உலொக்கிரி
லோக்ரி | |
---|---|
Città di Locri | |
நாடு | இத்தாலி |
மண்டலம் | கலபிரியா |
Frazioni | Moschetta, San Fili, Baldari |
அரசு | |
• நகரத் தந்தை | கியூசெப் லோம்பார்டோ(2011 இல் இருந்து) |
பரப்பளவு | |
• மொத்தம் | 25 km2 (10 sq mi) |
மக்கள்தொகை (30 ஏப்ரல் 2010)[1] | |
• மொத்தம் | 12,845 |
இனம் | Locresi |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
அஞ்சல் குறியீடு | 89044 |
Dialing code | 0964 |
பாதுகாவல் புனிதர் | St. Catherine |
புனிதர் நாள் | நவம்பர் 24 |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
லோக்ரி (Locri) என்பது தெற்கு இத்தாலியின் கலாப்ரியா , ரெஜியோ கலாப்ரியா மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் கம்யூன் (நகராட்சி) ஆகும். இதன் பெயர் பண்டைய கிரேக்க பகுதியான லோக்ரிஸ் என்பதிலிருந்து வந்தது. இன்று இது அயோனியன் கடற்கரையிலும் அதன் மாகாணத்திலும் ஒரு முக்கியமான நிர்வாக மற்றும் கலாச்சார மையமாக உள்ளது.
வரலாறு
[தொகு]நடு கிரேக்கத்தில் உள்ள லோக்ரிஸ் என்ற பகுதியில் இருந்து ஓடிவந்த கீழ்மக்கள் சிலர் சேர்ந்து இந்த நகரத்தை உருவாக்கினர் எனப்படுகிறது. இதனாலேயே இது லோக்ரி என்று அழைக்கப்பட்டது. கீழ்மக்களால் உருவாக்கபட்டதால் இது முதலில் ஒழுங்கான சட்டதிட்டங்களைக் கொண்டதாக இருக்கவில்லை. இதனால் தங்கள் நகரத்துக்கு ஒழுங்கான சட்டதிட்டங்களை வகுத்துக் கொடுக்கும்படி , டெல்பி கோயில் பூசாரிகளிடம் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பத்திற்கு இசைய ஜாலூக்கஸ் என்ற முன்னாள் அடிமை கி.மு. 664 ஆம் ஆண்டு நகரத்திற்கான சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். பண்டைய கிரேக்கத்திலேயே முதன்முதலில் எழுத்திலே உருவாக்கப்பட்ட சட்டம் இது ஆகும்.
ஒரு புதிய சட்டத்தை அல்லது ஏற்கனவே உள்ள ஒரு சட்டத்தை மாற்றியமைக்க யாரேனும் முன்மொழிந்தால், அவர் கழுத்தில் கயிற்றுடன் குடியுரிமை மன்றத்தில் நேர் நிற்க வேண்டும். மன்றம் அவரின் முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்தால், முன்மொழிந்தவர் கழுத்து உடனடியாக நெரிக்கப்படும்.[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ All demographics and other statistics from the Italian statistical institute (Istat)
- ↑ This anecdote is cited by Edward Gibbon in his discussion of the origin of Roman jurisprudence and of the Twelve Tables in particular in Chapter XLIV of The History of the Decline and Fall of the Roman Empire.