பைகா கலகம்
பைகா கலகம் அல்லது பாய்க் கலகம் ( Paik Rebellion, Paika Bidroha) என்பது ஒடிசாவில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து 1817 இல் நடந்த ஆயுதக் கிளர்ச்சியைக் குறிப்பது ஆகும். ஒடிசாவின் பைகா சமூகத்தினர் போர் வீரர்களாகவும் இருந்தனர். அவர்களது வாடகை இல்லா நிலங்களை, 17-ம் நூற்றாண்டில் அங்கு வந்த ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியினர் கைப்பற்றினர். இதை எதிர்த்து ஒடிசாவின் குர்தா பகுதி மன்னரின் தளபதியான பக் ஷி ஜகாபந்து பித்யாதர் தலைமையில் நடத்தப்பட்ட கிளர்ச்சியைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் அடித்து விரட்டப்பட்டனர்.[1]
பைகா
[தொகு]பைகா என்பவர்கள் ஒடிசாவின் பாரம்பரியமான குடிப்படையினராவர். அவர்கள் போர்வீரர்களாகவும் இருந்தனர். போரற்ற காலங்களில் காவல் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த பைகா மக்கள் அவர்களின் வேலை மற்றும் பயன்படுத்தும் ஆயுதங்கள் போன்றவற்றின் அடிப்படையில் மூன்று வேறுபட்ட பிரிவிவினராக இருந்தனர். இந்த பைகாகள் ஒடிசா படையில் பல்வேறுபட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர்.[2] 1803 ஆம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பனி ஒடிசாவைக் கைப்பற்றியது இதனால் ஒடிசாவின் குர்தா பகுதி அரசரிடம் பணியாற்றிவந்த பைகாவினரின் அதிகாரமும் கௌரவமும் வீழ்ச்சியுற்றது. அவர்களுக்கு முந்தைய ஆட்சியாளர்களால் அளிக்கப்பட்ட வாடகை இல்லா சாகிர் நிலங்களை, பின்வந்த ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியினர் கைப்பற்றி, அவர்களின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தி வைத்தனர். ஆனாலும் பைகா மக்கள், தங்கள் முந்தைய வீரமிக்க இயல்புகளை தக்க வைத்துக் கொண்டிருந்தனர். இதனால் பிரித்தானிய காவல்துறை இவர்களைத் தொடர்ந்து கண்காணித்து எச்சரிக்கையாக இருந்தது. பைகா சமூகம் முற்றிலுமாக அழிக்கப்பட்டாலன்றி, பிரித்தானிய ஆட்சி சீராக இயங்காது எனவும் கருதியது."[3]
கலகத்திற்கான காரணங்கள்
[தொகு]பாய்க் கிளர்ச்சிக்கு பலவிதமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்கள் இருந்தன. பிரித்தானிய ஆட்சியில் பாய்க் சமூகத்தினர் ஒதுக்கப்பட்டனர், குர்தாவை வெற்றி கொண்ட பிறகு அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வாடகைக்கு இல்லா நிலங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. மேலும் அவர்கள் கம்பெனி அரசாங்கம் மற்றும் அதன் ஊழியர்களால் அடக்குமுறைக்கும் ஆளாயினர். ஆரம்பத்தில் இருந்தே பைக்குகளுடன் அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், அவர்கள் ஒடிசாவில் உள்ள கம்பெனி ஆட்சியைக் காப்பவர்களாக இருந்திப்பார்கள். கம்பனியின் கடுமையான நில வருவாய் கொள்கை விவசாயிகள் மற்றும் நிலக்கிழார் போன்றோரை கடுமையாக பாதித்தது. புதிய அரசால் திணிக்கப்பட்ட வரிகளால் உப்பு விலை அதிகரித்து பொது மக்களை பாதித்தது. ஒடிசாவில் இருந்த கொய்ரி நாணய முறையை கம்பெனி ரத்து செய்தது. வெள்ளி நாணயங்களைக் கொண்டு வரி செலுத்த வேண்டியது அவசியமானது. இது மிகவும் துன்பங்களையும் அதிருப்தியையும் மக்களிடையே ஏற்படுத்தியது. 1804 ஆம் ஆண்டு, கர்தா ராஜா, பாய்க்கிகளுடன் சேர்ந்து கிளர்ச்சி செய்ய திட்டமிட்டார், ஆனால் அந்தச் சதி விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது இதனால் ராஜாவின் பிரதேசமே பறிமுதல் செய்யப்பட்டது.[4]
தலைவர்களும் பங்கேற்பாளர்களும்
[தொகு]குர்தா பகுதி முன்னாள் மன்னரின் தளபதியான பக் ஷி ஜகாபந்து பித்யாதர் தலைமையில் பாய்க்கிகள் அணிதிரண்டனர். கிலா ரோரங்கின் ஜகபந்துவின் குடும்பத்தின் ஜமீனானது 1814 ஆம் ஆண்டில் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது. 1817 மார்ச்சில் கலகம் வெடித்தபோது, பாய்க்குகள் அவர்களது தலைமையின் கீழ் ஒன்றுகூடினர். இந்த கலகக்காரர்களின் மற்றொரு தலைவர் குர்தாவின் கடைசி மன்னரான ராஜா முகுந்த தேவா ஆவார். இந்த கலகம் ஒடிய சமுதாயத்து நிலப்பிரபுக்கள், ஜமீந்தார்கள், ஒடிசாவின் பொது மக்களின் பரவலான ஆதரவைக் கொண்டிருந்தது. கரிபூர், திருச்சூர், கோல்ரா, பாலம்பம்பூர், புட்னாகரா, ரூபாசாவின் ஆகியவற்றின் ஜமீன்தர்கள் கலகத்தை ஆதரித்தனர். பனாபூர் மற்றும் குர்தாவில் இருந்து கிளர்ச்சி துவங்கி, அது விரைவில் ஒடிசாவின் மற்ற பகுதிகளான பூரி, பிபிலி, கட்டக் ஆகிய பகுதிகளுக்கும் கனக, குஜங் மற்றும் பட்டமண்டே போன்ற பல கிராமங்களுக்கும் பரவியது. கிளர்ச்சிக்கு கனகா, குஜாங்க், நயாகா, குமுசூர் ஆகிய பகுதிகளின் அரசர்கள் மற்றும் ஜகபந்து மற்றும் ஜட்பூரின் தலாபீரா மிரிஹைதார் அலி குமுசூர் போன்ற முசுலீம் தலைவர்களின் உதவிகளும் கிடைத்தன.[5]
கலகத்தின் போக்கு
[தொகு]ஒடிசாவில் 1817 மார்ச் மாதம், கந்தாஸ் பகுதியில் குர்தா இராச்சியத்தின் 400 க்கும் மேற்பட்ட வலிமைமிக்க வீரர்கள் கூடி ஆட்சிக்கு எதிராக தங்கள் கிளர்ச்சியை வெளிப்படையாக அறிவித்தபோது, ஒடிசாவில் கம்பெனியின் சட்டத்தை மீறுவது அதிகரித்தது. ஜகபந்துவின் கீழ் திரண்ட பைக்காகள் பான்புரில் உள்ள காவல் நிலையத்தையும் அஞ்சல் அலுவலகத்தையும் சூறையாடினர். பின்னர் கும்பாவிற்கு கிளர்ச்சியாளர்கள் அணிவகுத்துச் சென்றனர், இதைத் தொடர்ந்து அங்கு உள்ள பொதுக் கட்டிடங்களையும், கருவூலத்தையும் கம்பெனி கைவிட்டது. கிளர்ச்சியாளர்களின் மற்றொரு குழு பரகனா லேம்பை கைப்பற்றியது, அங்கு அவர்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த உள்ளூர் அதிகாரிகளைக் கொன்றனர்.[6]
ஈ. இம்பீயி தலைமையிலான கம்பெனி அரசாங்கம், ஏப்ரல் தொடக்கத்தில் லெப்சன்ட் ப்ரிடாயூர் மற்றும் ஃபரிஸ் ஆகியோரின் கீழ் பிப்லிக்கு கிளர்ச்சியை ஒடுக்க படைகளை அனுப்பியது. அந்தப் படைகள் பைக் கிளர்ச்சிப் படையின் தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொண்டது, அவர்கள் கட்டாக்கில் இருந்து பின்வாங்குவதற்கான நிர்பந்தத்தை, பாரிய இழப்புக்களின் வழியாக சந்தித்தனர், ஃபரிஸ் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார். கேப்டன் வெல்லிங்டன்கின் கீழ் பூரிக்கு அனுப்பப்பட்ட மற்றொரு படை, சிறிது எதிர்ப்பை எதிர்கொண்டது, ஏப்ரல் 9 அன்று, 550 ஆட்கள் கொண்ட படை குர்தாவுக்கு அனுப்பப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்கள் குர்தாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, குர்தா பிரதேசத்தை இராணுவச் சட்டத்துக்குள் கொண்டுவந்தனர்.
குர்தா பிரதேசத்தை தங்கள் கட்டுப்பாட்டில் பிரித்தானியர் வைத்திருந்தாலும், பூரி பாக்சி ஜகபந்து தலைமையிலான கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது, பிரித்தானியர் ஏப்ரல் 18 அன்று கட்டாக்கில் இருந்து பின்வாங்கினர். பிரித்தானிய படைகள் பாயிஸுக்கு அணிவகுத்து ஆயிரம் பேர்கொண்ட வலுவான கிளர்ச்சிப் படைகளைத் தோற்கடித்து, பூரியை மீண்டும் கைப்பற்றினர் மேலும் நகரிலிருந்து தப்பிப்பதற்கு முன்னர் அரசரைக் கைது செய்தனர்.
ஒடிசா முழுவதும் கிளர்ச்சி வேகமாக பரவியது, மேலும் பிரித்தானிய மற்றும் பாக்கி படைகளுக்கு இடையில் பல மோதல்கள் நடந்தன. 1817 ம் ஆண்டு மே மாதத்தில், பிரித்தானியர் முழு மாகாணத்திலும் தங்களுடைய அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டினர், என்றாலும் முழு அமைதி திரும்புவதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது.
விளைவுகள்
[தொகு]1817 மே மாதம் பிரித்தானியர் இது குறித்த வழக்கை விசாரிக்க நீதிபதிகளை நியமித்தார். வழக்கின் முடிவில் கிளர்ச்சிக்காரர்களுக்கு மரண தண்டனை, நாடுகடத்தில், நீண்டகால சிறைவாசம் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டன. 1818 க்கும் 1826 க்கும் இடையில், கம்பெனி படைகள் கர்ட்டாவின் காடுகளில் மறைந்து இருந்த கிளர்ச்சியாளர்களைத் தப்பிச் செல்ல விடாமல் தேடிபிடித்துக் கொன்றது. இந்த நடவடிக்கைகளில் பல பைக்காகள் கொல்லப்பட்டனர். 1825 ஆம் ஆண்டு அவர்களின் தலைவரான ஜகபந்து, பிரிட்டிசாரிடம் சரணடைந்தார், 1829 ஆம் ஆண்டு அவர் மரணமடைந்தார்.[7] பூரியை பிரித்தானியர் கைப்பற்றியபோது, கைது செய்யப்பட்ட ஜக்பந்து ராஜா மங்கியா தேவா கட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் 1817 நவம்பரில் கைதியாகவே மரணமடைந்தார். கிழக்கு இந்திய கம்பெனி கலகத்தின் காரணத்தை ஆராய ஒரு ஆணையத்தை நியமித்தது.
கோரிக்கைகள்
[தொகு]வட இந்தியாவில் 1857 இல் நிகழ்ந்த சிப்பாய்க் கலகத்திக்கு முன்பே 1817 நடந்த இந்த பைகா கலகமானது எனவே இந்தியாவின் முதல் சுதந்திரப் போராக இதை அறிவிக்க வேண்டும் என ஒடிசாவில் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. புவனேஸ்வரத்தில் 2017 அக்டோபர் 23 அன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அடுத்த ஆண்டு முதல் பள்ளிப் பாடங்களில் ஒடிசாவில் ‘பைகா கலகம்’ முதல் இந்திய சுதந்திரப் போராக மாற்றி எழுதப்படுவதாகவும் உறுதியளித்துள்ளார்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kalia, Ravi (1994). Bhubaneswar: From a Temple Town to a Capital City. Southern Illinois University Press. p. 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780809318766.
- ↑ Mohanty, N.R. (August 2008). "The Oriya Paika Rebellion of 1817". Orissa Review: 1–3. http://orissa.gov.in/e-magazine/Orissareview/2008/August-2008/engpdf/1-3.pdf. பார்த்த நாள்: 13 February 2013.
- ↑ Paikaray, Braja (February–March 2008). "Khurda Paik Rebellion - The First Independence War of India". Orissa Review: 45–50. http://orissa.gov.in/e-magazine/Orissareview/2008/feb-march-2008/engpdf/45-50.pdf. பார்த்த நாள்: 13 February 2013.
- ↑ Mahmud, Sayed Jafar (1994). Pillars of Modern India 1757-1947. New Delhi: Ashish Publishing House. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170245865.
- ↑ "Paika revolt of 1817". Archived from the original on 8 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 13 February 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Paik Rebellion". Archived from the original on 12 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 13 February 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Death Anniversary of Buxi Jagabandhu" (PDF). பார்க்கப்பட்ட நாள் 13 February 2013.
- ↑ ஆர்.ஷபிமுன்னா (27 நவம்பர் 2017). "தமிழ்நாட்டின் கிளர்ச்சிகள் சுதந்திர இந்தியாவுக்கானவை இல்லையா?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2017.