உள்ளடக்கத்துக்குச் செல்

உலூத்விக் சுத்ரூவ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1901 இல் ஸ்த்ரூவ

குசுத்தாவ் வில்கெல்ம் லூத்விக் ஸ்த்ரூவ ('Gustav Wilhelm Ludwig Struve, நவம்பர் 1, 1858 – நவம்பர் 4, 1920[1]) என்பவர் உருசிய வானியலாளர் ஆவார். உருசிய மொழியில் இவர் லியூத்விக் ஒத்தோவிச் ஸ்த்ரூவ (Людвиг Оттович Струве) அல்லது லியூத்விக் ஒத்தனோவிச் ஸ்த்ரூவ (Людвиг Оттонович Струве) என்றும் அழைக்கப்படுகிறார்.

இளமைக்காலமும் கல்வியும்

[தொகு]

லூத்விக் ஸ்த்ரூவ புனித பீட்டர்சுபர்க் நகரின் அருகேயுள்ள த்சார் கிராமத்தில் ஓட்டோ வொன் ஸ்ட்ரூவ், எமிலி திர்சன் ஆகியோருக்கு 1858 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தனது குடும்பப் பாரம்பரியத்தின் படி 1876 முதல் 1880 வரை தார்த்து பல்கலைக்கழகத்தில் (இன்றைய எசுத்தோனியாவில்) வானியல் கல்வி பயின்றார். பட்டப்படிப்புக்குப் பின்னர் தனது தந்தையாரின் கீழ் இயங்கி வந்த பூல்க்கோவா வான்காணகத்தில் பட்டப்பின் படிப்பைத் தொடர்ந்தார். 1883 இல் முனைவர் (PhD) பட்டம் பெற்றார். 1983 முதல் 1986 வரை பான், மிலன், பாரிஸ், லைப்சிக் ஆகிய இடங்களிலுள்ள வான்காணகங்களுக்கு சென்று ஆய்வுகளைத் தொடர்ந்தார். 1886 முதல் 1894 வரை தார்த்து வான்காணகத்தில் வானியலாளராகப் பணியாற்றினார். தனது ஐரோப்பியப் பயணங்களின் போது அவதானிக்கப்பட்ட தனது முடிவுகளைக் கொண்டு 1887 இல் habilitation (அறிவியலில் டாக்டர்) பட்டம் பெற்றார்.[2][3][4][5]

ஆய்வு

[தொகு]
கார்கீவ் வான்காணகம், 1914.

தந்தையின் இளைப்பாறலுக்கு சிறிது காலத்தின் பின்னர், 1894 இல் குஸ்தாவ் கார்கீவ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றச் சென்றார். அங்கு 1897 இல் வானியலிலும், புவியுருவவியலிலும் பேராசிரியராகவும், அங்குள்ள வான்கானகத்தின் இயக்குனராகவும் பதவியேற்றார். 1912 இல் கார்கீவ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், மற்றும் கணித்த் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2][4][5] 1919இல் சிம்பெரோபோலில் பேராசிரியரானார். அங்கு அவர் தாரிசு பல்கைக்கழகப் பேராசிரியரானார். 1920 இல் காலமானார்.

வானியல் தகைமை

[தொகு]

இவரது தந்தையார் தலையாட்ட மாறிலி குறித்து ஆய்வுசெய்ய, சூரியக் குடும்பப் பரிப்புகள் அனைத்திலும் இவர் ஆய்வு மேற்கொண்டார்.இவர் விண்மீன்களின் பரிப்பாய்விலும் இருப்புகளாய்விலும் ஈடுபட்டு நம் பால்வழியின் சுழல்வீதத்தை/சுழல்வேகத்தை மதிப்பீடு செய்தார். மேலும் இவர் முழு நிலா ஒளிமறைப்பின்போது நிகழும் விண்மீன் மறைப்பில் சிறப்புப் பயிற்சி உடையவர்.இவர் வான்புள்ளியியலிலும் சூரியப் பரிப்பிலும் (இயக்கத்திலும்) புலமைச் சான்றவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Obituary Notes of Astronomers at www.astro.uni-bonn.de
  2. 2.0 2.1 Balyshev Marat. Otto Ludwigovich Struve (1897-1963).- Moscow: Nauka, 2008. - 526 p.
  3. "Struve, (Gustav Wilhelm) Ludwig (Ottovich) von (1858-1920)". Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 2015-05-01.
  4. 4.0 4.1 Artemenko, T. G.; Balyshev, M. A.; Vavilova, I. B. (2009). "The struve dynasty in the history of astronomy in Ukraine". Kinematics and Physics of Celestial Bodies 25 (3): 153. doi:10.3103/S0884591309030040. Bibcode: 2009KPCB...25..153A. 
  5. 5.0 5.1 Balyshev Marat. Ludwig Ottowich Struve. Notes of Historian (2007) பரணிடப்பட்டது 2011-08-31 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலூத்விக்_சுத்ரூவ&oldid=3940857" இலிருந்து மீள்விக்கப்பட்டது