உஷா மிட்டல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உஷா மிட்டல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
SNDT Seal
வகைமகளிர் பொறியியல் கல்லூரி
உருவாக்கம்1997
முதல்வர்முனைவர் யோகேஷ் நெர்கர்
கல்வி பணியாளர்
32
அமைவிடம்
ஜுஹு-தாரா சாலை, சர் விட்டல்தாஸ் வித்யாவிஹார், சாண்டாக்ரூஸ்(மே)
, , ,
வளாகம்பெருநகர்
இணையதளம்கல்லூரி இணையதளம்

உஷா மிட்டல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் என்பது இந்தியாவின் மும்பையில் 1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு மகளிர்பொறியியல் கல்லூரி ஆகும். திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள இக்கல்லூரி முன்னதாக பெண்களுக்கான தொழில்நுட்ப நிறுவனம் (ITW) என அறியப்பட்டது.

இந்த கல்லூரியானது தி. ந. தா. தா. மகளிர் பல்கலைக்கழகத்தால் நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது மேலும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரி, தற்போது 800க்கும் மேற்பட்ட மாணவர்கள், 50 ஆசிரியர்கள் அடங்கியதும் மும்பையில் உள்ள ஒரே பெண் பொறியியல் நிறுவனமுமாகும். உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்பத் துறையில் நிகழும் மாற்றங்களை அவ்வப்போது கவனித்து அதற்க்கேற்றாற்ப் போல பாடத்திட்டங்களை அமைத்து பயிற்றுவிக்கப்படும் இக்கல்லூரியானது நாட்டின் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்களுடன் கல்வி பிணைப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

வரலாறு[தொகு]

தி. ந. தா. தா கல்வி நிறுவனம், பெண்களுக்கான தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெயரில் 1997 ஆம் ஆண்டில் மகரிஷி டாக்டர் தோண்டோ கேசவ் கார்வே என்பவரால் நிறுவப்பட்டது.

லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் அறக்கட்டளையின் தாராள நன்கொடையின் காரணமாக இந்த நிறுவனம் உஷா மிட்டல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் என்று பெயர் மாற்றப்பட்டது.

படிப்புகள்[தொகு]

இந்தக்கல்லூரியில்


குழுக்கள்[தொகு]

இக்கல்லூரியில் பல கணிணி நிறுவனங்களின் மாணவர் பிரிவுகளை ஏற்ப்படுத்தப்பட்டுள்ளன:

2009 ஆம் ஆண்டில், ACM மாணவர்கள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அளவிலான மாநாட்டு-தொழில்நுட்ப விழாவான ' டெக் டொர்னாடோ ' ஐ இக்கல்லூரி மாணவர் பிரிவு நடத்தியுள்ளது. அதன் தலைவராக டாக்டர் டிஜே மேத்யூ இருந்துள்ளார். அதன் கோப்பையை பி.எஸ்.ஜி கோயம்புத்தூர் கல்லூரி வென்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Welcome to UMIT". Archived from the original on 2012-04-26.