உள்ளடக்கத்துக்குச் செல்

உலக பருப்பு தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக பருப்பு தினம் (World Pulses Day) என்பது ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் (FAO) கொண்டாடப்படும் பன்னாட்டுத் தினமாகும். இது பருப்பு வகைகளின் முக்கியத்துவத்தை (அவரையினம், மைசூர் பருப்பு, பட்டாணி, கொண்டைக் கடலை, லூபின்கள்) உலகளாவிய உணர்த்தவும் அங்கீகாரம் செய்யவும் வழிவகைச் செய்கின்றது.[1]

விளக்கம்

[தொகு]

இது டிசம்பர் 20, 2018 அன்று ஐக்கிய நாடுகள் அவையின் எழுபத்து மூன்றாவது அமர்வில் 2019 முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 அன்று அனுசரிகக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது. உலகெங்கிலும் பருப்பு குறித்த செயல்பாடுகளையும் தகவல்களையும் ஒருங்கிணைக்க இது வாய்ப்பாக அமைக்கின்றது.

நோக்கம்

[தொகு]

உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை நோக்கமாகக் கொண்ட நிலையான உணவு உற்பத்தியின் ஒரு பகுதியாகப் பருப்பு வகைகளின் ஊட்டச்சத்து நன்மைகள் பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உலக பருப்பு தினம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

இது ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலுடன் இணைக்கப்பட்டுள்ளது - உலகளாவிய அமைதியை வலுப்படுத்த முற்படும் வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள் விரிவான தொகுப்பாகும்.

உலக பருப்பு தினம் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பினால் 2016ஐ பன்னாடு பருப்பு ஆண்டாக அறிவித்தபோது பெறப்பட்ட செயல்பாட்டின் வேகத்தினை தொடர்ந்து பராமரிக்கின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. [https://pulses.org/world-pulses-day Main hub host website for World Pulses Day, links WPD sites from around the world, in various languages[
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_பருப்பு_தினம்&oldid=3159806" இலிருந்து மீள்விக்கப்பட்டது