உன்னாவ் வன்புணர்வு வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உன்னாவ் வன்புணர்வு வழக்கு, கதுவா பாலியல் வன்முறை வழக்கு ஆகிய இரண்டிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமென புது தில்லியில் 15-4-2018 அன்று முன்னெடுக்கப்பட்டத் தீவிரப் போராட்டத்தின் ஒரு பகுதி மக்கள்[1].

உன்னாவ் வன்புணர்வு வழக்கு (Unnao rape case) என்பது ஜூன் 4, அன்று 2017 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு 17 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்காகும். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபர் உத்தரப்பிரதேச சட்ட மன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான குல்தீப் சிங் செங்கர் ஆவார். இவ்வழக்கு சிபிஐயால் விசாரிக்கப்பட்டது.[2] ஏப்ரல் 8, 2018 அன்று பாதிக்கப்பட்ட பெண், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றார். கைதுசெய்யப்பட்டு விசாரணைக் காவலில் இருக்கும்போது அப்பெண்ணின் தந்தை மரணமடைந்தார். இந்த நிகழ்வுகளால் இவ்வழக்கு தேசிய ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.[3][4][5] உன்னாவ் வன்புணர்வு வழக்கு, கதுவா பாலியல் வன்முறை வழக்கு ஆகிய இரண்டும் ஒரே சமயத்தில் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து, இரண்டிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமென முன்னெடுக்கப்பட்ட தீவிரப் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.[6][7][8]

நிகழ்ச்சி[தொகு]

முறையீடு[தொகு]

ஜூன் 4, 2017 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னாவு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான குல்தீப் சிங் செங்கர் என்பவரால் அவரது வீட்டில் வைத்துத் தான் பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாக ஒரு 17 வயதுப் பெண் புகாரளித்தார். புகாரில் அப்பெண் தனக்கு வேலைகிடைப்பதற்கு உதவிவேண்டி செங்கரின் வீட்டிற்குத் தான் சென்றிருந்ததாகக் கூறியிருந்தார்.[3][4] அவரது முறையீடு காவற்துறையினரால் ஜூன் 22 அன்று பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பெயரைக் குறிப்பிடத் தான் அனுமதிக்கப்படவில்லை எனவும் அப்பெண் குறிப்பிட்டார்.[3][4]

செங்கரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அப்பெண்ணின் தந்தை ஏப்ரல் 5, 2018 அன்று கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார். அவர் தொடர்ந்து அடிக்கப்பட்டிருந்தது அவரது மருத்துவச் சோதனையில் கண்டறியப்பட்டது. செங்கரின் சகோதரரான அதுல் செங்கர் தன்னைத் தாக்கியதாக அப்பெண்ணின் தந்தை முறையிட்டும் அம்முறையீடு குறித்து எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.[3][4]

அதன் பின்னர் ஏப்ரல் 8, 2018 அன்று தன்னைப் பாலியியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பெண் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்தின் வீட்டின் முன்னர் தீக்குளிக்க முயன்றார்.[3][4] ஏப்ரல் 9, 2018 அன்று அப்பெண்ணின் தந்தை மருத்துவமனையில் மரணமடைந்தார். இதனால் அதுல் சிங் கைது செய்யப்பட்டு, 6 காவற்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.[5]

பாதிக்கப்பட்ட பெண்ணின் தீக்குளிப்பு முயற்சியும் அப்பெண்ணின் தந்தையின் மரணமும் பரவலான கொந்தளிப்பை உண்டாக்கியதால் செங்கருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. உத்தரப்பிரதேச மாநில அரசு இவ்வழக்கை நடுவண் புலனாய்வுச் செயலகத்திடம் ஒப்படைத்தது. வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.[5][4][9][10][11]

கைது[தொகு]

ஏப்ரல் 13, 2018 அன்று விசாரணைக்காக சிபிஐ குல்தீப் சிங் செங்கரை தன்வசம் அழைத்துச் சென்றது.[12][13] அதே நாளன்று அவரிடம் மேற்கொள்ளபட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, அவர்மீது புதிய முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டது. அவர் ஒரு வாரத்துக்கு நீதிவிசாரணைக் காவலில் அடைக்கப்பட்டார்.[14][15] ஏப்ரல் 14, 2018 அன்று பாதிக்கப்பட்ட பெண்ணை வன்கொடுமை நிகழ்ந்த அன்று அப்பெண்ணை செங்கரிடம் அழைத்துச் சென்ற பெண்ணும் கைது செய்யப்பட்டார்.[16]

பின்னிகழ்வுகள்[தொகு]

போராட்டங்கள்[தொகு]

2018, ஏப்ரல் மாதத்தில் ஊடகங்களில் தலையங்கச் செய்தியாக இவ்வழக்கின் விவரங்கள் வெளியாகின. அதே சமயத்தில் ஜனவரி 2018 இல் நிகழ்ந்த கதுவா பாலியியல் வன்முறை தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.[17] இரு வன்கொடுமை நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு நீதிவேண்டி இந்தியா முழுவதும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியப் பிரதம மந்திரி நரேந்திர மோதி, இந்நிகழ்ச்சிகளைக் கண்டித்து, நீதி நிலைநிறுத்தபடுமெனக் கூறினார்.[18][19]

லாரியால் மோதி கொலை முயற்சி[தொகு]

லக்னோ நீதிமன்றத்தில் பாலியல் வன்முறை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது தாயார், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் காரில் சென்றபோது லாரியால் மோதப்பட்டு, அவரது உறவுக்கார பெண் மற்றும் வழக்கறிஞர் கொல்லப்பட்டனர். இளம்பெண்ணும் அவரது தாயாரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறினர். இந்த ‘விபத்து’ பாதிக்கப்பட்ட இளம்பெண்ண கொல்வதற்கு நடந்த சதி என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் மற்றும் 9 பேர் மீது தனியாக கொலை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.[20]இதனிடையே, விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த இளம்பெண் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், பாலியல் வன்முறை உள்ளிட்ட 5 வழக்குகளையும் லக்னோ நீதிமன்றத்தில் இருந்து தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது.தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அன்றாடம் விசாரணை நடத்தி 45 நாட்களுக்குள் வழக்கை முடிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

தண்டனை[தொகு]

வழக்கில் விசாரணை முடிவடைந்து தில்லி நீதிமன்றம் 16 திசம்பர் , 2019 இல் தீர்ப்பளித்துள்ளது. சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும் 19ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன. பாலியல் வன்கொடுமை வழக்கு தவிர இதர 4 வழக்குகளின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Not In My Name protests launched after Kathua, Unnao cases; hundreds march over atrocities against minorities". 15 April 2018. https://www.firstpost.com/india/not-in-my-name-protests-launched-after-kathua-unnao-cases-hundreds-march-over-atrocities-against-minorities-4432897.html. பார்த்த நாள்: 17 April 2018. 
  2. "Unnao rape case: Will arrest BJP MLA Kuldeep Singh Sengar, SIT tells Allahabad HC; Highlights here". financialexpress.com. http://www.financialexpress.com/india-news/unnao-rape-case-live-updates-kuldeep-singh-sengar-up-police-fir-against-bjp-mla-yogi-adityanath/1130176/. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "All that has happened in Unnao rape case, a timeline" (in en). Hindustan Times. 10 April 2018. https://www.hindustantimes.com/india-news/all-that-has-happened-in-unnao-rape-case-a-timeline/story-mawXOV70RXnt74VNdiJ02I.html. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "Unnao rape case: Here’s everything you need to know" (in en-US). The Indian Express. 14 April 2018. http://indianexpress.com/article/india/unnao-rape-case-bjp-mla-kuldeep-singh-sengar-arrested-5137445/. 
  5. 5.0 5.1 5.2 "Rape inquiry against India BJP lawmaker" (in en-GB). BBC News. 12 April 2018. http://www.bbc.com/news/world-asia-india-43735542. 
  6. "Congress march highlights: Party holds nationwide protest, seeks justice in Kathua, Unnao rape cases". Firstpost. https://www.firstpost.com/india/congress-march-live-updates-party-holds-nationwide-protest-seeks-justice-in-kathua-unnao-rape-cases-4430627.html. 
  7. "Chennai, Kolkata Take to Streets to Protest Kathua, Unnao Rapes" (in en). The Quint. https://www.thequint.com/news/india/mumbai-protests-against-kathua-unnao-rapes. 
  8. "Hundreds Of Mumbaikars Assemble To Protest Kathua, Unnao Rape Cases". NDTV.com. https://www.ndtv.com/mumbai-news/hundreds-of-mumbaikars-assemble-to-protest-kathua-unnao-rape-cases-1837404. 
  9. "Unnao Rape: FIR Filed Against BJP MLA, Case Transferred to CBI" (in en). The Quint. https://www.thequint.com/news/india/unnao-rape-case-live-updates. 
  10. Rashid, Omar (11 April 2018). "Allahabad HC takes up Unnao rape case" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/national/hc-takes-up-unnao-rape-case/article23505711.ece. 
  11. Rashid, Omar (11 April 2018). "Unnao gang rape case: BJP MLA’s wife demands narco test of husband, minor" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/national/other-states/unnao-gang-rape-case-bjp-mlas-wife-demands-narco-test/article23501739.ece. 
  12. "Rape-Accused BJP Lawmaker Kuldeep Singh Sengar Taken In For Questioning By CBI". NDTV.com. https://www.ndtv.com/india-news/rape-accused-bjp-lawmaker-kuldeep-singh-sengar-taken-in-for-questioning-by-cbi-1836914. 
  13. "Allahabad High Court Orders Arrest Of BJP Lawmaker Kuldeep Singh Sengar". NDTV.com. https://www.ndtv.com/india-news/allahabad-high-court-orders-arrest-of-bjp-lawmaker-kuldeep-singh-sengar-1837187. 
  14. "Unnao rape case: Accused BJP MLA Kuldeep Singh Sengar arrested by CBI - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/rape-accused-bjp-mla-kuldeep-singh-sengar-arrested-by-cbi/articleshow/63752330.cms. 
  15. "BJP's Kuldeep Singh Sengar Sent To 7 Days' CBI Custody In Unnao Rape Case". NDTV.com. https://www.ndtv.com/india-news/bjps-kuldeep-singh-sengar-sent-to-7-days-cbi-custody-in-unnao-rape-case-1837622. 
  16. "Unnao rape case: CBI makes second arrest" (in en-IN). The Hindu. 14 April 2018. http://www.thehindu.com/news/national/other-states/unnao-rape-case-cbi-makes-second-arrest/article23542193.ece. 
  17. "Outrage spreads over eight-year-old's rape" (in en-GB). BBC News. 13 April 2018. http://www.bbc.com/news/world-asia-india-43749235. 
  18. "Kathua, Unnao rape cases: Narendra Modi's statement and sacking of BJP ministers send the right message". Firstpost. https://www.firstpost.com/india/kathua-unnao-rape-cases-narendra-modis-statement-and-sacking-of-bjp-ministers-send-the-right-message-4431195.html. 
  19. Dutt, Barkha (13 April 2018). "In India, Modi government fumbles its response to gang-rape cases" (in en-US). Washington Post. https://www.washingtonpost.com/news/global-opinions/wp/2018/04/13/in-india-modi-government-fumbles-its-response-to-gang-rape-cases/. 
  20. "Unnao rape survivor accident: What happened and what we know so far". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-30.