எக்சாம்ப்
Appearance
எக்சாம்ப் (Xampp) என்பது இலவசமாக மற்றும் திறந்த மூலக்கூறக வழங்கப்படும் இணைய வழங்கி பொதியாகும், இது அப்பாச்சி வழங்கி, மையெசுக்யூயெல் தரவுத்தளம், மேலும் பி.எச்.பி, பேர்ல் இயைபாக்கிகளைக் கொண்டுள்ளது.
பெயர் வரலாறு
[தொகு]எக்சாம்ப் (xampp) என்ற பெயரின் விளக்கம்,
- X - (அனைத்து இயங்குதளத்திலும் செயற்படும்)
- A - அப்பாச்சி எச்.டி.பி சேவையகம்
- M - மையெசுக்யூயெல்
- P - பிஎச்பி
- P - பேர்ல்
இப் பொதியானது குனூ பொதுக் கட்டற்ற அனுமதியின்கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது. எக்சாம்ப் ஆனது மைக்கிரோசொப்ட் வின்டோசு, லினிக்சு, சோலாரிக்சு, மற்றும் மெக் ஓஎசு எக்ச் ஆகிய இயங்குதளங்களிக்கிற்காக உள்ளது.
தேவைப்பாடுகளும் வசதிகளும்
[தொகு]எக்சாம்பானது ஒரே ஒரு கோப்பின் மூலமாக இலகுவாக ஒழுங்கமைக்கக் கூடியதகும். தொடர்ச்சியாக இதன் புதிய பதிப்புக்கள் பதிவேற்றப்படுகின்றன. மேலும் பிஎச்பி நிர்வாகம் மற்றும் ஒப்பின் எசுஎசுஎல் வசதிகளையும் இது கொண்டுள்ளது. இது முழுமையான, சிறிய மற்றும் நிலையான பதிப்புக்கள் தரப்படுகின்றன.