உத்தராகண்ட ஆயுர்வேதப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தராகண்ட ஆயுர்வேதப் பல்கலைக்கழகம்
Uttarakhand Ayurved University
வகைபொது
உருவாக்கம்2009
துணை வேந்தர்அருண் குமார் திரிபாதி[1]
அமைவிடம், ,
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
இணையதளம்www.uau.ac.in

உத்தராகண்ட ஆயுர்வேதப் பல்கலைக்கழகம் (Uttarakhand Ayurved University), என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் தேராதூனில் அமைந்துள்ள ஒரு மாநில பல்கலைக்கழகம் ஆகும்.[2] இது உத்தராகண்ட ஆயுர்வேதப் பல்கலைக்கழக சட்டம், 2009 மூலம் 2009இல் உத்தராகண்ட அரசாங்கத்தால் நிறுவப்பட்டது.[3] ஆயுர்வேதத்துடன் ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி) மருத்துவ கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் இப்பல்கலைக்கழகம் கவனம் செலுத்துகிறது.[4]

வளாகம் மற்றும் இணைவுப்பெற்ற கல்லூரிகள்[தொகு]

தேராதூனில் உள்ள இதன் முதன்மை வளாகத்தைத் தவிர, பல்கலைக்கழகத்தின் இரண்டு வளாகங்கள் அரித்துவாரில் உள்ளன.[5] இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 13 ஆயுர்வேத கல்லூரிகள், இரண்டு ஹோமியோபதி கல்லூரிகள் மற்றும் ஒரு யுனானி கல்லூரி உட்பட 16 கல்லூரிகள் இணைவுப்பெற்றுள்ளன.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Home Page". www.uau.ac.in. Uttarakhand Ayurved University. பார்க்கப்பட்ட நாள் 14 June 2020.
  2. "List of State Universities as on 29.06.2017" (PDF). University Grants Commission. 29 June 2017. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
  3. "Uttarakhand Ayurved University Act, 2009" (PDF). Uttarakhand Gazette. Government of Uttarakhand. 22 October 2009. Archived from the original (PDF) on 10 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 23 July 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "About Us". www.uau.ac.in. Uttarakhand Ayurved University. பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
  5. "University campuses". www.uau.ac.in. Uttarakhand Ayurved University. பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
  6. "Affiliate Colleges". www.uau.ac.in. Uttarakhand Ayurved University. பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.

வெளியிணைப்புகள்[தொகு]