உள்ளடக்கத்துக்குச் செல்

உத்ரா உன்னிகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்ரா உன்னிகிருஷ்ணன்
பிறப்பு11 சூன் 2004 (2004-06-11) (அகவை 20)
தேசியம்இந்தியர்
செயற்பாட்டுக்
காலம்
2012–நடப்பு
அறியப்படுவது2015 சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது
பெற்றோர்பி. உன்னிகிருஷ்ணன்
பிரியா உன்னிகிருஷ்ணன்

உத்ரா உன்னிகிருஷ்ணன் (Uthara Unnikrishnan, பி: 2004) ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர். 2015 ஆண்டு, சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது பெற்றவர் இவ்விருது 2014 ஆம் ஆண்டில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் தமிழ்த் திரைப்படத்தில் இவர் பாடிய "அழகு"... பாடலுக்காக இவருக்கு வழங்கப்பட்டது[1]. இப்பாடலை இவர் பாடிப் பதிவுசெய்யப்பட்டபோது இவரது வயது எட்டாகும்[2]. சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதினைத் தனது 10 ஆவது வயதில் பெற்ற உத்ரா உன்னிகிருஷ்ணன், இவ்விருதினைப் பெற்ற இளம்பாடகர் என்ற பெருமைக்கும் உரியவரானார்.[3][4]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

உத்ரா உன்னிக்கிருஷ்ணனின் பெற்றோர் கருநாடக இசைப் பாடகர் பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் பரத நாட்டியக் கலைஞர் பிரியா உன்னிகிருஷ்ணன் ஆவர். இவரது தந்தை உன்னிக்கிருஷ்ணன் பலமுறை சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது பெற்றவராவார். முதன்முதலாக 1995 இல் அவரது அறிமுகத் திரைப்பாடல்களான "என்னவளே அடி என்னவளே", "உயிரும் நீயே" ஆகியவற்றுக்காக சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது பெற்றார்.[3]. தனது ஆறாவது வயதில் சுதா ராஜா என்ற ஆசிரியரிடம் கருநாடக இசைப்பயிற்சியைத் தொடங்கிய உத்ரா உன்னிக்கிருஷ்ணன், தமிழிசை மட்டுமல்லாது மேல்நாட்டு இசை பயில்வதிலும் ஆர்வம் கொண்டவர்.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "62nd National Film Awards: Tamil movies bag eight honours". Times of India. 24 March 2015. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/62nd-National-Film-Awards-Tamil-movies-bag-eight-honours/articleshow/46678516.cms. பார்த்த நாள்: 30 March 2015. 
  2. "Eight-year old Uthara croons for 'Saivam'". sify.com. 19 November 2013 இம் மூலத்தில் இருந்து 11 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140311171705/http://www.sify.com/movies/eight-year-old-uthara-croons-for-saivam-news-national-nltl4hehjgf.html. பார்த்த நாள்: 30 March 2015. 
  3. 3.0 3.1 "Like Father, Like Daughter". Tehleka.com. 11 April 2015 இம் மூலத்தில் இருந்து 27 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150427131742/http://www.tehelka.com/like-father-like-daughter/. பார்த்த நாள்: 20 April 2015. 
  4. "62nd National Film Awards: Complete list of winners". IBN Live. 24 March 2015. Retrieved 24 March 2015.
  5. "Uthra Unnikrishnan sings at Saivam audio launch (video)". யூடியூப். 7 April 2014. பார்க்கப்பட்ட நாள் 21 April 2015.
  6. "10-year old Uthara to receive National Award 20 years after father singer P Unnikrishnan got". Indian Express. 30 March 2015. http://indianexpress.com/article/entertainment/music/repeat-telecast-4/. பார்த்த நாள்: 30 March 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்ரா_உன்னிகிருஷ்ணன்&oldid=3297257" இலிருந்து மீள்விக்கப்பட்டது