உருய் உலோப்பசு, மார்டைமர் பொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
abcdefgh
8
Chessboard480.svg
a8 black rook
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
h8 black rook
a7 black pawn
b7 black pawn
d7 black pawn
e7 black knight
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
c6 black pawn
f6 black knight
b5 white bishop
e5 white knight
e4 white pawn
d3 white pawn
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
5...c6.என்ற நகர்வுக்குப் பின்னர் கருப்பு ஒரு காயைக் கைப்பற்றுகிறது.

சதுரங்கத்தில் மார்டைமர் வலை அல்லது மார்டைமர் பொறி (Mortimer Trap) என்பது உருய் உலோப்பசு திறப்பு முறையிலான ஆட்டத்தின் தொடக்க நிலையில் விரிக்கப்படும் ஒரு வகையான வலையாகும். முதன் முதலில் இவ்வலை விரிப்பு நுணுக்கத்தை கண்டறிந்தவர் ஜேம்சு மார்டைமர் என்பதால், இவ்வுத்தி அவருடைய பெயராலேயே அழைக்கப்படுகிறது. கருப்புக் காய்களுடன் ஆடும் வீரர் நம்பிக்கையுடன் அப்பட்டமாக ஒரு தவறான நகர்வை செய்து வெள்ளைக் காய்களுடன் விளையாடும் வீரரை தவறிழைக்கச் செய்யுமாறு தூண்டும் உணர்வுபூர்வமான, உண்மையான வலைவிரிப்புத் திட்டம் இங்கு கையாளப்படுகிறது.

பகுப்பாய்வு[தொகு]

1.e4 e5 2. Nf3 Nc6 3. Bb5 Nf6

உருய் உலோப்பசு முறையிலான திறப்பாட்டத்திற்குப் பதிலாக கருப்பு காய்களுடன் விளையாடுபவர் பெர்லின் தற்காப்பு விளையாடும் போதே வலைவிரிப்பு தொடங்கிவிடுகிறது. இருபதாம் நூற்றாண்டைக் காட்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெர்லின் தற்காப்பு பிரபலமாக ஆடப்பட்டது. விளாடிமிர் கிரம்னிக் பெர்லின் தடுப்பாட்ட உத்தியை பிரதானமாக விளையாடித்தான் 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் காரி காசுபரோவை வெற்றி கொண்டார். இதனால்தான் இத்தடுப்பாட்டம் அக்காலத்தில் பிரபலமாக இருந்தது."[1]

4. d3

வெள்ளைக் காய்களுடன் ஆடுபவர்கள் 4.0-0, 4.d4, அல்லது 4.Nc3 என்ற நகர்வுகளில் ஒன்றைத்தான் தன்னுடைய நான்காவது நகர்வாக வழக்கமாக விளையாடுவார்கள். கடைசியாகக் கூறப்பட்ட 4.Nc3 நகர்வு இந்த ஆட்டத்தை நான்கு குதிரைகள் ஆட்டத்திற்கு அழைத்துச் சென்று விடும். ஆனால் இங்கு 4.d3 என்று ஆடப்படுகிறது. இந்த 4.d3 நகர்வை சிடெய்ன்சு நகர்வு என்று ஓரோவிட்ச் மற்றும் ரீன்பெல்டு ஆகியோர் எழுதியுள்ளனர். உலகச் சாம்பியனாக இருந்த சிடெய்ன்சு இந்நகர்வின் மூலமாக பல அற்புதமான வெற்றிகளை அடைந்திருக்கிறார்.[2]

4....Ne7

கருப்பின் நான்காவது இந்நகர்வுதான் மார்டைமர் தற்காப்பு நகர்வு என்பதாகும். தன் குதிரையை g6 சதுரத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் e5 சிப்பாய்க்கு அளித்துவந்த பாதுகாப்பை மறந்து 4... Ne7 என அப்பட்டமாகத் தவறாக விளையாடி கருப்பு காய்களுடன் விளையாடுபவர் நேர விரயம் செய்வது போலத் தோன்றுகிறது. ஆனால் இந்நகர்வுதான் வலை பின்னும் திட்டத்தை தொடங்குகிறது. இதற்குப் பதிலாக வெள்ளை காய்களுடன் ஆடுபவருக்கு பல்வேறு நகர்வு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் e5 இல் தனித்திருக்கும் கருப்பு சிப்பாய் Nc3 வெள்ளைக் குதிரையின் கண்களை உறுத்துகிறது. எனவே அவர்,

5. Nxe5?

இந்த நகர்த்தலில் வெள்ளை ஆட்டக்காரர் கருப்பு சிப்பாயைக் கைப்பற்றுகிறார். தன் ஒரு சிப்பாயை இழந்த கருப்பு,

5..... c6

கருப்பு இந்த நகர்வை விளையாடுகிறார் (படத்தைப் பார்க்க). கருப்பு இந்நகர்வின் மூலமாக Bb5 இல் உள்ள வெள்ளை அமைச்சரை அச்சுறுத்துகிறார். வெள்ளை தன் அமைச்சரை காப்பாற்றிக் கொள்ள 6.Ba4 அல்லது 6.Bc4, இவற்றில் எந்த நகர்த்தலைச் செய்தாலும் கருப்பு 6...Qa5+ என்று அடுத்த நகர்வை விளையாடி இராசாவுக்கு முற்றுகை வைத்து ஒரே நேரத்தில் ராசா மற்றும் e5 குதிரை மீது இரட்டைத் தாக்குதலும் நிகழ்த்தப் போகிறார். எனவே வெள்ளை,

6. Nc4

வெள்ளை அடுத்ததாக இந்த நகர்வை ஆடுகிறார்இந்நிலையில் வெள்ளை ஆட்டக்காரரின் சிறந்த முயற்சியாக இந்நகர்வு உள்ளது. ஏனெனில், இந்நகர்வு கருப்பு இராணியை a5 கட்டத்திற்கு வரவிடாமல் தடுக்கவும் செய்கிறது. அதேவேளையில் அடுத்த நகர்வில் கருப்பு இராசாவை இறுதி முற்றுகையில் 7.Nd6# என்று வீழ்த்தவும் ஒரு வாய்ப்பை அவருக்குத் தருகிறது.

6... d6! 7. Ba4 b5

ஆனால் கருப்பு தன்னுடைய 6... d6! மற்றும் 7. b5 என்ற நகர்வுகளால் வெள்ளையின் மீது இரட்டைத் தாக்குதல் நிகழ்த்தி எதிரியின் குதிரை அல்லது அமைச்சரை கைப்பற்றுகிறார். இறுதியில் கருப்பு இரண்டு சிப்பாய்களை இழந்து அவற்றிற்குப் பதிலாக ஒரு குதிரை அல்லது அமைச்சரை கைப்பற்றி வெற்றிக்கான பாதையில் செல்வது புரியும்.

அலசல்[தொகு]

மார்டைமர் தன்னுடைய தற்காப்பு ஆட்டத்தை இலண்டனில் 1883 ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் பெர்தோல்டு இங்கிலிச், சாமுவேல் ரோசெந்தால் மற்றும் சோசப் நோவா ஆகிய மூன்று வீரர்களுக்கு எதிராக விளையாடினார். ஆனால் மூன்று ஆட்டங்களிலும் தோல்வியே அடைந்தார்.[3] அப்போட்டித்தொடரில் இறுதியாக வெற்றி பெற்ற சோகன்னெச் சூக்கர்டார்ட்டும் இத்தற்காப்பு ஆட்டத்தை பெர்தோல்டு இங்கிலிச்க்கு எதிராக விளையாடி ஆட்டத்தை சமநிலையில் முடித்தார்.[4] மார்டைமருடைய 4...Ne7 நகர்வு ஒரு புதுமையான நகர்வுதான் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று இந்த ஆட்டத்திற்குப் பின்னர் சோகன்னெச் சூக்கர்டார்ட்டு எழுதியிருக்கிறார்[5]. முற்கால மற்றும் நவீன சதுரங்கத் திறப்புகள் பற்றிய ஆய்வுக்கட்டுரையின் முதல் பதிப்பில் இதற்காப்பு ஆட்டம் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 5.Nc3 Ng6 6.0-0 c6 7.Ba4 d6 8.Bb3 என்ற நகர்வுகள் அதில் பரிந்துரைக்கப்படுகின்றன[6]. கருப்பு தன்னுடைய எட்டாவது நகர்வை 8...Be6 அல்லது 8...Be7 என்ற நகர்வுகளில் ஒன்றை விளையாடுவதன் மூலம் ஆட்டத்தின் பதட்டம் குறைந்து சமமான ஆட்டம் தொடர்கிறது. ஓரோவிட்ச் மற்றும் ரீன்பெல்டு ஆகியோர் கருப்பின் நான்காவது 4...Ne7 நகர்வை உற்று நோக்கி இந்த நகர்வை நேர விரயம் என்றும் இராசா பக்கத்து அமைச்சரை நகரவிடாமல் தடுக்கும் படுகுழி என்றும் பல ஆண்டுகளாக விமர்சித்து வந்தனர்"[2]

தற்பொழுது 4...Ne7 என்ற நகர்வு கருப்பு ஆட்டக்காரர்களால் அரிதாகவே ஆடப்படுவதைப் பார்க்க முடிகிறது. நவீன சதுரங்க திரப்பு ஆட்டங்களில் வெள்ளையின் 4.d3 நகர்வுக்குப் பதில் நகர்வாக 4...d6 என்ற நகர்வே கருப்புக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மார்டைமரின் 4...Ne7 நகர்வு அடிக்குறிப்பில் மட்டுமே சுட்டிக்காட்டப்படுகிறது. சதுரங்க முன்நகர்வுகளின் கலைக்களஞ்சியத்திலும் கருப்பு ஆட்டக்காரருக்கு 4...d6 மற்றும் 4...Bc5 நகர்வுகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன[7].

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புரைகள்

  1. De Firmian 2008, ப. 43.
  2. 2.0 2.1 Horowitz & Reinfeld 1954, ப. 59.
  3. Minchin 1973, ப. 179, 257, 306.
  4. Englisch–Zukertort
  5. Minchin 1973, ப. 22.
  6. Freeborough & Ranken 1889, ப. 127.
  7. ECO, ப. 332–33.

உசாத்துணைகள்