ஊர்சுலா பர்ன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஊர்சுலா பர்ன்ஸ்
Ursula Burns
Ursula-Burns.jpg
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 20, 1958 (1958-09-20) (அகவை 62)
மன்ஹாட்டன், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்கா
அரசியல் கட்சி சனநாயகக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) லாயிட் பீன்
படித்த கல்வி நிறுவனங்கள் New York University
Columbia University
பணி முதன்மை செயல் அதிகாரி

ஊர்சுலா பர்ன்ஸ் (Ursula M. Burns, பிறப்பு: 20 செப்டம்பர் 1958) என்பவர் ஜெராக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும், முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். பார்ச்சூன் 500 என்னும் நிறுவனத்திற்கான தலைமையை ஏற்றுள்ள அமெரிக்க-ஆப்பிரிக்க முதல் பெண் இவர்தான். இந்நிறுவனத்தின் பொறுப்பிற்கு வந்துள்ள முதல் பெண்மணியும் இவர்தான்.[1] 2009ம் ஆண்டிற்கான அறிக்கையில் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை இவரை உலகின் 14வது சக்திவாய்ந்த பெண் என்று கூறியுள்ளது.[2]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

உருஸிலா பர்ன்ஸ் நியூயார்க் நகரத்தில் பொது வீட்டில் தனது தாயுடன் வளர்ந்தவர்.[3] இவரின் தாயும் தந்தையும் பனாமா நாட்டைச்சேர்ந்தவர்கள். பெண்கள் பயிலும் கதீட்ரல் உயர்நிலை பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் துவங்கினார். பின்னர் பொறியியல் பட்டமும், பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றார்.[4]

பணி[தொகு]

1980ம் ஆண்டு ஜெராக்ஸ் நிருவனத்தில் வேலையில் சேர்ந்தார்.[5] பின்னர் அதே நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளில் வேலையில் இருந்துள்ளார். 2010ம் ஆண்டு அந்த நிறுவனத்திலேயே தலைமைச்செயல் பெண் அதிகாரியானார்.[5]

சமூக நடவடிக்கைகள்[தொகு]

உருஸிலா பர்ன்ஸ் எக்சான் மோபில்,[6] அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், போஸ்டன் சயின்டிபிக், பர்ஸ்ட், மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம், மற்றும் ரோஸ்டர் பல்கலைக்கழகம் போன்றவற்றில் இயக்குனர் குழுவில் இடம்பெற்றுள்ளார். 2013- 2014ம் ஆண்டுக்கான அமெரிக்க வர்த்தக சபையின் துணைத்தலைவியாக உள்ளார்.[7][8]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் தன்னுடன் பணியாற்றும் லாயிட் பீன் என்பவரை மணமுடித்துள்ளார். இவருக்கு மெலிசா என்ற ஒரு மகளும் (பிறப்பு 1992), ஸ்டீவன் மால்கம் என்ற ஒரு மகனும் (பிறப்பு 1989) உள்ளார்கள்.

மேற்கோள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்சுலா_பர்ன்ஸ்&oldid=2302769" இருந்து மீள்விக்கப்பட்டது