றும் பெஸ்ஸரேபியா பகுதிகளின் மீதான உரிமை சோவியத் ஒன்றியத்துக்கும் கிடைத்தது. இதன் மூலம் போலந்து விடுதலை கேள்விக்குறியானது.

போரின் போக்கு[தொகு]

ஐரோப்பாவில் போர் வெடித்தது (1939–40)[தொகு]

செப்டம்பர் 1,1939ல், ஜெர்மனியும் ஸ்லோவாக் குடியரசும் போலந்து நாட்டின் மீது தாக்குதல் நடத்தின. செப்டம்பர் 3,1939ல், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் பொதுநலவாய நாடுகள் ஜெர்மனியின் மீது போர்ப் பிரகடனம் செய்தன. ஆனாலும் பிரான்ஸ் நடத்திய சிறிய அளவிலான சார் படையெடுப்பு தவிர போலந்திற்கு வேறு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பிரான்சும் பிரிட்டனும் ஜெர்மனியின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் போர் முயற்சிகளைக் கட்டுப்படுத்தவும் ஜெர்மனி மீது கடல் அடைப்பைத் தொடங்கின. செப்டம்பர் 17,1939ல் ஜப்பானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்ட சோவியத் ஒன்றியம் போலந்து நாட்டைத் தாக்கியது. இவ்வாறு ஜெர்மனி, சோவியத் ஒன்றியம், லிதுவேனியா மற்றும் ஸ்லோவாக் நாடுகளுக்கு இடையே போலந்து துண்டுகளாகச் சிதறினாலும், போலந்து நாட்டினர் சரணடைய மறுத்து நிழல் அரசாங்கத்தையும் புரட்சி படையையும் நிறுவி நேச நாடுகளுடன் இணைந்து தொடர்ந்து போரிட்டனர்.

மேற்கு ஐரோப்பாவில் (1940–41)[தொகு]

ஏப்ரல் 1940 இல், சுவீடனிலிருந்து செல்லும் இரும்புக்காகக் கப்பல் விநியோகத்தைப் பாதுகாக்கவும், இயற்கை நோர்வே நீரை எடுப்பதைத் தடுப்பதற்காக நேச நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கெதிராகவும் செருமனி வெசெரியூபங் நடவடிக்கைமூலம் டென்மார்க்கையும் நோர்வேயையும் ஆக்கிமித்தது.[5] டென்மார்க் உடனடியாகக் கீழ்ப்படிந்தது. நேச நாடுகளின் உதவியுடன் நார்வே போர்த்தொடர் மூலம் இரு மாதங்களுக்குச் சண்டையிட்ட நோர்வே செருமனியினால் வெற்றி கொள்ளப்பட்டது.[6]

மத்தியதரை (1940–41)[தொகு]

மத்தியதரையில் நடவடிக்கையைத் தொடங்கிய இத்தாலி முதற்கட்டமாகச் சூனில் மால்டாவை முற்றுகையிட்டது. பின்பு, ஆகஸ்த்தில் பிரித்தானிய சோமாலிலாந்துத்தை வெற்றி கொண்டு, செப்தம்பர் 1940 இல் பிரித்தானியாவின் வைத்திருந்த எகிப்து மீது இத்தாலி படையெடுத்தது. இட்லரின் வெற்றியைப் பார்த்துப் பொறாமை கொண்ட முசோலினியின் ஆசையால் ஒக்டோபர் 1940 இல், இத்தாலி கிரேக்கம் மீது போர் தொடுத்தது. ஆயினும் தாக்குதல் சில நாட்களில் பின்வாங்குதலுக்கு உள்ளாகி அல்பேனியா வரை இத்தாலியப் படைகள் பின்வாங்க நேரிட்டது.[7]

அச்சு நாடுகள் சோவியற் உரசியா மீது தாக்குதல் (1941)[தொகு]

செருமனிய காலாட்படை மற்றும் கவச வாகனங்கள் சோவியற் பாதுகாப்பாளர்களுடன் கார்க்கோவ் வீதிகளில் சண்டையிடுகின்றன, அக்டோபர் 1941.

ஒப்பீட்டளவில் ஐரோப்பா, ஆசியா சூழ்நிலை உறுதியாக இருக்கும்போது, செருமனி, சப்பான், சோவியத் உரசியா என்பன ஆயத்தங்களை மேற்கொண்டன. சோவியத்தின் செருமனியுடனான பதட்டம் அதிகரித்திருக்கையிலும், ஐரோப்பிய போரைச் சாதகமாக்கி தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஐரோப்பிய செல்வந்த வள உடைமைகளைக் கைப்பற்ற சப்பான் திட்டமிட்டிருக்கையிலும், 1941 ஏப்ரலில் சோவியற்–சப்பான் நடுநிலை ஓப்பந்தம் சோவியற்றுக்கும் சப்பானுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டன.[8] இத்தருணத்தில் செருனி சோவியற் ஒன்றியம்மீது தாக்குதல் நடத்த மறைவாக ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்து, சோவிற் எல்லையில் படைகளைக் குவித்துக் கொண்டிருந்தது.[9]

பசிபிக்கில் போர் வெடித்தது (1941)[தொகு]

1931ம் ஆண்டில் சீனாவின் மன்சூரியன் பகுதியைக் கைப்பற்றி "மன்சுகோ" எனும் பொம்மை அரசாங்கத்தை உருவாக்கியதன் மூலம் பசிபிக் பகுதியில் போரைத் துவங்கி வைத்தது. இதனால் புருட்டல் (Burutal) என்ற இடத்தில் போர் நடந்தது. அச்சு நாடுகளான இத்தாலி, செர்மனி, மற்றும் சப்பானும் 1940 செப்டம்பர் 27ல் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பசிபிக் கடல் பகுதியில் கிடைக்கும் இயற்கை வளங்களை அவகரித்துக்கொள்ள ஜப்பான் கனவு கண்டது.

1941 டிசம்பர் 7 அன்று அமெரிக்காவின் அவாய் தீவில் அமைந்துள்ள முத்து துறைமுகத்தைச் சப்பான் தனது போர் விமானங்களால் தாக்குதல் நடத்தியதால் அமெரிக்காவின் போர் கப்பல்களும், விமானங்களும் நாசமாகியது. இத்தீவை சூறையாடியதன் மூலம் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியதாகச் சப்பான் எண்ணியது. அமெரிக்கா தன்னை சுதாரித்துக் கொள்ளும் முன்னர் "இபா" விமானத்தளத்தையும் சூறையாடியது. இப்போதுதான் அமெரிக்கா செர்மனிக்கு எதிராகப் போர் தோடுக்க முடிவு செய்தது.

டிசம்பர் 1941ல் மேற்கு பசிபிக் கடல் பகுதியில் அமெரிக்காவின் இவான் மற்றும் வடக்கு பசிப்பிக்கில் அமைந்துள்ள வகெ தீவையும் கைப்பற்றியது. 1942 பாதியிலேயே அமெரிக்காவின் பிலிப்பைன்சு, டச்சுக் கிழக்கு இந்தியப் பகுதி, ஹாங்காங், மலேயா, சிங்கப்பூர், மற்றும் பர்மாவையும் கைப்பற்றியது. தாய்லாந்து நடுநிலை வகித்தது. 1942ல் இந்தோ-இங்கிலாங்து படைகள் இந்திய பகுதியிலும், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து படைகள் நியூ கினிப் பகுதியிலும் சப்பான் படைகளை எதிர்த்தன.

சாலமன் தீவில் நடந்த சண்டையால் அமெரிக்கா வெற்றியைத் தனதாக்கிக்கோண்டது.ஜப்பான் 43,000 படைவீரர்களைக் கொண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை கைப்பற்றியதால் அமெரிக்காவின் தளபதி மேக் ஆர்த்தர் ஆஸ்திரேலியாவிற்குத் தன் குடும்பத்துடன் தப்பி ஓடினார். 1944ல் மேக் ஆர்த்தர் பெரும்படையுடன் வந்து பிலிப்பைன்ஸை கைப்பற்றினார்.

1945 ஆகஸ்ட் 6 இல் காலை 7 மணிக்கு அமெரிக்காவின் பி-29 விமானம் சப்பானின் இரோசிமா மீது அணுகுண்டை வீசியது. இதனால் 78,000 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னரும் கதிர்வீச்சால் 12,000 பேர் மரணம் அடைந்தார்கள். மூன்று நாட்கள் கழித்து அமெரிக்கா – இங்கிலாந்து நாட்டவரால் தயாரிக்கப்பட்ட அணுக்குண்டை அமெரிக்கா சப்பானின் துறைமுக நகரமான நாகசாகி மீது வீசியது. இதனால் 38,000 பேர் மரணம் அடைந்தனர். 1945ல் ஆகஸ்ட் 15ல் சப்பான் சரணடைந்தது.

அச்சு நாடுகள் முன்னேற்றம் தடைபட்டது (1942–43)[தொகு]

நான்கு கவலர்களில் மூவரான சாங் கை ஷேக் (சீனா), பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட் (ஐக்கிய நாடுகள்), வின்சன்ட் சர்ச்சில் (ஐக்கிய இராச்சியம்), 1943 ல் கெய்ரோ மாநாட்டில் இரண்டாம் உலகப்போருக்காக சந்தித்தபொழுது

1941 ஜூலை மாதவாக்கில் ஜெர்மனி மின்னல் போர் முறையில் பக்கத்து நாடுகள் அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்துகொண்டது. ஜெர்மனியின் போர் விமானங்கள் குண்டு மழை பொழியும் ராணுவ வீரர்கள் பாராசூட் மூலம் குதித்து பொதுமக்களைத் துப்பாக்கியால் சரமாரியாக் சுடுவார்கள், என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளக்கூட அவகாசம் கொடுக்கமாட்டர்கள்.

போலந்து,டென்மார்க்,நார்வே, நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம்பர்க், பிரான்ஸ் பொன்ற ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் போர் துடங்கிய இரண்டு ஆண்டுகளில் ஜெர்மனி ஆக்கிரமிப்பு செய்துகொண்டது. நெடுநாட்கள் நடுநிலையில் இருந்த அமெரிக்கா போர் அரிவிக்காத்துவரை ஜெர்மனி வெற்றிக்கழிப்பில் இருந்தது. ஜெர்மனியின் அகங்காரம்,'ஹிட்லர்' தன்னுடன் ஒப்பந்ததில் கையெழுத்திட்ட மற்ற நாடுகளான ஜப்பானுடனும், இத்தாலியுடனும் தான் படையெடுக்கும் செய்தியைக்கூட தெரிவிப்பதில்லை,யூதர்களையும், எதிரிகளையும் கொடுமைப்படுத்துவதில் காட்டிய ஆர்வத்தில் பாதிகூட தன் சிப்பாய்களின் மீது கவனம் செலுத்தவில்லை. ரஷ்யாவின் மீது ஜெர்மனி படையடுத்தபோது அங்கு குளிர் காலம் துவங்கியிருந்தது. ஹிட்லர் தன் சிப்பாய்களுக்குக் கம்பளி போன்ற அத்தியாவசிய பொருட்களைக்கூட கொடுக்க மனம் இல்லை. தலைமை தளபதிகளாக இருந்தவர்கள் யார் சொல்லும் கேட்டு நடக்கும் நிலையில் இல்லை. ஜெர்மனி வீரர்களால் குளிரில் தன் மனதையும், உடலையும் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.

1942 முதல் 1943 வரை நடந்த ரஷ்யா ஜெர்மனி போரில் 25 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள் எனப் பிபிசி [BBC] தெறிவித்தது. 1943 ஜூலை 5ல் துவங்கிய போரிலிருந்து துவண்டுபோயிருந்த ரஷ்யா செப்டம்பர் 25-ல் சோவியத்தின் சுமுலினிக் (Smolensk) என்ற நகரையும், நவம்பர் 6-ல் கேவிஎ (Kive) என்ற நகரையும், 1944 ஜனவரி 27ல் லெனின் கிராட் நகரையும் ஜெர்மனியிடமிருந்து மீட்டது. பின்னர் ஆபரேசன் பேக்ரசன் (Bagration) மூலம் ஜெர்மனியை அதிரடியாகத் தாக்கியது. ஜூலை 22ல் மிட்ச்ஸ் நகரம் விடுவிக்கப்பட்டது. ஜூலை 24ல் போலந்தின் மக்டனக் நகரமும் ரஷ்யாவின் படைகள் கைப்பற்றியது. ஆகையால் அச்சு நாடுகளின் முன்னேற்றமும் தடைப்பட்டது, மற்றும் அவர்கள் கனவும் தகர்ந்தது.

நேச நாடுகள் முன்னேற்றம் (1943–44)[தொகு]

1943ம் ஆண்டு மே மாதம் கவுடால்கேனல் பிரச்சாரத்தின் (Guadalcanal Campaign) நேச படைகள் ஜப்பான் அணிக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதில் முதன்மையானது மே 1943ல் அலூசியன் தீவுகளில் (Aleutians) நேச படைகள் ஜப்பன் படைகள் அகற்ற அனுப்பப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகப் பசுப்பிக்கடல் பகுதில் இருந்த ரசுல் தீவுகள் (Rabaul), மார்சல் தீவுகள் (Marshall Islands), மேற்கு ஆஸ்திரேலியா அருகில் உள்ள கில்பர்ட் தீவுகள் (Gilbert Islands) போன்ற பல தீவுக்கூட்டங்களைக் கைப்பற்ற படைகள் விரைந்தன. 1944 மார்ச் இறுதியில் நேச நாடுகளின் நோக்கங்கள் நிறைவு பெற்றதுடன் கூடுதலாகக் கரோலின் தீவுகளும் கைப்பற்றப்பட்டது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கு நியூ கினி படையேடுப்பு துவங்கியது.

1943 கோடை மற்றும் வசந்த காலங்களில் மத்திய ரஷ்யாவில் பெரிய தாக்குதல்களுக்கு ஜேர்மனியர்கள் ஆயத்தமானார்கள். குர்ஷ்க் (Battle of Kursk) என்னும் இடத்தில் ஜூலை 1943 4 அன்று ஜெர்மன் படைகள் தாக்குதல் நடத்தின. ஆனால் அந்த சூழ்நிலை சரியில்லாததால் படைகளின் ஹிட்லர் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. அந்த மாதம் (ஜூலை 9) முசோலினி கைது செய்து வெளியேற்றப்பட்டார். 1943 நவம்பர் மாதம் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில், ஜோசப் ஸ்டாலின் சீனக் குடியரசு பகுதியான கெய்ரோவில் சந்தித்தார்.

நேச நாடுகள் வெற்றியை நோக்கி (1944)[தொகு]

1944ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி நேச நாடுகளின் நார்மாண்டி படையெடுப்பு

1944ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மேற்கு போர் முனையில் நடந்த சண்டையில் பெல்ஜியம் நாட்டின் துறைமுக நகரமான ஆண்ட்வெர்ப் எனும் இடத்தில் ஜெர்மனி தனது கடைசி பெரும் முயற்சி எடுத்து தோழ்வியைத் தழுவியது.[10] இந்த வெற்றியின் காரணமாக பெரும் முயற்சி எடுக்காமலேயே நேச படைகள் முன்னேறின.[10] மேற்கத்திய படைகள் ஜெர்மனின் கூட்டுப்படைகளைச் சுற்றிவளைத்து தாக்கி வெற்றிகண்டது. இந்த நிகழ்வின் மூலம் இத்தாலி நாட்டின் படைகளிடம் போரின் போக்கில் தேக்க நிலை காணப்பட்டது. 1945ம் ஆண்டின் மத்தியப்பகுதியில் சோவியத் படையும் ஜெர்மன் படையும் ஓடர் (Oder river) ஆற்றில் மோதிக்கொண்டன. இந்த சண்டையின் மூலம் போலந்தும் தாக்கப்பட்டு கிழக்கு பிரஷ்யாவை நேச நாடுகள் கைப்பற்றின.[11] 1945ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி அமெரிக்கா, இங்கிலாந்து, சோவியத் போன்ற நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி கருங்கடல் பகுதியில் யால்ட்டா மாநாட்டில் கலந்து ஆலோசனை செய்தார்கள். இந்த மாநாட்டில் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பை அகற்ற சோவியத் ஒன்றியம் ஜப்பானுக்கு எதிரான போரின் குதிக்க தயாரானது.[12]

1945ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐரோப்பிய ஆறான ரைன் ஆறு மூடப்பட்டபோது பால்டிக் கடல் தெற்கு கரை பகுதியில் ஜெர்மனியின் ஆதரவு படைகள் சைலேசியா மற்றும் போமெரேனியா மீது படையெடுப்பு நடத்தியது. அந்த வருடம் மார்ச் மாதம் நேச நாடுகளின் படைகளைச் சூழ்ந்து வடக்கில் ஜெர்மனியின் ரோம்கன் (Remagen) நகர் பகுதியிலும் தெற்கிலும் முற்றுகையிட்டன. அப்போது சோவியத் யூனியன் வியன்னா வரை முன்னேறியது.[13] ஏப்ரல் மாத துவக்கத்தில் சோவியத் படைகளும் போலந்து படைகளும் இத்தாலியின் பகுதிகளையும், மேற்கு ஜெர்மனியின் பெர்லின் பகுதியையும் குறுக்காக தாக்க ஆரம்பித்தார்கள். அதே ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி சோவியத் படைகளும் அமெரிக்க படைகளும் ஜெர்மனியில் ஓடும் எல்பா ஆற்றில் வைத்து சேர்ந்து கொண்டன. 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெர்மனியின் பாராளுமன்றக் கட்டிடமும் அந்த நாட்டின் பாரம்பரிய மாளிகையுமான ரெய்டாக் கைப்பற்றப்பட்டது.[14]

இந்த காலகட்டத்தில் ஏராளமான முக்கியப்பொறுப்பில் இருந்த அதிகாரிகளின் மாற்றம் நடந்தது. அமெரிக்க குடியரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட் ஏப்ரல் 12ம் தேதி மரணமடைந்ததால் ஹாரி எஸ். ட்ரூமன் பதவி ஏற்றார். 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி இத்தாலிய எதிர்ப்பு இயக்கத்தால் முசோலினி கொல்லப்பட்டார்.[15] இரண்டு நாட்கள் கழித்து ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் (Death of Adolf Hitler) தற்கொலை செய்துகொண்டார்.[16]

ஜெர்மனியின் படைகள் ஏப்ரல் மாதம் 29ம் தேதி சரணடைவதாக ஒப்புக்கொண்டு (kamerad). மே மாதம் 7ம் தேதி ஜெர்மனி எந்த நிபந்தனையுமின்றி சரணடைந்தது,அதனால் இந்த ஒப்பந்தம் 8ம் தேதி நடைமுறைக்கு வந்தது.[17] அதன் பின்னரும் மே மாதம் 11ம் தேதி வரை ஜெர்மன் இராணுவ குழு மையம் செக் நாட்டின் பராகுவே நகரில் முகாமிட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.[18]

1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள பிலிபைன்ஸ் நாட்டின் லெய்டி (Leyte) தீவிலிருந்து அமெரிக்க-பிலிபைன்ஸ் படைகளின் கூட்டு முயற்சியுடன் மற்ற படைகளை வெளியேற்றக்கோரப்பட்டது. 1945ம் ஆண்டு மார்ச் மாதம் பிலிபைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவை கைப்பற்ற லுசான் (Luzon) என்ற இடத்தில் படைகள் குவிக்கப்பட்டன. மணிலாவை கைப்பற்றும் வரை லுசான் (Luzon), மாண்டனோ (Mindanao) போன்ற இடங்களில் சண்டை நடந்து கொண்டு இருந்தது.[19] மார்ச் மாதம் 9ம் தேதி இரவு அமெரிக்க விமானப்படை விமானம் போயிங் B-29 சூப்பர்ஃபோர்ட்ரெஸ் தீயை உமிளும் அணுக்குண்டை ஜப்பானின் நகரின் மீது போட்டு கொஞ்ச நேரத்தில் 100,000 மக்களை கொன்று குவித்தது. அமெரிக்க-இங்கிலாந்தின் கூட்டு தாக்குதலால் அடுத்த ஐந்து மாதங்களில் ஜப்பானில் 66 நகரங்களில் பொதுமக்கள் 3,50,000 முதல் 5,00,000 பேர் தீக்கிரையாகி இறந்தனர்.[20]

1945ம் ஆண்டு மே மாதம் ஆஸ்திரலிய படைகள் இந்தோனேசியா, மலேசியா, புரூணை, போன்ற நாடுகளின் ஆட்சியின் கீழ் இருந்த போர்னியோ தீவில் உள்ள எண்ணெய் வயல்களை கைப்பற்ற தீவிரம் காட்டின. மார்ச் மாதத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, சீனா போன்ற கூட்டுப்படைகள் வடக்கு பர்மாவில் ஜப்பான் படைகளைத் தோற்கடித்தன. பின்னர் பிரித்தானியா படைகள் மியான்மர் நாட்டின் தலைநகரான ரங்னை அடைய மே மாதம் 3ம் தேதி ஆனது.[21] 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் மேற்கு ஹுனான் போரில் சீன படைகள் எதிர் தாக்குதல் நடத்தத் துவங்கின. அமெரிக்க படைகள் மார்ச் மாதம் இமோஜீமாவையும் ஜூன் மாத இறுதியில் ஒகினவாவையும் ஜப்பானை கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருந்தது.[22] அமெரிக்கப்படைகள் ஜப்பானை அழித்துக்கொண்டிருந்த அதே வேளையில் நேச நாடுகளின் நீர்மூழ்கிக்கப்பல்கள் ஜப்பானுக்கு எந்த நாட்டின் உதவியும் கிடைக்க விடாமல் தடுத்துக்கொண்டிருந்தது.[23]

1945ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி ஜப்பான் நாட்டின் வெளியுறவு அமைச்சர் மமெரொ சிகமெட்சு (Mamoru Shigemitsu) முன்னிலையில் போர் தளவாடங்களை அமெரிக்க போர் கப்பல் மிசொவ்ரியில் வைத்து ஒப்படைத்த காட்சி

1945ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நேச நாடுகளின் தலைவர்கள் ஜெர்மனியின் போட்ஸ்டாம் நகரின் சந்தித்தார்கள். அப்போது எந்த விதமான நிபந்தனையுமின்றி சரணடைவதாக ஒப்பந்தம் (Potsdam Agreement)[24] செய்ய உறுதியளிக்கப்பட்டது. அதே வேளையில் ஐக்கிய ராஜ்யம் பொது தேர்தலை சந்தித்தது அதில் கிளமெண்ட் அட்லீ வெற்றிபெற்றார். இரண்டாம் உலகப்போரின் தலைவராக கருத்தப்பட்ட வின்ஸ்டன் சர்ச்சில் தோழ்வியடைந்தார்.[25]

ஜப்பான் நாடு 1945ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி செய்துகொண்ட ஒப்பந்ததை மீறுவது கண்டு அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து ஆகஸ்ட் மாத துவக்கத்தில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற நகரங்களில் அடுத்தடுத்து அணுக்குண்டு மழைபொழிந்தது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சரணடைய ஒப்புக்கொண்டு, செப்டம்பர் மாதம் 2ம் தேதி நேசப்படைகளின் கப்பலான மிசோரியில் வைத்து சண்டைமுடி கையோப்பம் இட்டு சரண்டைந்தனர்.

இரஷ்யாவின் செஞ்சேனை கூரில் தீவுகளைப் கைப்பற்றியது.[26][27][28] 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ம் ஜப்பான் போரை விடுத்து சரணடைய ஒப்புக்கொண்டது, ஆனால் இறுதியாக செப்டம்பர் 2, 1945 அன்று அமெரிக்க போர் கப்பல் யுஎஸ்எஸ் மிசோரி கப்பலில் வைத்து சரணடைந்தனர்.[26][27][28][29]

அச்சு நாடுகளின் வீழ்ச்சியும், நேச நாடுகளின் வெற்றியும் (1944–45)[தொகு]

16 திசம்பர் 1944 அன்று மேற்கு முனையில் ஒரு கடைசி முயற்சியாக செருமனி எஞ்சியிருந்த தனது அனைத்து சேமப் படை வீரர்களையும் பயன்படுத்தி அர்தென்னேசிலும், பிரெஞ்சு-செருமானிய எல்லையின் நெடுகேயும் மேற்கு நேச நாடுகளைப் பிரிப்பதற்காகவும், மேற்கு நேச நாட்டுத் துருப்புக்களில் பெரும்பாலான பங்கினரைச் சுற்றிவளைப்பதற்காகவும் மற்றும் நேச நாடுகளின் முதன்மையான இராணுவப் பொருட்கள் வழங்கும் துறைமுகமான ஆண்ட்வெர்ப்பைப் பிடித்து ஒரு அரசியல் உடன்படிக்கைக்குக் கொண்டு வருவதற்காகவும் ஒரு பெரிய பதில் தாக்குதலைத் தொடங்கியது.[10] 16 சனவரி 1945இல் இந்தத் தாக்குதலானது எந்த ஒரு முக்கியக் குறிக்கோள்களையும் நிறைவேற்றாமல் முறியடிக்கப்பட்டது.[10] இத்தாலியில் மேற்கு நேச நாடுகள் செருமானியத் தற்காப்புக் கோட்டில் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி இருந்தன. 1945ஆம் ஆண்டின் சனவரி மாதத்தின் நடுப்பகுதியில் சிவப்பு இராணுவமானது போலந்தில் தாக்குதலை நடத்தியது. விசுதுலா ஆற்றிலிருந்து செருமனியின் ஓதெர் ஆறு வரை முன்னேறியது. கிழக்கு புருசியா மீது தாக்குதல் ஓட்டம் நடத்தியது.[30] 4 பெப்ரவரியில் சோவியத்து, பிரித்தானிய மற்றும் ஐக்கிய அமெரிக்கத் தலைவர்கள் யால்ட்டா மாநாட்டிற்காகச் சந்தித்தனர். போருக்குப் பிந்தைய செருமனியை ஆக்கிரமிப்பது மற்றும் யப்பானுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் எப்போது போரில் இறங்கும் ஆகியவை குறித்து ஒப்புக் கொண்டனர்.[31]

பெப்ரவரியில் சோவியத்துகள் சிலேசியா மற்றும் பொமரேனியாவுக்குள் நுழைந்தனர். அதே நேரத்தில், மேற்கு நேச நாடுகள் மேற்கு செருமனிக்குள் நுழைந்தன. ரைன் ஆற்றை மூடின. மார்ச் இறுதியில், ரூருக்கு வடக்கு மற்றும் தெற்கே இருந்த ரைன் ஆற்றை மேற்கு நேச நாடுகள் கடந்தன. செருமானிய இராணுவத்தின் பி அணியைச் சுற்றி வளைத்தன.[32] மார்ச்சின் ஆரம்பத்தில் அங்கேரியில் உள்ள தனது கடைசி எண்ணெய்க் கையிருப்பைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாகவும், புடாபெஸ்டை மீண்டும் கைப்பற்றவும் சோவியத் துருப்புகளுக்கு எதிராகத் தனது கடைசி முக்கியமான தாக்குதலைச் செருமனி பலதோன் ஏரிக்கு அருகில் தொடங்கியது. இரண்டே வாரங்களில் இந்தத் தாக்குதலானது முறியடிக்கப்பட்டது. சோவியத்துகள் வியன்னாவை நோக்கி முன்னேறினர். நகரத்தைக் கைப்பற்றினர். ஏப்ரலின் ஆரம்பத்தில், சோவியத் துருப்புகள் கோனிக்சுபெர்க்கைக் கைப்பற்றின. அதே நேரத்தில், மேற்கு நேச நாடுகள் இறுதியாக இத்தாலியில் முன்னேறின. மேற்கு செருமனி முழுவதும் பரவின. அம்பர்க்கு மற்றும் நியூரம்பர்க் ஆகிய நகரங்களைக் கைப்பற்றின. 25 ஏப்ரல் அன்று அமெரிக்க மற்றும் சோவியத்துப் படைகள் எல்பே ஆற்றில் சந்தித்தன. தெற்கு செருமனி மற்றும் பெர்லினைச் சுற்றிலும் ஏராளமான ஆக்கிரமிக்கப்படாத தனித்தனி இடங்கள் இருந்தன.

பெர்லினில் ரெய்க்ஸ்டாக்கின் சிதிலங்கள், 3 சூன் 1945.

சோவியத் துருப்புகள் ஏப்ரலின் இறுதியில் புயலெனப் புகுந்து பெர்லினைக் கைப்பற்றின.[33] இத்தாலியில் 29 ஏப்ரல் அன்று செருமானியப் படைகள் சரணடைந்தன. 30 ஏப்ரல் அன்று ரெய்க்ஸ்டாக் கைப்பற்றப்பட்டது. நாசி செருமனியின் இராணுவத் தோல்விக்கு அறிகுறியாக இது அமைந்தது.[14] 2 மே அன்று பெர்லின் நகரக் காவல் படையினர் சரணடைந்தனர்.

இக்காலத்தில் இரு பக்கங்களிலும் தலைமைத்துவத்தில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. 12 ஏப்ரல் அன்று அமெரிக்க அதிபர் ரூசவெல்ட் இறந்தார். அவருக்குப் பிறகு அவரது துணை அதிபரான ஹாரி எஸ். ட்ரூமன் அதிபராகப் பதவிக்கு வந்தார். 28 ஏப்ரல் அன்று இத்தாலிய எதிர்ப்பு இயக்கத்தவர்கள் பெனிட்டோ முசோலினியைக் கொன்றனர்.[15] 30 ஏப்ரல் அன்று தனது தலைமையகத்தில் இட்லர் தற்கொலை செய்து கொண்டார். இட்லருக்குப் பிறகு கடற்படைத் தலைவரான கார்ல் தோனித்சு மற்றும் யோசோப்பு கோயபெல்ஸ் ஆகியோர் பதவிக்கு வந்தனர். முழுமையான மற்றும் நிபந்தனையற்ற சரணடைவானது ஐரோப்பாவில் 7 மற்றும் 8 மேயில் கையொப்பமிடப்பட்டது. 8 மேயின் முடிவிலிருந்து இது நடைமுறைக்கு வந்தது.[17] செருமானிய இராணுவ அணி மையமானது பிரேகுவில் 11 மே வரை எதிர்த்துத் தாக்குப் பிடித்தது.[18]

பசிபிக் போர்முனையில் அமெரிக்கப் படைகள், பிலிப்பீன்சு பொதுநலவாயப் படைகளுடன் இணைந்து பிலிப்பீன்சில் முன்னேறின. ஏப்ரல் 1945இன் முடிவில் லெய்தே யுத்தத்தில் வென்றன. சனவரி 1945இல் லூசோனில் இறங்கின. மார்ச்சில் மணிலாவை மீண்டும் கைப்பற்றின. போர் முடியும் வரை பிலிப்பீன்சின் லூசோன், மிந்தனாவோ மற்றும் பிற தீவுகளில் சண்டையானது தொடர்ந்தது.[34] அதே நேரத்தில், யப்பானியப் போர்த் தொழில்துறை மற்றும் குடிமக்களின் மனப்பான்மையை அழிக்கும் பொருட்டு யப்பானின் முக்கியமான நகரங்கள் மீது ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் விமானப் படைகள் ஒரு பெரிய குண்டு வீச்சுப் படையெடுப்பைத் தொடங்கின. டோக்கியோ மீது 9 - 10 மார்ச்சில் நடத்தப்பட்ட மிகுந்த அழிவுகரமான குண்டு வீச்சு ஊடுருவலானது வரலாற்றில் பொதுவான ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதல்களில் மிகவும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியதாகும்.[35]

9 ஆகத்து 1945இல் நாகசாகி மீது நடத்தப்பட்ட அணுகுண்டு வீச்சு.

மே 1945இல் ஆத்திரேலியத் துருப்புகள் போர்னியோவில் இறங்கின. அங்கிருந்த எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல் ஓட்டம் நடத்தின. பிரித்தானிய, அமெரிக்க மற்றும் சீனப் படைகள் மார்ச்சில் வடக்கு பர்மாவில் யப்பானியர்களைத் தோற்கடித்தன. மே 3க்குள் இரங்கூனை அடைவதற்காகப் பிரித்தானியப் படைகள் முன்னேறின.[21] 6 ஏப்ரல் மற்றும் 7 சூன் 1945க்கு இடையில் சீனப் படைகள் மேற்கு கூனான் யுத்தத்தில் ஒரு பதில் தாக்குதலை நடத்தின. அமெரிக்கக் கடல் மற்றும் நீர்நிலப் படைகளும் யப்பானை நோக்கி முன்னேறின. மார்ச்சில் இவோ ஜீமாவைக் கைப்பற்றின. சூன் இறுதியில் ஒகினவாவைக் கைப்பற்றின.[36] அதே நேரத்தில், நீர்மூழ்கிக் கப்பல்களால் நடத்தப்பட்ட கடல் முற்றுகையானது யப்பானின் பொருளாதாரத்தின் கழுத்தை நெருக்கின. அயல் நாட்டில் இருந்த யப்பானியப் படைகளுக்குப் பொருட்கள் வழங்கும் அதன் திறனைப் பெருமளவு குறைத்தன.[23][37]

11 சூலை அன்று நேச நாடுகளின் தலைவர்கள் செருமனியின் போதுசுதாமில் சந்தித்தனர். செருமனி குறித்த முந்தைய ஒப்பந்தங்களை அவர்கள் உறுதி செய்தனர்.[24] அமெரிக்க, பிரித்தானிய மற்றும் சீன அரசாங்கங்கள் யப்பானின் நிபந்தனையற்ற சரணடைவைக் கோரின. குறிப்பாக, யப்பானுக்கு "மாற்று வழியானது உடனடி மற்றும் முழுமையான அழிவு" என்பதைக் குறிப்பிட்டனர்.[38] இந்த மாநாட்டின் போது ஐக்கிய இராச்சியம் தனது பொதுத்தேர்தலை நடத்தியது. பிரதம மந்திரியாக சர்ச்சிலுக்குப் பதிலாக கிளமெண்ட் அட்லீ பதவிக்கு வந்தார்.[25]

நிபந்தனையற்ற சரணடைவுக்கான அழைப்பானது யப்பானிய அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. அது தன்னால் மிகுந்த விருப்பத்திற்குரிய நிபந்தனை விதிமுறைகளுக்காகப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என நம்பியது.[39] ஆகத்து ஆரம்பத்தில் ஐக்கிய அமெரிக்கா யப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டுகளை வீசியது. இந்த இரண்டு குண்டு வீச்சுகளுக்கு இடையில் யால்ட்டா ஒப்பந்தத்தின் பங்கெடுப்பாளர்களான சோவியத்துகள் யப்பானியர் ஆக்கிரமிப்பில் இருந்த மஞ்சூரியா மீது படையெடுத்தனர். யப்பானின் மிகப்பெரிய சண்டையிடும் படையாக இருந்த குவாந்துங் இராணுவத்தை உடனடியாகத் தோற்கடித்தனர்.[40] முன்னர் பிடிவாதமாக இருந்த ஏகாதிபத்திய இராணுவத் தலைவர்களைச் சரணடைவு விதிமுறைகளுக்கு ஒப்புக் கொள்ள இந்த இரண்டு நிகழ்வுகளும் இணங்க வைத்தன.[28] சிவப்பு இராணுவமானது சக்காலின் தீவின் தெற்குப் பகுதி மற்றும் குரில் தீவுகளைக் கைப்பற்றியது. 9 - 10 ஆகத்து 1945இன் இரவில் பேரரசர் இறோகித்தோ போதுசுதாம் அறிவிப்பில் நேச நாடுகளால் கோரப்பட்ட விதிமுறைகளை ஏற்றுக் கொள்ளும் தனது முடிவை அறிவித்தார்.[41] 15 ஆகத்து 1945இல் பேரரசர் வானொலியில் ஒளிபரப்பப்பட்ட ஓர் உரையில் ("கியோகுவோன்-கோசோ", பொருள்: "ஆபரணக் குரல் ஒளிபரப்பு") தனது முடிவை யப்பானிய மக்களுக்குத் தெரிவித்தார்.[42] 15 ஆகத்து 1945 அன்று யப்பான் சரணடைந்தது. 2 செப்டம்பர் 1945இல் டோக்கியோ வளைகுடாவில் அமெரிக்கப் போர்க் கப்பலான யு. எஸ். எஸ். மிசோரியின் தளத்தில் சரணடைவு ஆவணங்கள் இறுதியாகக் கையொப்பமிடப்பட்டன. போரை முடித்து வைத்தன.[29]

பிறகு[தொகு]

ஆக்கிரமித்திருந்த செருமானியப் படைகளின் வேண்டுமென்ற நகர அழிப்புக்குப் பிறகு, 1945இல் வார்சாவாவின் சிதிலங்கள்.

ஆத்திரியா மற்றும் செருமனியில் ஆக்கிரமிப்பு நிர்வாகங்களை நேச நாடுகள் நிறுவின. ஆரம்பத்தில் இவை இரண்டுமே மேற்கு மற்றும் கிழக்கு ஆக்கிரமிப்புப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. இவற்றை முறையே மேற்கு நேச நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. எனினும், இவற்றின் பாதைகள் சீக்கிரமே வெவ்வேறு திசையில் பிரிந்தன. செருமனியில் மேற்கு நேச நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியத்தால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மேற்கு மற்றும் கிழக்கு ஆக்கிரமிப்புப் பகுதிகள் அதிகாரப்பூர்வமாக 1949இல் முடிவடைந்தன. இப்பகுதிகள் தனித்தனி நாடுகளாக முறையே மேற்கு செருமனி மற்றும் இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு எனப் பிரிந்தன. இருந்தும் ஆத்திரியாவில் ஆக்கிரமிப்பானது 1955இல் மேற்கு நேச நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு இடையிலான ஒரு கூட்டு உடன்படிக்கைப்படி ஆத்திரியாவானது மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு நடு நிலை சனநாயக அரசாக அனுமதி வழங்கப்பட்டது வரை தொடர்ந்தது. இது அலுவல்பூர்வமாக எந்த ஓர் அரசியல் குழுவுடனும் அணி சேராமல் இருந்தது. எனினும், நடைமுறையில் மேற்கு நேச நாடுகளுடன் மேம்பட்ட உறவுகளைக் கொண்டிருந்தது. செருமனியில் ஒரு நாசி ஒழிப்பு முறையானது நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் நாசிப் போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கும், அதிகாரத்திலிருந்து முன்னாள் நாசிக்களை நீக்குவதற்கும் இட்டுச் சென்றது. எனினும், இந்தக் கொள்கையானது மன்னிப்பு வழங்குவதை நோக்கியும், மேற்கு செருமானியச் சமூகத்தில் முன்னாள் நாசிக்களை மீண்டும் இணைத்துக் கொள்வதையும் நோக்கி நகர்ந்தது.[43]

போருக்கு முந்தைய (1937) தனது நிலப்பரப்பில் கால் பகுதியைச் செருமனி இழந்தது. கிழக்கு நிலப்பரப்புகளில் சைலீசியா, நியூமார்க் மற்றும் பெரும்பாலான பொமரேனியாவானது போலந்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது.[44] கிழக்கு புருசியாவானது போலந்து மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் பிரித்துக் கொள்ளப்பட்டது. இந்த மாகாணங்களில் இருந்து 90 இலட்சம் செருமானியர்கள் செருமானிக்குள் தள்ளப்பட்டனர்.[45][46] செக்கோஸ்லோவாக்கியாவின் சுதேதென்லாந்தில் இருந்த 30 இலட்சம் செருமானியர்களும் செருமானிக்குள் தள்ளப்பட்டனர். 1950களின் இறுதியில் மேற்கு செருமானியர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் கிழக்கிலிருந்து வந்த அகதிகளாக இருந்தனர். குர்சோன் கோட்டுக்குக் கிழக்கே இருந்த போலந்து மாகாணங்களைச் சோவியத் ஒன்றியம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.[47] அங்கிருந்து 20 இலட்சம் போலந்துக் காரர்களும் வெளியேற்றப்பட்டனர்.[46][48] வட மேற்கு உருமேனியா,[49][50] கிழக்கு பின்லாந்தின் பகுதிகள்[51] மற்றும் மூன்று பால்டிக் நாடுகள் சோவியத் ஒன்றியத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டன.[52][53]

மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக நாசி செருமனியின் அரசியல், இராணுவ, நீதித்துறை மற்றும் பொருளாதாரத் தலைமைத்துவத்தின் முக்கியமான உறுப்பினர்கள் நேச நாடுகள் படையால் நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் குற்றம் சாட்டப்பட்டனர், அங்குள்ள பிரதிவாதிகள் படத்தில் காட்டப்பட்டுள்ளனர்.

உலக அமைதியைப்[54] பேணும் ஒரு முயற்சியாக நேச நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையை உருவாக்கின. ஐக்கிய நாடுகள் அவையானது அதிகாரப்பூர்வமாக 24 அக்டோபர் 1945 அன்று நடைமுறைக்கு வந்தது.[55] அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் பொதுவான தரமாக 1948இல் உலக மனித உரிமைகள் சாற்றுரையைப் பின்பற்ற ஆரம்பித்தது.[56] போரின் வெற்றியாளர்களாகத் திகழ்ந்த உலக வல்லமைகளான பிரான்சு, சீனா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகியவை ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர்களாயின.[57] இந்த ஐந்து நாடுகள் மட்டுமே இன்றும் நிரந்தர உறுப்பு நாடுகளாகத் தொடர்கின்றன. எனினும், இரண்டு முறை நாடுகளின் உறுப்பினர் பதவியானது மாற்றப்பட்டது. 1971இல் சீனக் குடியரசு மற்றும் சீன மக்கள் குடியரசுக்கு இடையிலும், 1991இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சோவியத் ஒன்றியம் மற்றும் அதற்குப் பின் வந்த உருசியக் கூட்டமைப்புக்கு இடையிலும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன. போர் முடிவுக்கு முன்னரே மேற்கு நேச நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு இடையிலான கூட்டணியானது மோசமடைய ஆரம்பித்தது.[58]

நடு ஐரோப்பாவில் போருக்குப் பிந்தைய எல்லை மாற்றங்கள் மற்றும் பொதுவுடமைவாத கிழக்கு கூட்டுக்குழுவின் உருவாக்கம்

நடைமுறையில் செருமனியானது பிரிக்கப்பட்டு விட்டது. இரண்டு சுதந்திர அரசுகளாக பிரிக்கப்பட்டது. அவை செருமானியக் கூட்டமைப்புக் குடியரசு (மேற்கு செருமனி) மற்றும் செருமானிய சனநாயகக் குடியரசு (கிழக்கு செருமனி).[59] இவை இரண்டுமே நேச நாடுகள் மற்றும் சோவியத்து ஆக்கிரமிப்புப் பகுதிகளின் எல்லைகளுக்குள் உருவாக்கப்பட்டன. எஞ்சிய ஐரோப்பாவானது மேற்கு மற்றும் சோவியத் தாக்கம் கொண்ட பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.[60] பெரும்பாலான கிழக்கு மற்றும் நடு ஐரோப்பிய நாடுகள் சோவியத் தாக்கம் கொண்ட பகுதிகளுக்குள் விழுந்தன. பொதுவுடமைவாத அரசுகளின் நிறுவுதலுக்கு இது இட்டுச் சென்றது. இவை சோவியத் ஆக்கிரமிப்பு அரசுத் துறைக்கு முழுவதுமாகவோ அல்லது பகுதியளவாகவோ ஆதரவளித்தன. இதன் விளைவாக இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு,[61] போலந்து, அங்கேரி, உருமேனியா, செக்கோஸ்லாவாக்கியா மற்றும் அல்பேனியா[62] ஆகியவை சோவியத்தின் தொலைதூர அரசுகளாயின. எனினும், பொதுவுடமைவாத யுகோஸ்லாவியாவானது ஒரு முழுவதுமான சுதந்திரமான கொள்கையைக் கடைபிடித்தது. இது சோவியத் ஒன்றியத்துடன் பதற்றமான நிலைக்கு இட்டுச் சென்றது.[63]

போருக்குப் பிந்தைய உலகின் பிரிவானது அதிகாரப்பூர்வமாக இரண்டு பன்னாட்டு இராணுவக் கூட்டணிகளாக உருவானது. அவை ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு மற்றும் சோவியத் தலைமையிலான வார்சா உடன்பாடு ஆகியவையாகும்.[64] பனிப்போர் எனப்படும் நீண்டகால அரசியல் பதற்றங்கள் மற்றும் இராணுவ போட்டி ஆகியவை இவற்றுக்கு இடையே ஏற்பட்டது. இதனுடன் இதற்கு முன்னர் இருந்திராத அளவுக்கான ஆயுதப் போட்டியும், உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சார்பாண்மை போர்களும் நடைபெற்றன.[65]

ஆசியாவில் யப்பானிய ஆக்கிரமிப்புக்கு ஐக்கிய அமெரிக்கா தலைமை தாங்கியது. மேற்கு அமைதிப் பெருங்கடலில் இருந்த யப்பானின் முந்தைய தீவுகளை நிர்வாகம் செய்தது. அதே நேரத்தில், சோவியத்துக்கள் தெற்கு சாக்கலின் மற்றும் கூரில் தீவுகளை இணைத்துக் கொண்டனர்.[66] முன்னர் யப்பானின் ஆட்சியின் கீழிருந்த கொரியாவானது பிரிக்கப்பட்டது. 1945 மற்றும் 1948க்கு இடையில் கொரியாவின் வடக்குப் பகுதி சோவியத் ஒன்றியத்தாலும், தெற்குப்பகுதி ஐக்கிய அமெரிக்காவாலும் ஆக்கிரமிக்கப்பட்டது. 1948இல் 38வது இணைக் கோட்டுக்கு இரு பக்கமும் வெவ்வேறு குடியரசுகள் தோன்றின. ஒட்டு மொத்த கொரியாவுக்கும் நியாயமான அரசாங்கம் என இரு அரசுகளும் உரிமை கோரின. இது இறுதியாகக் கொரியப் போருக்கு இட்டுச் சென்றது.[67]

14 மே 1948இல் சுதந்திர மன்றத்தில் இசுரேலிய சுதந்திரப் பிரகடனத்தை அறிவிக்கும் தாவீது பென்-குரியன்.

சீனாவில் தேசியவாத மற்றும் பொதுவுடமைவாதப் படைகள் சூன் 1946இல் உள்நாட்டுப் போரை மீண்டும் தொடங்கின. பொதுவுடமைவாதப் படைகள் வெற்றி பெற்றன. முதன்மை நிலத்தில் சீன மக்கள் குடியரசை நிறுவின. அதே நேரத்தில், தேசியவாதப் படைகள் 1949இல் தைவானுக்குப் பின் வாங்கின.[68] மத்திய கிழக்கில், ஐக்கிய நாடுகள் வழங்கிய பாலத்தீனப் பிரிவுத் திட்டத்தை அரபு நாடுகள் நிராகரித்ததும், இசுரேலின் உருவாக்கமும் அரபு-இசுரேல் முரண்பாடு தீவிரமாகுவதைக் குறித்தது. அதே நேரத்தில், ஐரோப்பிய சக்திகள் தங்களது காலனிப் பேரரசில் சிலவற்றையோ அல்லது அனைத்தையுமோ மீண்டும் வைத்துக் கொள்ள முயற்சி மேற்கொண்டன. போரின்போது அவை மதிப்பு மற்றும் வளங்களை இழந்தது இம்முயற்சியை வெற்றிகரமாக அமையவிடாமல் தடுத்தது. இது குடியேற்ற விலக்கத்துக்கு இட்டுச் சென்றது.[69][70]

உலகப் பொருளாதாரமானது போரின் காரணமாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. எனினும், இதில் பங்கெடுத்த நாடுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறாகப் பாதிக்கப்பட்டன. ஐக்கிய அமெரிக்காவானது மற்ற எந்த ஒரு நாட்டையும் விட மிகுந்த செல்வச் செழிப்பு மிக்க நாடாக உருவானது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஐக்கிய அமெரிக்காவில் ஒரு குழந்தைப் பெருக்கக் காலத்திற்கு இட்டுச் சென்றது. 1950ஆம் ஆண்டின் முடிவில் இதன் தனிநபர் வருமானமானது மற்ற எந்த பெரிய நாடுகளையும் விட மிக அதிகமாக இருந்தது. உலகப் பொருளாதாரத்தில் ஐக்கிய அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தியது.[71] 1945 - 1948 ஆகிய ஆண்டுகளில் மேற்கு செருமனியில் தொழில்முறை ஆயுதக்குறைப்பு என்ற ஒரு கொள்கையை ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா பின்பற்றின.[72] பன்னாட்டு வணிகச் சார்பு நிலை காரணமாக ஐரோப்பியப் பொருளாதாரமானது வளர்ச்சியற்ற நிலைக்கு உள்ளானது. பல ஆண்டுகளுக்கு இது ஐரோப்பிய மீட்சியைத் தாமதித்தது.[73][74]

1944இல் பிரெட்டன் உட்சு மாநாட்டில் போருக்குப் பிந்தைய உலகத்திற்காக ஒரு பொருளாதார உருவரைச் சட்டத்தை நேச நாடுகள் உருவாக்கின. இந்த ஒப்பந்தமானது அனைத்துலக நாணய நிதியத்தையும், பன்னாட்டுப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியையும் உருவாக்கியது. பிரெட்டன் உட்சு முறைமை 1973ஆம் ஆண்டு வரை நீடித்திருந்தது.[75] 1948இன் நடுப்பகுதியில் மேற்கு செருமனியில் பண மறுசீரமைப்புடன் இந்த மீட்சியானது தொடங்கியது. மார்ஷல் திட்டம் (1948-1951) நேரடியாகவும், மறைமுகமாகவும் விளைவித்த ஐரோப்பியப் பொருளாதாரக் கொள்கையின் தாராளமயமாக்கமானது வேகப்படுத்தப்பட்டது.[76][77] 1948க்குப் பிந்தைய மேற்கு செருமனியின் பொருளாதார மீட்சியானது செருமானியப் பொருளாதார அதிசயம் என்று அழைக்கப்பட்டது.[78] இத்தாலியும் பொருளாதார விரைவு வளர்ச்சியைப் பெற்றது.[79] பிரெஞ்சுப் பொருளாதாரமும் மீண்டது.[80] ஆனால் மாறாக, ஐக்கிய இராச்சியமானது பொருளாதாரச் சீர் குலைவு நிலையில் இருந்தது.[81] மொத்த மார்ஷல் திட்ட உதவியில் கால் பங்கைப் பெற்ற போதும் இவ்வாறான நிலை இருந்தது. இது மற்ற எந்த ஓர் ஐரோப்பிய நாட்டையும் விட அதிக உதவித் தொகையாகும்.[82] தசாப்தங்களுக்கு ஒப்பீட்டளவில் பொருளாதார வீழ்ச்சியை ஐக்கிய இராச்சியமானது தொடர்ந்து சந்தித்தது.[83] சோவியத் ஒன்றியமானது பெருமளவிலான மனித வள மற்றும் பொருள் இழப்பைச் சந்தித்த போதும், போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் ஆரம்பக் காலத்தில் உற்பத்திகள் திடீர் அதிகரிப்பைச் சந்தித்தது.[84] யப்பான் மிகத் தாமதமாக மீண்டது.[85] போருக்கு முந்தைய தொழில் துறை உற்பத்தி நிலையை 1952ஆம் ஆண்டில் சீனாவானது அடைந்தது.[86]

விளைவு[தொகு]

இறப்புகளும், போர்க் குற்றங்களும்[தொகு]

இரண்டாம் உலகப் போர் இறப்புகள்

போரில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையின் மதிப்பீடுகளானவை வேறுபடுகின்றன. ஏனெனில், பல இறப்புகள் பதியப்படவில்லை.[87] போரில் சுமார் 6 கோடி மக்கள் இறந்தனர் எனப் பெரும்பாலானவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில் 2 கோடி இராணுவ வீரர்களும்,4 கோடி குடிமக்களும் அடங்குவர்.[88][89][90] பெரும்பாலான குடிமக்கள் வேண்டுமென்றே நடத்தப்பட்ட இனப்படுகொலை, படுகொலைகள், மொத்தமான குண்டுவீச்சுகள், நோய் மற்றும் பட்டினியால் இறந்தனர்.

போரின் போது சோவியத் ஒன்றியம் மட்டுமே சுமார் 2.7 கோடி மக்களை இழந்தது.[91] இதில் 87 இலட்சம் இராணுவ வீரர்களும், 1.9 கோடி குடிமக்களும் அடங்குவர்[92]. சோவியத் ஒன்றியத்தில் இருந்த மொத்த மக்கள்தொகையில் ஒரு கால் பங்கினர் காயமடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர்.[93] செருமனிக்கு 53 இலட்சம் இராணுவ வீரர்களின் இழப்பு ஏற்பட்டது. கிழக்குப் போர்முனை மற்றும் செருமனியில் கடைசி யுத்தங்களின் போது இந்த இறப்புகள் பெரும்பாலும் ஏற்பட்டன.[94]

இட்லரின் இனவெறிக் கொள்கைகளின் நேரடி அல்லது மறைமுக விளைவாக 1.1[95] முதல் 1.7 கோடி[96] வரையிலான குடிமக்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 60 இலட்சம் யூதர்களின் மொத்தமான இனப்படுகொலை, இவர்களுடன் உரோமா, ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் குறைந்தது 19 இலட்சம் போலந்து இனத்தவர்கள்,[97][98] இசுலாவியர்களில் (உருசியர்கள், உக்ரைனியர்கள் மற்றும் பெலாருசியர்கள்) பல இலட்சம் பேர் மற்றும் பிற இன மற்றும் சிறுபான்மையினக் குழுக்களின் கொலையும் அடங்கும்.[99][96] 1941 மற்றும் 1945க்கு இடையில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட செர்பியர்கள், நாடோடி இனத்தவர் மற்றும் யூதர்களுடன் சேர்த்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு யுகோஸ்லாவியாவில் அச்சு நாடுகளுடன் இணைந்திருந்த குரோசிய உசுதசேவால் கொலை செய்யப்பட்டனர்.[100] அதே நேரத்தில், செர்பியத் தேசியவாதச் செத்னிக்குகளால்[101] முஸ்லிம்களும், குரோசிய இனத்தவர்களும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 50 முதல் 68 ஆயிரம் (இதில் 41 ஆயிரம் குடிமக்கள்) வரையிலான பாதிக்கப்பட்டவர்கள் இறந்திருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.[102] மேலும், 1943 மற்றும் 1945க்கு இடையில் வோலினியப் படுகொலைகளில் உக்ரைனியக் கலகக்கார இராணுவத்தால் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட போலந்துக்காரர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.[103] அதே நேரத்தில், இதற்குப் பதில் தாக்குதலாகப் போலந்து குடி இராணுவம் மற்றும் பிற போலந்துப் பிரிவுகளால் சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் உக்ரைனியர்கள் கொல்லப்பட்டனர்.[104]

திசம்பர் 1937இன் நாங்கிங் படுகொலைகளின் போது ஏகாதிபத்திய யப்பானிய இராணுவத்தால் கொல்லப்பட்ட சீனக் குடிமக்களின் உடல்கள்

ஆசியா மற்றும் அமைதிப் பெருங்கடல் பகுதியில் யப்பானியத் துருப்புகளால் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையானது இன்றும் விவாதத்திற்குரியதாக உள்ளது. ஆர். ஜே. ரம்மல் என்பவரின் கூற்றுப்படி, யப்பானியர்கள் 30 இலட்சம் முதல் 1 கோடிக்கும் மேற்பட்ட எண்ணிக்கைக்கு இடையிலான மக்களைக் கொன்றிருக்கலாம் என்கிறார். மிகுந்த நிகழ்வாய்ப்புள்ள எண்ணிக்கையாகக் கிட்டத்தட்ட 60 இலட்சம் மக்களைக் குறிப்பிடுகிறார்.[105] பிரித்தானிய வரலாற்றாளர் எம். ஆர். டி. பூட்டின் கூற்றுப்படி, 1 முதல் 2 கோடிக்கு இடைப்பட்ட குடிமக்கள் இறந்தனர். அதே நேரத்தில், சீன இராணுவ இறப்புகள் (கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள்) 50 இலட்சத்துக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளன.[106] மற்ற மதிப்பீடுகள், பெரும்பாலும் குடிமக்களாக இருந்த 3 கோடி வரையிலான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்கின்றன.[107][108] இதில் மோசமான யப்பானிய அட்டூழியமானது நாங்கிங் படுகொலைகள் எனக் கருதப்படுகிறது. இதில் 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் சீனக் குடிமக்கள் இழிவுபடுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.[109] சான்கோ சகுசேனின் போது 27 இலட்சம் இழப்புகள் ஏற்பட்டதாக மித்சுயோசி கிமேட்டா குறிப்பிட்டுள்ளார். தளபதி யசுசி ஒகமுரா இந்தக் கொள்கையை கீபே மற்றும் சாண்டோங்கில் செயல்படுத்தினார்.[110]

அச்சுப் படைகள் உயிரி மற்றும் வேதி ஆயுதங்களைப் பயன்படுத்தின. சீனா மீதான படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு,[111][112] மற்றும் சோவியத்துகளுக்கு எதிரான ஆரம்பச் சண்டைகளின் போது இத்தகைய பல்வேறுபட்ட ஆயுதங்களை ஏகாதிபத்திய யப்பான் இராணுவமானது பயன்படுத்தியது.[113] குடிமக்களுக்கு எதிராக[114] மற்றும் சில நேரங்களில் போர்க் கைதிகள் மீது இத்தகைய ஆயுதங்களைச் செருமானியர்களும், யப்பானியர்களும் சோதனை செய்தனர்.[115]

22,000 போலந்து அதிகாரிகள் கொல்லப்பட்ட கதின் படுகொலைக்குச் சோவியத் ஒன்றியம் காரணமாக அமைந்தது.[116] என். கே. வி. டி.யால் கைதுசெய்யப்பட்ட அல்லது மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள், சைபீரியாவுக்கு குடிமக்கள் மொத்தமாக நாடு கடத்தப்பட்டது, சிவப்பு இராணுவத்தால் இணைத்துக் கொள்ளப்பட்ட பால்டிக் அரசுகள் மற்றும் கிழக்குப் போலந்தில் நடைபெற்ற இறப்புகளுக்கும் சோவியத் ஒன்றியம் காரணமாக அமைந்தது.[117]

ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்த நகரங்களின் மீதான மொத்தமான குண்டுவீச்சுகளானவை பெரும்பாலும் ஒரு போர்க் குற்றமென அழைக்கப்படுகின்றன. எனினும், இரண்டாம் உலகப் போருக்கு முன்னரோ அல்லது போரின் போதோ வான் போர் தொடர்பான அல்லது குறித்த அனைத்துலக மனிதாபிமானச் சட்டமானது அதற்கு முன்னர் கிடையாது.[118] ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் விமானப்படையானது, இரோசிமா நாகசாகி அணுகுண்டு வீச்சு உள்பட மொத்தமாக 67 யப்பானிய நகரங்கள் மீது குண்டுகளை வீசியது. இதில் 3,93,000 குடிமக்கள் கொல்லப்பட்டனர். இதில் 65% சதவீத கட்டடப் பகுதிகள் அழிந்தன.[119]

இனப்படுகொலை, வதை முகாம்கள் மற்றும் அடிமைத் தொழில்முறை[தொகு]

1945இல் செருமானிய பெர்கன்-பெல்சன் வதை முகாமுக்குள் ஒரு பெரும் சமாதிகளுக்கு எடுத்துச்செல்வதற்காக வாகனங்களில் ஏற்றக் கைதிகளின் உடல்களைச் சுத்ஸ்டாப்பெல் பெண் முகாம் காவலாளிகள் அகற்றுதல்

அடால்ப் இட்லரின் சர்வாதிகாரத்தின் கீழ் நாசி செருமனியானது பெரும் இன அழிப்பு (சுமார் 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டது), 27 இலட்சம் போலந்து இனத்தவரின் கொலை[120] மற்றும் "வாழத் தகுதியற்றவர்கள்" (மாற்றுத்திறனாளிகள் மற்றும் உளப் பிறழ்ச்சி, சோவியத் போர்க் கைதிகள், உரோமானி, நேர்பாலீர்ப்பாளார்கள், விடுதலைக் கட்டுநர்கள், மற்றும் யெகோவாவின் சாட்சிகள்) என நாசி செருமனியால் கருதப்பட்ட 40 இலட்சம் பிறரையும் வேண்டுமென்ற அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக அழித்ததற்குக் காரணமாக அமைந்தது. நாசி செருமனியானது நடைமுறை ரீதியாக ஒரு "இனப்படுகொலை அரசாக" உருவானது.[121] குறிப்பாக சோவியத் போர்க்கைதிகள் வாழத் தகுதியற்ற சூழ்நிலைகளில் வைக்கப்பட்டிருந்தனர். போரின் போது நாசி முகாம்களில் 57 இலட்சம் சோவியத் போர்க்கைதிகளில் 36 இலட்சம் பேர் இறந்தனர்.[122][123] வதை முகாம்களுடன், தொழில் துறை அளவில் மக்களைக் கொல்வதற்காகக் கொலை முகங்களும் நாசி செருமனியால் உருவாக்கப்பட்டன. நாசி செருமனி விரிவாக அடிமைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தியது. செருமனி ஆக்கிரமித்திருந்த நாடுகளிலிருந்து சுமார் 1.2 கோடி முதல் 2 கோடி வரையிலான ஐரோப்பியர்கள் கடத்தப்பட்டு செருமானியத் தொழில்துறை, விவசாயம் மற்றும் போர்ப் பொருளாதாரத்தில் அடிமைப் பணியாளர்களாகப் பயன்படுத்தப்பட்டனர்.[124]

சோவியத் கைதி முகாம்கள் 1942-43இன் போது இறப்பைக் கொடுக்கக்கூடிய முகாம்களின் ஒரு நடைமுறை ரீதியிலான அமைப்பாக மாறியது. போரின்போது உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத நிலை மற்றும் பட்டினியானது அங்கிருந்த கைதிகளின் பெரும்பாலானவர்களின் இறப்புக்குக் காரணமாகியது.[125] இதில் சோவியத் ஒன்றியத்தால் 1939-40இல் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த போலந்து மற்றும் பிற நாடுகளின் அயல் நாட்டுக் குடிமக்கள் மற்றும் மேலும் அச்சு நாடுகளின் போர்க் கைதிகளும் அடங்குவர்.[126] போரின் முடிவின்போது, நாசி முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பெரும்பாலான சோவியத் போர்க் கைதிகளும், சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்ட பல குடிமக்களும் தடுக்கப்பட்டு சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் என். கே. வி. டி.யின் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டனர். உண்மையாகவோ அல்லது நாசிக்களுடன் இணைந்து செயல்பட்டவர்களாகவோ கருதப்பட்ட 2,26,127 பேர் முகாம்களுக்கு மீண்டும் அனுப்பப்பட்டனர்.[127]

அவுஷ்விட்ஸ் வதை முகாமில் இருந்த ஒரு போலந்துக் கத்தோலிக்கப் பெண் குழந்தையின் கைதி அடையாளத்துக்காக ஒரு செருமானிய சுத்ஸ்டாப்பெல்லால் எடுக்கப்பட்ட புகைப்படம், சுமார் 2,30,000 குழந்தைகள் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளிகளாகவும், நாசி மருத்துவச் சோதனைகளிலும் இவர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

யப்பானியப் போர்க் கைதிகளின் முகாம்களில் பெரும்பாலானவை தொழிலாளி முகம்களாகப் பயன்படுத்தப்பட்டன. அங்கும் இறப்பு விகிதமானது அதிகமாக இருந்தது. தூரக் கிழக்கிற்கான பன்னாட்டு இராணுவத் தீர்ப்பாயமானது மேற்கு நாடுகளின் கைதிகளின் இறப்பு விகிதமானது 27%மாக இருந்தது எனக் கண்டறிந்தது. இதுவே அமெரிக்கப் போர்க் கைதிகளுக்கு 37%மாக இருந்தது.[128] செருமானியர்கள் மற்றும் இத்தாலியர்களிடம் போர்க் கைதிகளாக இருந்தவர்களின் இறப்பு விகிதத்தை விட இது 7 மடங்கு அதிகமாகும்.[129] யப்பான் சரணடைந்த பிறகு, ஐக்கிய இராச்சியத்தின் 37,583 கைதிகளும், நெதர்லாந்தின் 28,500 கைதிகளும், ஐக்கிய அமெரிக்காவின் 14,473 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். அதே நேரத்தில், விடுதலை செய்யப்பட்ட சீனர்களின் எண்ணிக்கையானது வெறும் 56 மட்டுமே.[130]

கிழக்காசிய முன்னேற்ற சங்கம் அல்லது கோயினால் சுரங்கங்கள் மற்றும் போர்த் தொழில் முறைகளில் பணியாற்றுவதற்காக 1935 முதல் 1941 வரை வடக்கு சீனா மற்றும் மஞ்சுகோவைச் சேர்ந்த குறைந்தது 50 இலட்சம் சீனக் குடிமக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். 1942க்குப் பிறகு இந்த எண்ணிக்கையானது 1 கோடியை அடைந்தது.[131] சாவகத்தில் 4 இலட்சம் முதல் 1 கோடிக்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலான ரோமுசா (யப்பானியப் பொருள்: "கைத்திறன் சார்ந்த தொழிலாளர்கள்") யப்பானிய இராணுவத்தால் கட்டாயப்படுத்தப்பட்டுப் பணி செய்ய வைக்கப்பட்டனர். தென்கிழக்கு ஆசியாவில் இருந்த யப்பானியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பிற பகுதிகளுக்கு இந்தச் சாவகத் தொழிலாளர்களில் 2,70,000 பேர் அனுப்பப்பட்டனர். இதில் சாவகத்திற்கு வெறும் 52,000 பேர் மட்டுமே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர்.[132]

ஆக்கிரமிப்பு[தொகு]

1940இல் பால்மிரி காட்டில் செருமானிய இராணுவத்தினரால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுவதற்கு சற்று முன்னர் கண்கள் கட்டப்பட்ட போலந்துக் குடிமக்களின் புகைப்படம்

ஐரோப்பாவில் ஆக்கிரமிப்பானது இரண்டு வடிவங்களில் வந்தது. மேற்கு, வடக்கு மற்றும் நடு ஐரோப்பாவில் (பிரான்சு, நோர்வே, டென்மார்க் மற்றும் கீழ் நாடுகள், மற்றும் செக்கோஸ்லோவியாவின் இணைத்துக்கொள்ளப்பட்ட பகுதிகள்) செருமனியானது பொருளாதாரக் கொள்கைகளை நிறுவியது. இதன்மூலம், அது சுமார் 6,950 கோடி ரெயிச் மார்க்குகளை (2,780 கோடி ஐக்கிய அமெரிக்க டாலர்கள்) போரின் முடிவில் சேகரித்தது. இந்த அளவானது தொழில் பொருட்கள், இராணுவ உபகரணங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற பொருட்களைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு கொள்ளையடித்ததை உள்ளடக்கியிருக்கவில்லை.[133] இவ்வாறாக, இந்த ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நாடுகளில் இருந்து பெற்ற வருவாயானது செருமனி வரி மூலம் சேகரித்ததின் 40%க்கும் அதிகமாகும். போர் அதன் போக்கில் சென்று கொண்டிருந்த நேரத்தில், மொத்த செருமானிய வருவாயில் கிட்டத்தட்ட 40%மாக இந்த அளவு அதிகரித்தது.[134]

சோவியத் ஆதரவாளர்கள் செருமானிய இராணுவத்தால் தூக்கு தண்டனைக்கு உட்படுத்தப்படுதல். உருசிய அறிவியல் நிலையத்தின் 1995ஆம் ஆண்டு குறிப்புப்படி செருமானியர்களின் கையில் இறந்த சோவியத் ஒன்றியக் குடிமக்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது மொத்தம் 1.37 கோடியாக இருந்தது. இது சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட மொத்த மக்களான 6.8 கோடியில் 20% ஆகும்.

கிழக்கில் லெபென்சரவுமால் எதிர்பார்க்கப்பட்ட அனுகூலங்களை என்றுமே கிடைக்கவில்லை. ஏனெனில், சோவியத் நில எரிப்புக் கொள்கைகள் செருமானியப் படையெடுப்பாளர்களுக்கு வளங்கள் கிடைப்பதைத் தடுத்தது.[135] மற்றும் போர் முனைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலையற்ற தன்மை ஆகியவை காரணமாக மேற்கில் போல் இல்லாமல் இசுலாவிய வழித்தோன்றல்களைத் "தாழ்த்தப்பட்ட மக்களாகக்" கருதிய நாசி இனவெறிக் கொள்கையானது அவர்களுக்கு எதிராக அளவுக்கதிகமான மிருகத்தனத்தை ஊக்குவித்தது. பெரும்பாலான செருமானிய முன்னேற்றங்களுக்குப் பிறகு மொத்தமான படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டன.[136] பெரும்பாலான ஆக்கிரமிக்கப்பட்ட நிலப் பரப்புகளில் எதிர்ப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்ட போதும், 1943ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை கிழக்கிலோ[137] அல்லது மேற்கிலோ[138] இவை செருமானிய நடவடிக்கைகளைக் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பாதிக்கவில்லை.

ஆசியாவில் தனது ஆக்கிரமிப்புக்குக் கீழ் இருந்த நாடுகளை பெரிய கிழக்காசியச் செழிப்பு மண்டலத்தின் பகுதி எனக் குறிப்பிட்டது. இவை யப்பானிய ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த மக்களை விடுதலை செய்வது தமது நோக்கமென யப்பான் கூறியது. [139]ஐரோப்பிய ஆதிக்கத்தின் கீழ இருந்து விடுதலை செய்தவர்களாக யப்பானியப் படைகள் சில நேரங்களில் வரவேற்கப்பட்ட போதும், யப்பானியப் போர்க் குற்றங்கள் அடிக்கடி உள்ளூர் மக்களின் எண்ணங்களை யப்பானியர்களுக்கு எதிராகத் திருப்பியது.[140] யப்பானின் ஆரம்பப் படையெடுப்பின்போது, பின்வாங்கிய நேச நாடுகளின் படைகளால் விட்டுச்செல்லப்பட்ட 40 இலட்சம் பீப்பாய் எண்ணெயைக் கைப்பற்றியது. 1943ஆம் ஆண்டின் இறுதியில் டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகளில் 5 கோடி பீப்பாய் எண்ணெய் உற்பத்தியைப் பெற அதனால் முடிந்தது. இது 1940ஆம் ஆண்டின் உற்பத்தி விகிதத்தில் 76% ஆகும்.[140]

உள்நாட்டுப் போர் முனைகளும், உற்பத்தியும்[தொகு]

1938 மற்றும் 1945க்கு இடையில்
அச்சு நாடுகளின் மொத்த உள்நாட்டு
உற்பத்தியுடன் ஒப்பிடும்போது நேச நாடுகளின்
மொத்த உள்நாட்டு உற்பத்தி

ஐரோப்பாவில் போர் தொடங்குவதற்கு முன்னர் மக்கள்தொகையிலும், பொருளாதாரத்திலும் நேச நாடுகள் குறிப்பிடத்தக்க அளவுக்குச் சாதகமான அம்சங்களைக் கொண்டிருந்தன. 1938இல் மேற்கு நேச நாடுகள் (ஐக்கிய இராச்சியம், பிரான்சு, போலந்து மற்றும் பிரித்தானியப் பகுதிகள்) 30% அதிக மக்கள் தொகையையும், 30% அதிக உள்நாட்டு உற்பத்தியையும் ஐரோப்பிய அச்சு சக்திகளைக் (செருமனி மற்றும் இத்தாலி) காட்டிலும் கொண்டிருந்தன. காலனிகளையும் இதனுள் சேர்த்துக்கொண்டால் நேச நாடுகள் 5:1 சாதகத்தை மக்கள் தொகையிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 2:1 சாதகத்தையும் கொண்டிருந்தன.[141] இதே நேரத்தில், ஆசியாவில் யப்பானைப் போல் சீனா ஆறு மடங்கு மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. ஆனால், யப்பானை விட வெறும் 89% அதிகமான உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டிருந்தது. யப்பானியக் காலனிகளை இதனுடன் இணைக்கும் போது, இது 3:1 மக்கள் தொகையாகவும், வெறும் 38% அதிகமான உள்நாட்டு உற்பத்தியாகவும் குறைந்தது.[141]

இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் பயன்படுத்திய அனைத்துப் படைக்கலங்களில் சுமார் 3இல் 2 பங்கை ஐக்கிய அமெரிக்கா உற்பத்தி செய்தது. இதில் போர்க்கப்பல்கள், போக்குவரத்து வாகனங்கள், போர் விமானங்கள், சேணேவிகள், பீரங்கி வண்டிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவையும் அடங்கும்.[142] நேச நாடுகளின் பொருளாதார மற்றும் மக்கள் தொகை சாதக அம்சங்களின் பயனானது செருமனி மற்றும் யப்பானின் ஆரம்ப வேகமான தாக்குதலின் போது பெரும்பாலும் குறைவாக இருந்தபோதும், 1942ஆம் ஆண்டு வாக்கில் அவை மிக முக்கியமான காரணிகளாக விளங்கின. ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் 1942இல் நேச நாடுகளுடன் இணைந்தபோது, போரானது பெரும்பாலும் ஒரு உராய்வுப் போராக மாறியது.[143] நேச நாடுகளுக்கு இயற்கை வளங்கள் அதிகமாகக் கிடைத்ததால் அச்சு நாடுகளை விட பெரும்பாலும் நேச நாடுகளால் அதிக உற்பத்தியைச் செய்ய முடிந்தது எனக் கூறப்பட்டாலும்,[யாரால்?] மற்ற காரணிகளான பெண்களைப் பணிக்கு அமர்த்த செருமனி மற்றும் யப்பானின் தயக்கம்,[144] நேச நாடுகள் முக்கிய இடங்களைக் குறிவைத்து வெடிகுண்டு வீசியது,[145] செருமனி தாமதமாகவே ஒரு போர்ப் பொருளாதாரத்துக்கு மாறியது[146] ஆகியவையும் இதில் மிக முக்கியப் பங்காற்றின. மேலும், செருமனியோ அல்லது யப்பானோ எதிர்பார்த்ததை விட ஒரு நீண்ட காலப் போரைச் செய்வதற்கான திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை.[147] அவர்களிடம் அதற்கான உபகரணங்களும் குறைவாக இருந்தன. தங்களது உற்பத்தியை அதிகப்படுத்த செருமனி மற்றும் யப்பான் இலட்சக்கணக்கான அடிமைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தின.[148] பெரும்பாலும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பெறப்பட்ட சுமார் 1.2 கோடி மக்களை செருமனி இதற்காகப் பயன்படுத்தியது.[124] அதே நேரத்தில், தூரக் கிழக்காசியாவில் இருந்து பெறப்பட்ட 1.8 கோடி மக்களை யப்பான் பயன்படுத்தியது.[131][132]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Sommerville 2008, p. 5.
 2. Förster & Gessler 2005, p. 64.
 3. Masaya 1990, p. 4.
 4. "History of German-American Relations » 1989–1994 – Reunification » "Two-plus-Four-Treaty": Treaty on the Final Settlement with Respect to Germany, September 12, 1990". usa.usembassy.de. 6 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
 5. Murray & Millett 2001, pp. 57–63.
 6. Commager 2004, p. 9.
 7. Clogg 2002, p. 118
 8. Garver 1988, p. 114.
 9. Weinberg 2005, p. 195
 10. 10.0 10.1 10.2 10.3 Parker 2004, pp. xiii–xiv, 6–8, 68–70, 329–330 பிழை காட்டு: Invalid <ref> tag; name "parkerxiii" defined multiple times with different content
 11. Glantz 2001, p. 85.
 12. Beevor 2012, pp. 709–22.
 13. Buchanan 2006, p. 21.
 14. 14.0 14.1 Shepardson 1998. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Shepardson 1998" defined multiple times with different content
 15. 15.0 15.1 O'Reilly 2001, p. 244. பிழை காட்டு: Invalid <ref> tag; name "O'Reilly 2001 244" defined multiple times with different content
 16. Kershaw 2001, p. 823.
 17. 17.0 17.1 Evans 2008, p. 737.
 18. 18.0 18.1 Glantz 1998, p. 24.
 19. Chant, Christopher (1986). The Encyclopedia of Codenames of World War II. Routledge & Kegan Paul. பக். 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7102-0718-2. https://archive.org/details/encyclopediaofco0000chan. 
 20. John Dower (2007). "Lessons from Iwo Jima". Perspectives 45 (6): 54–56. http://www.historians.org/perspectives/issues/2007/0709/index.cfm. 
 21. 21.0 21.1 Drea 2003, p. 57.
 22. Jowett & Andrew 2002, p. 6.
 23. 23.0 23.1 Poirier, Michel Thomas (20 October 1999). "Results of the German and American Submarine Campaigns of World War II". U.S. Navy. 9 ஏப்ரல் 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 April 2008 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name "results of german and american submarines" defined multiple times with different content
 24. 24.0 24.1 Williams 2006, p. 90.
 25. 25.0 25.1 Miscamble 2007, pp. 203–4. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Miscamble 2007 203_204" defined multiple times with different content
 26. 26.0 26.1 Charles F. Brower (October 16, 2012). Defeating Japan: The Joint Chiefs of Staff and Strategy in the Pacific War, 1943-1945. Palgrave Macmillan. பக். 133–144. 
 27. 27.0 27.1 Glantz 2005.
 28. 28.0 28.1 28.2 Pape 1993. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Pape 1993" defined multiple times with different content
 29. 29.0 29.1 Beevor 2012, p. 776.
 30. Glantz 2001, p. 85.
 31. Beevor 2012, pp. 709–22.
 32. Buchanan 2006, p. 21.
 33. Kershaw 2001, பக். 793-829.
 34. Chant, Christopher (1986). The Encyclopedia of Codenames of World War II. Routledge & Kegan Paul. பக். 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7102-0718-0. 
 35. Long, Tony (9 March 2011). "March 9, 1945: Burning the Heart Out of the Enemy". Wired. Wired Magazine. 23 March 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 22 June 2018 அன்று பார்க்கப்பட்டது. 1945: In the single deadliest air raid of World War II, 330 American B-29s rain incendiary bombs on Tokyo, touching off a firestorm that kills upwards of 100,000 people, burns a quarter of the city to the ground, and leaves a million homeless.
 36. Jowett & Andrew 2002, p. 6.
 37. Zuberi, Matin (August 2001). "Atomic bombing of Hiroshima and Nagasaki". Strategic Analysis 25 (5): 623–662. doi:10.1080/09700160108458986. 
 38. Miscamble 2007, p. 201.
 39. Ward Wilson. "The Winning Weapon? Rethinking Nuclear Weapons in Light of Hiroshima". International Security, Vol. 31, No. 4 (Spring 2007), pp. 162–79.
 40. Glantz 2005.
 41. Bix, Hirohito and the Making of Modern Japan pp. 525-526
 42. Bix Hirohito and the Making of Modern Japan, pp. 526-528
 43. Frei 2002, pp. 41–66.
 44. Eberhardt, Piotr (2015). "The Oder-Neisse Line as Poland's western border: As postulated and made a reality". Geographia Polonica 88 (1): 77–105. doi:10.7163/GPol.0007. https://www.geographiapolonica.pl/article/item/9928.html. பார்த்த நாள்: 3 May 2018. 
 45. Eberhardt, Piotr (2006). Political Migrations in Poland 1939–1948. Warsaw: Didactica. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-5361-1035-7. https://www.igipz.pan.pl/en/zpz/Political_migrations.pdf. 
 46. 46.0 46.1 Eberhardt, Piotr (2011). Political Migrations On Polish Territories (1939–1950). Warsaw: Polish Academy of Sciences. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-83-61590-46-0. https://rcin.org.pl/Content/15652/WA51_13607_r2011-nr12_Monografie.pdf. பார்த்த நாள்: 3 May 2018. 
 47. Eberhardt, Piotr (2012). "The Curzon line as the eastern boundary of Poland. The origins and the political background". Geographia Polonica 85 (1): 5–21. doi:10.7163/GPol.2012.1.1. https://www.geographiapolonica.pl/article/item/7563.html. பார்த்த நாள்: 3 May 2018. 
 48. Roberts 2006, p. 43.
 49. Roberts 2006, p. 55.
 50. Shirer 1990, p. 794.
 51. Kennedy-Pipe 1995.
 52. Wettig 2008, pp. 20–21.
 53. Senn 2007, p. ?.
 54. Yoder 1997, p. 39.
 55. "History of the UN". United Nations. 18 February 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 January 2010 அன்று பார்க்கப்பட்டது.
 56. Waltz 2002.
  The UDHR is viewable here [1] பரணிடப்பட்டது 3 சூலை 2017 at the வந்தவழி இயந்திரம்
 57. The UN Security Council, 20 June 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது, 15 May 2012 அன்று பார்க்கப்பட்டது
 58. Kantowicz 2000, p. 6.
 59. Wettig 2008, pp. 96–100.
 60. Trachtenberg 1999, p. 33.
 61. Applebaum 2012.
 62. Naimark 2010.
 63. Swain 1992.
 64. Borstelmann 2005, p. 318.
 65. Leffler & Westad 2010.
 66. Weinberg 2005, p. 911.
 67. Stueck 2010, p. 71.
 68. Lynch 2010, pp. 12–13.
 69. Roberts 1997, p. 589.
 70. Darwin 2007, pp. 441–43, 464–68.
 71. Dear & Foot 2001, p. 1006; Harrison 1998, pp. 34–55.
 72. Balabkins 1964, p. 207.
 73. Petrov 1967, p. 263.
 74. Balabkins 1964, pp. 208, 209.
 75. "The Bretton Woods Conference, 1944". United States Department of State. 7 January 2008. 18 April 2022 அன்று பார்க்கப்பட்டது.
 76. DeLong & Eichengreen 1993, pp. 190, 191
 77. Balabkins 1964, p. 212.
 78. Wolf 1993, pp. 29, 30, 32
 79. Bull & Newell 2005, pp. 20, 21
 80. Ritchie 1992, p. 23.
 81. Minford 1993, p. 117.
 82. Schain 2001.
 83. Emadi-Coffin 2002, p. 64.
 84. Smith 1993, p. 32.
 85. Neary 1992, p. 49.
 86. Genzberger, Christine (1994). China Business: The Portable Encyclopedia for Doing Business with China. Petaluma, CA: World Trade Press. பக். 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-9631864-3-0. https://archive.org/details/chinabusinesspor0000genz/page/4. 
 87. Quick Reference Handbook Set, Basic Knowledge and Modern Technology (revised) by Edward H. Litchfield, Ph.D 1984 page 195
 88. O'Brien, Prof. Joseph V. "World War II: Combatants and Casualties (1937–1945)". Obee's History Page. John Jay College of Criminal Justice. 25 December 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
 89. White, Matthew. "Source List and Detailed Death Tolls for the Twentieth Century Hemoclysm". Historical Atlas of the Twentieth Century. Matthew White's Homepage. 7 March 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 20 April 2007 அன்று பார்க்கப்பட்டது.
 90. "World War II Fatalities". secondworldwar.co.uk. 22 September 2008 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 20 April 2007 அன்று பார்க்கப்பட்டது.
 91. Hosking 2006, p. 242
 92. Ellman & Maksudov 1994.
 93. Smith 1994, p. 204.
 94. Herf 2003.
 95. Florida Center for Instructional Technology (2005). "Victims". A Teacher's Guide to the Holocaust. University of South Florida. 16 May 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2 February 2008 அன்று பார்க்கப்பட்டது.
 96. 96.0 96.1 Niewyk & Nicosia 2000, pp. 45–52.
 97. Snyder, Timothy (16 July 2009). "Holocaust: The Ignored Reality". The New York Review of Books. https://www.nybooks.com/articles/2009/07/16/holocaust-the-ignored-reality/. பார்த்த நாள்: 27 August 2017. 
 98. "Polish Victims". www.ushmm.org. 7 May 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 27 August 2017 அன்று பார்க்கப்பட்டது.
 99. "Non-Jewish Holocaust Victims : The 5,000,000 others". பிபிசி. April 2006. https://www.bbc.co.uk/tyne/content/articles/2005/01/20/holocaust_memorial_other_victims_feature.shtml. 
 100. Evans 2008, pp. 158–60, 234–36.
 101. Redžić, Enver (2005). Bosnia and Herzegovina in the Second World War. New York: Tylor and Francis. பக். 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7146-5625-0. https://books.google.com/books?id=pVCx3jerQmYC&pg=PA155. பார்த்த நாள்: 18 August 2021. 
 102. Geiger, Vladimir (2012). "Human Losses of the Croats in World War II and the Immediate Post-War Period Caused by the Chetniks (Yugoslav Army in the Fatherand) and the Partisans (People's Liberation Army and the Partisan Detachments of Yugoslavia/Yugoslav Army) and the Communist Authorities: Numerical Indicators". Review of Croatian History (Croatian Institute of History) VIII (1): 117. https://hrcak.srce.hr/103223?lang=en. பார்த்த நாள்: 25 October 2015. 
 103. Massacre, Volhynia. "The Effects of the Volhynian Massacres" (in en). Volhynia Massacre. https://volhyniamassacre.eu/zw2/history/179,The-Effects-of-the-Volhynian-Massacres.html. 
 104. "Od rzezi wołyńskiej do akcji Wisła. Konflikt polsko-ukraiński 1943–1947" (in pl). dzieje.pl. https://dzieje.pl/aktualnosci/od-rzezi-wolynskiej-do-akcji-wisla-konflikt-polsko-ukrainski-1943-1947. 
 105. Rummell, R.J. "Statistics". Freedom, Democide, War. The University of Hawaii System. 23 March 2010 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 25 January 2010 அன்று பார்க்கப்பட்டது.
 106. Dear & Foot 2001, p. 182.
 107. Carmichael, Cathie; Maguire, Richard (2015). The Routledge History of Genocide. Routledge. பக். 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780367867065. 
 108. "A Culture of Cruelty". HistoryNet. 6 November 2017. 7 May 2022 அன்று பார்க்கப்பட்டது.
 109. Chang 1997, p. 102.
 110. Bix 2000, p. ?.
 111. Gold, Hal (1996). Unit 731 testimony. Tuttle. பக். 75–77. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8048-3565-7. 
 112. Tucker & Roberts 2004, p. 320.
 113. Harris 2002, p. 74.
 114. Lee 2002, p. 69.
 115. "Japan tested chemical weapons on Aussie POW: new evidence". The Japan Times Online. 27 July 2004. https://search.japantimes.co.jp/member/nn20040727a9.html. 
 116. Kużniar-Plota, Małgorzata (30 November 2004). "Decision to commence investigation into Katyn Massacre". Departmental Commission for the Prosecution of Crimes against the Polish Nation. Retrieved 4 August 2011.
 117. Robert Gellately (2007). Lenin, Stalin, and Hitler: The Age of Social Catastrophe. Knopf, ISBN 1-4000-4005-1 p. 391
 118. Terror from the Sky: The Bombing of German Cities in World War II. Berghahn Books. 2010. பக். 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84545-844-7. 
 119. John Dower (2007). "Lessons from Iwo Jima". Perspectives 45 (6): 54–56. https://www.historians.org/publications-and-directories/perspectives-on-history/september-2007/lessons-from-iwo-jima. பார்த்த நாள்: 17 April 2022. 
 120. Institute of National Remembrance, Polska 1939–1945 Straty osobowe i ofiary represji pod dwiema okupacjami. Materski and Szarota. page 9 "Total Polish population losses under German occupation are currently calculated at about 2 770 000".
 121. (2006). The World Must Know: The History of the Holocaust as Told in the United States Holocaust Memorial Museum (2nd ed.). Washington, DC: United States Holocaust Memorial Museum. ISBN 978-0-8018-8358-3.
 122. Herbert 1994, p. 222
 123. Overy 2004, pp. 568–69.
 124. 124.0 124.1 Marek, Michael (27 October 2005). "Final Compensation Pending for Former Nazi Forced Laborers". dw-world.de. Deutsche Welle. 2 May 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 January 2010 அன்று பார்க்கப்பட்டது.
 125. J. Arch Getty, Gábor T. Rittersporn and Viktor N. Zemskov. Victims of the Soviet Penal System in the Pre-War Years: A First Approach on the Basisof Archival Evidence. The American Historical Review, Vol. 98, No. 4 (Oct. 1993), pp. 1017–49
 126. Applebaum 2003, pp. 389–96.
 127. Zemskov V.N. On repatriation of Soviet citizens. Istoriya SSSR., 1990, No. 4, (in Russian). See also [2] பரணிடப்பட்டது 14 அக்டோபர் 2011 at the வந்தவழி இயந்திரம் (online version), and Bacon 1992; Ellman 2002.
 128. "Japanese Atrocities in the Philippines". American Experience: the Bataan Rescue. PBS Online. 27 July 2003 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 January 2010 அன்று பார்க்கப்பட்டது.
 129. Tanaka 1996, pp. 2–3.
 130. Bix 2000, p. 360.
 131. 131.0 131.1 Ju, Zhifen (June 2002). "Japan's atrocities of conscripting and abusing north China draughtees after the outbreak of the Pacific war". Joint Study of the Sino-Japanese War: Minutes of the June 2002 Conference. Harvard University Faculty of Arts and Sciences. 21 May 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
 132. 132.0 132.1 "Indonesia: World War II and the Struggle For Independence, 1942–50; The Japanese Occupation, 1942–45". Library of Congress. 1992. 30 October 2004 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 9 February 2007 அன்று பார்க்கப்பட்டது.
 133. Liberman 1996, p. 42.
 134. Milward 1992, p. 138.
 135. Milward 1992, p. 148.
 136. Barber & Harrison 2006, p. 232.
 137. Hill 2005, p. 5.
 138. Christofferson & Christofferson 2006, p. 156
 139. Radtke 1997, p. 107.
 140. 140.0 140.1 Rahn 2001, p. 266.
 141. 141.0 141.1 Harrison 1998, p. 3.
 142. Compare: Wilson, Mark R. (2016). Destructive Creation: American Business and the Winning of World War II. American Business, Politics, and Society (reprint ). Philadelphia: University of Pennsylvania Press. பக். 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8122-9354-8. https://books.google.com/books?id=AcqADAAAQBAJ. பார்த்த நாள்: 19 December 2019. "By producing nearly two thirds of the munitions used by Allied forces – including huge numbers of aircraft, ships, tanks, trucks, rifles, artillery shells, and bombs – American industry became what President Franklin D. Roosevelt once called 'the arsenal of democracy' [...]." 
 143. Harrison 1998, p. 2.
 144. Bernstein 1991, p. 267.
 145. Griffith, Charles (1999). The Quest: Haywood Hansell and American Strategic Bombing in World War II. Diane Publishing. பக். 203. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-58566-069-8. 
 146. Overy 1994, p. 26.
 147. BBSU 1998, p. 84; Lindberg & Todd 2001, p. 126..
 148. Unidas, Naciones (2005). World Economic And Social Survey 2004: International Migration. United Nations Pubns. பக். 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-92-1-109147-2. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_உலகப்_போர்&oldid=3613713" இருந்து மீள்விக்கப்பட்டது