உரவப்பாறா கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுப்பிரமணிய சுவாமி கோயில், உரவப்பாறா
உரவப்பாறா கோயில் is located in கேரளம்
உரவப்பாறா கோயில்
Location in Kerala
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:இடுக்கி
அமைவு:தொடுபுழா
ஏற்றம்:152.5 m (500 ft)
ஆள்கூறுகள்:9°55′04″N 76°47′59″E / 9.91778°N 76.79972°E / 9.91778; 76.79972ஆள்கூறுகள்: 9°55′04″N 76°47′59″E / 9.91778°N 76.79972°E / 9.91778; 76.79972
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:பாரம்பரிய கேரள பாணி

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில், 'மலையாளப் பழனி' என்று அறியப்படுகிறது. இது கேரளத்தின், இடுக்கி மாவட்டம், தொடுபுழாவுக்கு அருகில் உள்ள ஒலமட்டம் என்ற இடத்தில் உள்ள ஒரு முருகன் கோயில் ஆகும். இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 500 அடி (150 மீ) உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் முருகன் 'பால சுப்பிரமணியன்' வடிவத்தில் உள்ளார்.

தொன்மம்[தொகு]

இங்குள்ள சிலை ஒரு சுயம்பு என்று புராணக்கதை கூறுகிறது. [1] [2] வீர காவியமான மகாபாரதத்தில் புகழ்பெற்ற மாவீரர்களான பாண்டவர்கள், அவர்களது மனைவி திரோபதியுடன் பன்னிரண்டு ஆண்டு வனவாசத்தின்போது இங்கு தங்கியிருந்தனர் எனப்படுகிறது. இங்கு உள்ள மூன்று பாறைகளானது பாண்டவர்கள் சமையல் செய்ய அடுப்புக்காக பயன்படுத்திய கற்கள் என்று நம்பப்படுகிறது. இவர்கள் இங்கு இருக்கும்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது என்றும், அப்போது பாண்டவர்களிடையே வலிமை வாய்ந்த பீமன், கடினமான பாறையின் மீது தனது கால்களை வலுவாக தேய்த்து, ஒரு நீரூற்றை உருவாக்கினான். 'உரவப்பாறா' என்ற பெயர் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. பீமனின் சக்தியால் உருவாக்கப்பட்ட குளம் உரவப்பறா என்று சிலர் கூறுகிறார்கள். பாறைகளிலிருந்து கீழே பாயும் 'அபிஷேகதீர்த்தம்' என்பதிலிருந்து இந்த கோவிலுக்கு பெயர் வந்தது என்று வேறு சிலர் நம்புகிறார்கள். [3] [4]

திருவிழாக்கள்[தொகு]

கோயிலின் ஆண்டு விழா மலையாள மாதமான 'மகரம்' (ஜனவரி / பிப்ரவரி) மாதத்தில் நடத்தப்படுகிறது. உப்பு மற்றும் மிளகு ஆகியவை தெய்வத்திற்கு இரண்டு முக்கியமான பிரசாதங்கள். [5]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரவப்பாறா_கோயில்&oldid=3084474" இருந்து மீள்விக்கப்பட்டது