உபாசனா மொகாபத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உபாசனா மொகாபத்ரா
மொகாபத்ரா புவனேசுவரத்தில்
பிறப்பு20 சூன் 1997 (1997-06-20) (அகவை 26)
பிரம்மகிரி, பூரி மாவட்டம், ஒடிசா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்கேஐஐடி பன்னாட்டுப் பள்ளி, சோபியா மகளிர் கல்லூரி

உபாசனா மொகபத்ரா (Upasna Mohapatra) பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

சிப்பாய் கலகத்திற்கு (1857) முன்பே பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிரான முதல் கிளர்ச்சியாக (1817) கிழக்கிந்தியாவில் பைகா கலகத்தின் முன்னோடியாக இருந்த பக்ஷி ஜகபந்து பித்யாதரின் கொள்ளுப்பேத்தி ஆவார். இவர் ஒடிசாவின் பிரம்மகிரி, மொகாபத்ராவைச் சேர்ந்தவர். ஒடிசா காங்கிரசின் தலைவராக இருந்த இலாலாதேந்து பித்யாதர் மொகபத்ரா இவரது தந்தை ஆவார்.[1] இவர் புவனேசுவரம் மற்றும் கட்டாக்கில் உள்ள இரண்டு தனியார்ப் பள்ளிகளில் கல்வி கற்றார். 2015 முதல் மும்பை சோபியா கல்லூரியில் உயர் படிப்பைத் தொடர்ந்தார்.

அரசியல்[தொகு]

மொகாபத்ரா தனது அரசியல் வாழ்க்கையை அக்டோபர் 2017 வரை உறுதிப்படுத்தவில்லை என்றாலும்[2] இவர் 2014 பொதுத் தேர்தல்களில் தீவிரமாகச் செயல்பட்டார். பல அரசியல் மற்றும் சமூக விடயங்களில் குரல் எழுப்பிய பிறகு இவர் அரசியல் வெளிச்சத்திலிருந்தார்.

14 அக்டோபர் 2017 அன்று தர்மேந்திர பிரதான் தலைமையில் பாஜகவில் சேர்ந்தார். இவர் ஆகத்து 2018-இல் பாஜகவின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும், மோதி ஆதரவு பிரச்சாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.[3]

2019 சட்டமன்றத் தேர்தலில் தனது மாமா லலிதேந்து பித்யாதர் மொகாபத்ராவிற்காக பிரம்மகிரி சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தை உபாசனா முன்னின்று நடத்தினார். இங்கு இவர் பிரம்மகிரியின் இடத்தைப் பிடித்தார். தற்போது பிரம்மகிரி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

திருமணம்[தொகு]

சூன் 2019இல், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சுப்ரான்சு சேகர் பிசுவாலுடன் உபாசனா புவனேசுவரத்தில் ஒரு முறையான விழாவில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.[4]

சுப்ரான்சுவும் உபாசனாவும் 17.02.2021 அன்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

சர்ச்சை[தொகு]

மார்ச் 16, 2021 அன்று, மொகாபத்ரா சுமார் 20 பேருடன் சேர்ந்து புவனேசுவரத்தில் உள்ள நயபள்ளியில் ஒரு வீட்டின் குத்தகை தாரர்களைக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. குத்தகை தாரரை தாக்கியதற்காக மகாபத்திரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவம் தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lalatendu Bidyadhar Mohapatra's daughter to step into politics". The Times of India. 20 December 2016 இம் மூலத்தில் இருந்து 2017-05-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170528234519/http://m.timesofindia.com/city/bhubaneswar/lalatendu-bidyadhar-mohapatras-daughter-to-step-into-politics/articleshow/56083541.cms. 
  2. Kanak News (2017-01-27), Exclusive Interview With Upasna Mohapatra, archived from the original on 2017-03-05, பார்க்கப்பட்ட நாள் 2017-02-09
  3. "ଆଇ ସପୋର୍ଟ ମୋଦି କ୍ୟାମ୍ପେନର ରାଜ୍ୟ ସଂଯୋଜିକା ହେଲେ ଉପାସନା ମହାପାତ୍ର". odishatime.co.uk. 6 August 2018.
  4. . 8 August 2019. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  5. . 17 March 2021. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உபாசனா_மொகாபத்ரா&oldid=3882397" இலிருந்து மீள்விக்கப்பட்டது