உள்ளடக்கத்துக்குச் செல்

உத்ராபதி விசுவராயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உத்ராபதி விசுவராயர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் அமைந்த அம்மாபேட்டை கிராமத்தில் கள்ளர் மரபில் 07-09-1909 இல் பிறந்தார்.

இந்திய விடுதலைப் போராட்டம்

[தொகு]

இவர் எழுத்தறிவு பெற்றவர், 1930 இல் உப்புச் சத்தியாகிரகம் இயக்கத்தில் சேர்ந்தார், அதே ஆண்டு வெளிநாட்டு துணி புறக்கணிப்பு, கள்ளுக்கடை மறியல் மற்றும் 1941 இல் தனிநபர் சத்தியாகிரகம் ஆகியவற்றில் பங்கேற்றார்.

இதில் கைது செய்யப்பட்டு ஆங்கிலேய அரசால் தண்டனை விதிக்கப்பட்டு 1933, 1941 மற்றும் 1942 இல் சிறைவாசம் அனுபவித்தார். நான்கு ஆண்டுகள் திருச்சிராப்பள்ளி, பெல்லாரி சிறைகளில் வைக்கப்பட்டார்.

24 ஆண்டுகள் பாபநாசம் தாலுகா காங்கிரஸ் கமிட்டி செயலாளராக இருந்தார். 09-2-1956 இல் இறந்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Who S Who Of Freedom Fighters Vol 2. GOVERNMENT OF TAMIL NADU.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்ராபதி_விசுவராயர்&oldid=4147429" இலிருந்து மீள்விக்கப்பட்டது