உழவர் சந்தை (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உழவர் சந்தை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தேனி உழவர் சந்தை

தமிழ்நாட்டில் காய்கறிகள், பழங்கள் பயிரிடும் விவசாயிகள் அவர்கள் பயிர் செய்தவற்றை அவர்களே இடைத் தரகர்கள் ஏதுமின்றி நேரடியாக விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு அரசு தமிழகத்தின் பல இடங்களில் உழவர் சந்தைகளை அமைத்துள்ளது.

 • உழவர் சந்தைகள் காலை 5.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்படுகின்றன.
 • தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மூலம் குறிப்பிட்ட நேரங்களில், அருகிலுள்ள சில பகுதிகளிலிருந்து உழவர் சந்தைக்குப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. உழவர் சந்தைக்கான பேருந்துகளில் சுமைக்கட்டணம் இல்லை.
 • உழவர் சந்தையில் விற்பனை மேற்கொள்ள விவசாயிகளுக்குத் தனி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை பெற்றவர் தவிர அவருடைய குடும்ப உறுப்பினர்கள் சந்தைக்கு உற்பத்திப் பொருட்களைக் கொண்டு வரக்கூடும் என்கிற நோக்கத்தில் குடும்ப உறுப்பினர்கள் படமும் அந்த அடையாள அட்டையில் இடம் பெற்றுள்ளன.
 • உழவர் சந்தை ஒவ்வொன்றிற்கும் தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உழவர் சந்தையில் சுமார் 4 இடங்களில் விலைப்பட்டியல் கொண்ட பலகை வைக்கப்பட்டுள்ளன.
 • உழவர் சந்தை விலைகளை அதற்காக நியமிக்கப்பட்ட குழு நாள்தோறும் நிர்ணயிக்கிறது.

புதுமொழிகள்[தொகு]

உழவர் சந்தை குறித்த புதுமொழிகள் சில.

 • உழவர் சந்தை; உங்கள் சந்தை
 • விளைய வைப்பதும் உழவரே; விலையை வைப்பதும் உழவரே.
 • நல்ல காய்கறிகள் நல்கிடும் உழவர்க்குக் கொள்ளை லாபம் குறிக்கோள் அல்ல.
 • புத்தம்புதுக் காய்கறிகள், என்ன விந்தை! நித்தம் வழங்கிடும் உழவர் சந்தை!!
 • இடைத்தரகர் இல்லாமல் காய்கறிக் கடை விரித்தனர் உழவர்.
 • வாடிக்கையாளருக்கு வாடாத காய்கறிகள் தேடிக் கொணர்ந்த தொல்லுழவர்.