உலகளாவிய பல்லுயிர் தகவல் வசதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகளாவிய பல்லுயிர் தகவல் வசதி
வலைத்தள வகைஉயிரியற் பல்வகைமை, இயற்கை வரலாறு
சேவைத்தளங்கள்உலகம் முழுவதும்
வணிக நோக்கம்இல்லை
வெளியீடு2001; 22 ஆண்டுகளுக்கு முன்னர் (2001)
தற்போதைய நிலைசெயலில்
உரலிwww.gbif.org


உலகளாவிய பல்லுயிர் தகவல் வசதியின் 'பங்கேற்பாளர்கள்' என்பது பல்லுயிர் தரவுகளுக்கான இலவச மற்றும் திறந்த அணுகலை முன்னேற்றுவதற்கு ஒத்துழைக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் ஆகும். வரைபடம்: 15 சூன் 2020 அன்றைய நிலவரப்படி பங்கேற்கும் நாடுகள் .

உலகளாவிய பல்லுயிர் தகவல் வசதி (Global Biodiversity Information Facility-GBIF) என்பது ஒரு சர்வதேச அமைப்பாகும். இது இணைய வலைத்தள சேவைகளைப் பயன்படுத்தி இணையம் வழியாகப் பல்லுயிர் பற்றிய அறிவியல் தரவுகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.[1] உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்களால் தரவு வழங்கப்படுகிறது. உலகளாவிய பல்லுயிர் தகவல் வசதியின் தகவல் கட்டமைப்பானது இந்தத் தரவை அணுகக்கூடியதாகவும் ஒரே புறையம் மூலம் தேடக்கூடியதாகவும் ஆக்குகிறது. உலகளாவிய பல்லுயிர் தகவல் வசதி மூலம் கிடைக்கும் தரவுகள், தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகள் மற்றும் அறிவியல் பெயர்கள் ஆகியன முதன்மையான தரவு ஆகும்.

நோக்கம்[தொகு]

உலகளாவிய பல்லுயிர் தகவல் வசதியின் நோக்கம், நிலையான வளர்ச்சியை ஆதரிக்க, உலகளவில் பல்லுயிர் தரவுகளுக்கான இலவச மற்றும் திறந்த அணுகலை எளிதாக்குவதாகும்.[1] முன்னுரிமைகள், பங்கேற்பு மற்றும் கூட்டாளிகள் மூலம் பணியாற்றுவதில் முக்கியத்துவத்துடன், பல்லுயிர் தரவைத் திரட்டுதல், அறிவியல் ஒருமைப்பாடு மற்றும் இயங்கு நிலையை உறுதி செய்வதற்கான நெறிமுறைகள் மற்றும் தரநிலைகளை உருவாக்குதல், வேறுபட்ட ஆதாரங்களிலிருந்து பல்வேறு தரவு வகைகளை இணைக்க அனுமதிக்கும் தகவல் கட்டமைப்பை உருவாக்குதல், திறன் மேம்பாடு மற்றும் வினையூக்கத்தை மேம்படுத்துதலுடன் மேம்படுத்தப்பட்ட முடிவெடுப்பதற்கான பகுப்பாய்வுக் கருவிகளின் வளர்ச்சி ஆகியவை அடங்கும்.[1][2]

உலகளாவிய பல்லுயிர் தகவல் வசதியானது உயிரியல் அமைப்பின் துறை முழுவதிலுலிருந்து மரபணுக்கள் முதல் சுற்றுச்சூழல் அமைப்புகள் வரையுள்ள எண்ணிம தரவு வளங்களுக்கு இடையே தகவல் தொடர்புகளை உருவாக்க முயல்கிறது. மேலும் புவியியல் மற்றும் புவியியல் தகவல் முறைமை கருவிகளைப் பயன்படுத்தி அறிவியல், சமூகம் மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியமான பிரச்சினைகளுடன் இவற்றை இணைக்கிறது. இது உயிரியல் கூட்டாண்மை பட்டியல், பல்லுயிர் தகவல் தரநிலைகள், உயிர்களுக்கான பட்டைக்குறியீடு கூட்டமைப்பு, உயிரி கலைக்களஞ்சியம் மற்றும் ஜியோசு போன்ற பிற சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. உலகளாவிய பல்லுயிர் தகவல் வசதி மூலம் கிடைக்கும் பல்லுயிர் தரவு கடந்த பத்தாண்டுகளில் குடிமக்கள் விஞ்ஞானிகளின் பங்கேற்பின் காரணமாக 1,150%க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.[3][4]

விருது[தொகு]

2002 முதல் 2014 வரை, உலகளாவிய பல்லுயிர் தகவல் வசதியானது பல்லுயிர் தகவல் துறையில் ஒரு மதிப்புமிக்க வருடாந்திர உலகளாவிய விருதை வழங்கியது. எபி நீல்சென் பரிசு, இதன் மதிப்பு €30,000 ஆகும். 2018-ல் உலகளாவிய பல்லுயிர் தகவல் வசதி செயலகம் இரண்டு, ஆண்டு பரிசுகளை வழங்கியது: உலகளாவிய பல்லுயிர் தகவல் வசதிஎபி நீல்சன் சவால் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்கள் விருது.[5]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • ஏபிசிடி திட்டம்
  • டார்வின் கோர்
  • உலகளாவிய பல்லுயிர்
  • மின்னணு தாவரங்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]