உத்தமபாளையம் கல்வி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உத்தமபாளையம் கல்வி மாவட்டம் என்பது தேனி முதன்மைக் கல்வி மாவட்டத்தில் உள்ள இரு கல்வி மாவட்டங்களில் ஒன்றாகும். தேனி மாவட்டத்தின் உத்தமபாளையம் வருவாய்க் கோட்டத்தின் கீழுள்ள உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டங்களிலுள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் இக்கல்வி மாவட்டத்தின் எல்லைகளுக்குட்பட்டதாக இருந்தன.

2018 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் முன்பிருந்த இரண்டு கல்வி மாவட்டங்களுடன் தேனி கல்வி மாவட்டம் புதிதாகத் தொடங்கப்பட்டதால்,இக்கல்வி மாவட்டத்திலிருந்த போடி வட்டாரம் தேனி கல்வி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. தற்போது கம்பம் வட்டாரம், உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் வட்டாரங்களிலுள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் இக்கல்வி மாவட்டத்தின் எல்லைகளாக மாற்றம் பெற்றன.[1]

இக்கல்வி மாவட்டத்திற்கு மாவட்டக் கல்வி அதிகாரி தலைமை அதிகாரியாக இருக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தேனியில் கல்வி மாவட்டங்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு (தினமலர் நாளிதழ் செய்தி)