உவர்விரும்பி
உவர்விரும்பிகள் அல்லது உப்பு விரும்பிகள் (halophiles) என்பது ஒரு உச்சவிரும்பியாகும். உவர்விரும்பிகள் என்பவை தங்கள் வாழிடச் சூழலில் உப்பு இல்லாமல் வாழ இயலாத உயிரினங்கள் ஆகும். பெரும்பாலான உப்பு விரும்பிகள் ஆர்க்கியா தொகுதியினங்களாகும். எனினும் சில பாக்டீரியங்களும் உப்பு விரும்பிகளாக உள்ளன.
உப்பு விரும்பிகளும் உப்பு சகிப்பிகளும் ஒன்றல்ல. உப்பு விரும்பிகளுக்கு உப்பின்றி வாழ்வில்லை. உப்பு சகிப்பிகளுக்கு உப்பிருந்தாலும் வாழ்வுண்டு. இல்லாது போனாலும் வாழ்வுண்டு.[1]
வகைப்பாடு
[தொகு]உலர்விரும்பிகள் அவற்றின் உப்பு சகிப்புத்தன்மையின் அளவின் மூலம் வகைப்படுத்தப்படுகின்றன: குறைந்த, மிதமான அல்லது தீவிர உவர் விரும்பிகள் என்பன இந்த வகைப்பாடாகும். குறைந்த உப்பு விரும்பிகள் லேசான 0.3 முதல் 0.8 மோ (1.7 முதல் 4.8%-கடல் நீர் 0.6 மோ அல்லது 3.5%), மிதமான உப்பு விரும்பிகள் 0.8 முதல் 3.4 மோ (4.7 முதல் 20%), தீவிர உப்பு விரும்பிகள் 3.4 முதல் 5.1 மோ (20 முதல் 30%) உப்பு உள்ளடக்கத்தை விரும்புகின்றன.[2] உப்பு விரும்பிகளுக்கு சோடியம் குளோரைடு (உப்பு) வளர்ச்சிக்காகத் தேவைப்படுகிறது. ஆனால் உப்பு சகிப்புத்தன்மை கொண்ட உயிரினங்களுக்கு சோடியம் குளோரைடு வளர்ச்சிக்காகத் தேவைப்படாது. ஆனால் உப்புத்தன்மை நிறைந்த இடத்தில் வளரக்கூடியது.
உசாத்துணை
[தொகு]- சிந்தனைத் தேடல் நூலகத்தில் உப்புவிரும்பிகள் பற்றிய தகவல் - ஆங்கிலத்தில் பரணிடப்பட்டது 2012-09-07 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Marion, Giles M.; Fritsen, Christian H.; Eicken, Hajo; Payne, Meredith C. (2003-12-01). "The search for life on Europa: Limiting environmental factors, potential habitats, and Earth analogues". Astrobiology 3 (4): 785–811. doi:10.1089/153110703322736105. பன்னாட்டுத் தர தொடர் எண்:1531-1074. பப்மெட்:14987483. Bibcode: 2003AsBio...3..785M. https://www.liebertpub.com/doi/abs/10.1089/153110703322736105.
- ↑ "Anaerobic bacteria from hypersaline environments". Microbiological Reviews 58 (1): 27–38. March 1994. doi:10.1128/MMBR.58.1.27-38.1994. பப்மெட்:8177169.