உதவி:புகுபதிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எப்படி புகுபதிகை செய்வது ?

  • இந்த பக்கத்தின் வலது உச்சியில் இருக்கும் "புகுபதிகை" என்ற இணைப்பைத் தெரிவு செய்யுங்கள்.
  • புகுபதிகை பக்கத்தில் நீங்கள் விரும்பும் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் விவரங்களை நிரப்புங்கள். முதல் முறை புகுபதிகை செய்கிறீர்கள் என்றால், உறுதி படுத்திக் கொள்ளும் பொருட்டு இரண்டு தடவை கடவுச் சொல்லை உள்ளிட வேண்டியிருக்கும்.
  • நீங்கள் விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தரலாம்.இவ்வாறு செய்வது மற்ற பயனர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும்.எனினும், உங்கள் Privacy பாதுகாக்கப்படும். உங்கள் மின்னஞ்சல் முகவரியை வேறு யாரும் தெரிந்து கொள்ள இயலாது.

புகுபதிகை செய்தலை விளக்கும் சலனப்படத் துண்டு

(சலனப்படம்)
உருவாக்கப்பட்ட கணக்கை கொண்டு புகுபதிகை செய்வது எப்படி ? (தகவல்)
வழிகாட்டி துண்டுப்படம்
இந்த நிகழ்படத் துண்டினை சரியாக இயக்கிப்பார்க்க முடியவில்லையா?ஊடக உதவி ஆவணத்தை பார்வையிடவும்.


ஏன் புகுபதிகை செய்ய வேண்டும்?

விக்கிப்பீடியாவைப் படிப்பதற்கு நீங்கள் புகு பதிகை செய்ய வேண்டியத் தேவையே இல்லை. விக்கிப்பீடியா கட்டுரைகளை தொகுப்பதற்குக் (மாற்றுவதற்கு) கூட வேண்டியதில்லை—எவரும் விக்கிப்பீடியாவின் பெரும்பாலான கட்டுரைகளை புகுபதிகை செய்யாது தொகுக்க முடியும். இருப்பினும், இங்கு ஓர் பயனர் கணக்கைத் துவக்குவது விரைவானது, இலவசமானது மற்றும் தொந்தரவற்றது; பொதுவாக கணக்குத் துவக்குவது சிறந்த செயலாக பல காரணங்களுக்காகக் கருதப்படுகிறது. பயனர் கணக்கு உருவாக்குவதற்காக உங்கள் தனி நபர் தகவல் எதுவும் கேட்கப்பட மாட்டாது. தவிர, பயனர் கணக்கு உருவாக்குவதால் உங்களுக்குப் பல நன்மைகள் உண்டு. அவற்றுள் சில:

  • நீங்கள் விரும்பும் பயனர் பெயரைப் பெறலாம்
  • உங்கள் பங்களிப்புகள் அனைத்தையும் "என் பங்களிப்புகள்" என்ற இணைப்பைத் தெரிவு செய்து காணலாம்.
  • உங்களுக்கென்று ஒரு பயனர் பக்கம் கிடைக்கும்
  • உங்களுக்கெனத் தனியாக ஒரு பேச்சுப் பக்கமும் அதன் மூலம் பிற பயனர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பும் கிடைக்கும்.
  • நீங்கள் விரும்பினால் உங்களுக்கு பிற பயனர்கள் மின்னஞ்சல் அனுப்பும் வசதியும் கிடைக்கும். ஆனால், உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பிற பயனர்கள் அறிய இயலாது.
  • நீங்கள் விரும்பும் கட்டுரைகளில் நிகழும் மாற்றங்களை கண்காணிக்க கவனிப்பு பட்டியல் வசதி
  • விக்கிப்பீடியா பக்கங்களின் பெயர்களை மாற்றும் அனுமதி
  • கோப்புகளைப் பதிவேற்றும் அனுமதி
  • உங்கள் விருப்பத்திற்கேற்ப விக்கிப்பீடியா தளத் தோற்றத்தையும் நடத்தையையும் மாற்றிப் பார்வையிடும் அனுமதி
  • விக்கிப்பீடியா நிர்வாகி ஆகும் வாய்ப்பு
  • வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளும் உரிமை
  • பயனர் கணக்கு உருவாக்கிய பின், உங்கள் IP முகவரி பிற பயனர்களிடம் இருந்து மறைக்கப்படும்.

குறிப்பு: விக்கிப்பீடியாவில் ஓர் பயனர் கணக்கினைத் துவக்க புகுபதிகை பக்கம் செல்லுங்கள்.

பயனர்பெயர்

நீங்கள் கணக்குத் துவக்கும்போது உங்கள் பயனர் பெயரை தெரிந்தெடுத்துக்கொள்ளலாம். புகுபதிகை செய்தபின்னர் நீங்கள் கட்டுரைகளில் செய்யும் மாற்றங்கள் அந்தப் பெயருடன் இணைக்கப்படும். அதாவது அக்கட்டுரை வரலாற்றில் உங்கள் பங்களிப்பிற்கான முழு பெருமையும் கிடைக்கிறது. புகுபதிகை செய்யாதிருப்பின் அந்த பங்களிப்பு ஒவ்வொருமுறையும் மாறிக்கொண்டிருக்கக்கூடிய இணைய நெறிமுறை முகவரிக்குச் சேரும். Yஉங்கள் பங்களிப்புகள் அனைத்தையும் மேற்பகுதியில் உள்ள "என் பங்களிப்புகள்" இணைப்பைச் சொடுக்கிக் காணலாம் (இந்த இணைப்பு நீங்கள் புகுபதிகை செய்திருந்தாலே காணப்படும்).

உங்களுக்கேயான பயனர் பக்கம் ஒன்றில் உங்களைக் குறித்தத் தகவல்களை வெளியிடலாம். விக்கிப்பீடியா ஓர் வலைப்பதிவு வழங்கிஅல்ல எனினும் இங்கு சில நிழற்படங்கள் இடலாம்;உங்கள் மனமகிழ் செயல்களைப் பகிரலாம். பல பயனர்கள் அவர்கள் பெருமைகொள்ளும் கட்டுரைகளின் பட்டியலை பராமரிக்கவோ அல்லது விக்கிப்பீடியாவிலிருந்து பெற்ற மதிப்புமிக்க தகவல்களை சேமிக்கவோ பயன்படுத்துகின்றனர்.

உங்களுக்கு ஓர் நிரந்தர பயனர் பேச்சுப் பக்கம் ஏற்படுத்தப்பட்டு பிற பயனர்களுடன் உரையாட வசதி கிடைக்கும். வேறு யாரேனும் உங்களுக்கு செய்தி அனுப்பினாலும் அறிவிக்கப்படுவீர்கள். உங்களது மின்னஞ்சலை பகிர்ந்துகொண்டிருந்தீர்களாயின்,பிற பயனர்கள் உங்களுடன் அந்த மின்னஞ்சலில் உங்களைத் தொடர்பு கொள்ள முடியும். இந்த வசதியில் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புபவருக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி தெரியாது உங்கள் தனிவாழ்வு பாதுகாக்கப்படுகிறது.

நம்பிக்கையும் தனிவாழ்வும்

இணையத்திற்கு வெளியிலுள்ள அடையாளத்தைக் காட்டவேண்டியத் தேவை இல்லை என்றபோதிலும் விக்கிப்பீடியாவில் பதிந்திருப்பதால் உங்களுக்குக் கிடைக்கும் அடையாளத்தை மற்றவர்கள் கவனிப்பார்கள். முகமிலா பங்களிப்புகளை வரவேற்றாலும், புகுபதிகை செய்வது உங்களது நல்ல தொகுத்தல் வரலாற்றைக் கொண்டு மதிப்பையும் நம்பிக்கையையும் பெற உதவுகிறது. உங்களின் அடையாளம் (குறைந்தது விக்கிப்பீடியாவிற்குள்ளான அடையாளம்) தெரிந்தால், உங்களுடன் உரையாடவும் ஒருங்கிணைந்து செயல்படவும் இயலும். நெடுநாள் பங்களித்த விக்கிப்பீடியர்களுக்கு புதிய கணக்குத் துவங்கிய பதிவர்களுடன் நல்லெண்ண நம்பிக்கை கொள்வதும் எளிது.

விக்கிப்பீடியா பக்கங்கள் விசமத்தனமான தாக்குதல்களுக்கு ஆட்படுகிறது; தேவையற்றச் செய்திகளால் நிரப்பப்படுகிறது; விளம்பர பக்கங்கள் தரவேற்றப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். தகவல் மூலங்கள் ஆய்வு செய்யப்படவேண்டியத் தேவையும் கட்டாயமும் இங்கு உள்ளது. ஆகவே விக்கிப்பீடியா உண்மையான,நம்பகத்தன்மை மிக்க பங்களிப்பாளர்களையும் மூலங்களையும் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

நீங்கள் புகுபதிகை செய்யவில்லையென்றால், உங்கள் பங்களிப்புகள் அனைத்தும் தொகுப்பின்போதிருந்த பொதுப்பரப்பில் அறியப்படும் இணைய நெறிமுறை முகவரியுடன் இணைத்து பதிவு செய்யப்படும். அதேநேரம் புகுபதிகை செய்திருப்பின் அவை பொதுவெளியில் உங்கள் பயனர் பெயருடனும் உள்ளகத்தில் இணைய முகவரியுடனும் இணைந்திருக்கும். மேலும் இது குறித்து அறிய விக்கிமீடியாவின் தனிமை கொள்கை பக்கத்தைக் காணலாம்.

தனிவாழ்வு தாக்கங்கள் உங்கள் இணையச் சேவை வழங்குனர், உள்ளூர் சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள்,உங்களது தொகுத்தலின் வகை மற்றும் அளவு போன்றவற்றைப் பொறுத்து மாறும். விக்கிப்பீடியாவின் தொழில்நுட்பமும் கொள்கைகளும் மாறலாம் என்பதையும் கருத்தில் கொள்க.

புதிய தொகுத்தல் விருப்புகள்

விக்கிப்பீடியாவை இயக்கும் மீடியாவிக்கி மென்பொருளின் பல சிறப்பம்சங்கள் புகுபதிகை செய்த பயனர்களுக்கே கிடைக்கும். காட்டாக, தொகுப்புகளை சிறிய தொகுப்பாக குறிப்பது இவ்வாறான ஓர் வசதியாகும். "அண்மைய மாற்றங்கள்" பட்டியலில் சிறிய தொகுப்புகளை வடிகட்டுவது படிப்பதை எளிதாக்குகிறது இணைய நெறிமுறை முகவரியின் பின்னால் உள்ள நபர் யாரென்று தெரியாத நிலையில் நம்பிக்கை வைத்து முகமிலா பயனர்களுக்கு இந்த வசதி கொடுக்க இயலாது.

முனைப்பான பங்களிப்பாளர்களுக்கான மற்றொரு முக்கிய வசதி கவனிப்புப் பட்டியல்களாகும்.. நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு பக்கத்திலும் "கவனி" என்றொரு தத்தல் புதியதாக இருப்பதைக் கவனிக்கலாம். அதனை சொடுக்கினால் அந்தப் பக்கம் உங்கள் கவனிப்புப் பட்டியலில் சேர்க்கப்படும். இது உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்களின் மாற்றங்களை காட்டிடும் "அண்மைய மாற்றங்கள்" பக்கத்தின் வடிகட்டிய ஓர் காட்சியாகும்.இது நீங்கள் பங்களிக்கும் பக்கங்களில் ஏற்படும் மாற்றங்களை மட்டும் கவனிக்க ஓர் சிறந்த வசதியாகும்.

விக்கிப்பீடியாவின் சீர்மையையும் கட்டமைப்பையும் பராமரிக்கத் தேவைப்படும் ஒரு பக்கத்தின் பெயரை மாற்றும் அணுக்கம் புகுபதிகை செய்தவர்களுக்கே உள்ளது.

தவிர,படிமங்களை தரவேற்றஒருவர் புகுபதிகை செய்திருக்க வேண்டும்.

பல பயனர் விருப்பத்தேர்வுகள்

மேலே விவரித்த வசதிகள் தவிர, மீடியாவிக்கியின் இடைமுகத்தை பெருமளவு தனிப்பட்ட முறையில் அமைத்துக்கொள்ள முடியும். வலைத்தளத்தின் தோற்றத்தையே , ஓர் எடுத்துக்காட்டாக, இயல்பிருப்பாக உள்ள "MonoBook" தோற்றத்திற்கு பதிலாக "Standard" தோற்றத்திற்கு தேர்தெடுத்தால், மாற்றிலாம். கணித சமன்பாடுகள் எவ்வாறு காட்டப்படுகின்றன, தொகுப்புப் பெட்டி எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும், எத்தனை பக்கங்கள் "அண்மைய மாற்றங்கள்" பக்கத்தில் காட்டப்பட வேண்டும், நாட்கள் எவ்வாறு காட்டப்பட வேண்டும் என்பன போன்ற பலவற்றை விருப்பத்திற்கிணங்க அமைத்துக்கொள்ள முடியும்.

நிர்வாகி தகுதி

நிர்வாகிகள் (சிலநேரங்களில் அமைப்பு செயலர்(sysops) என்பதும் உண்டு) பக்கங்களை நீக்கவும் மீட்கவும், பக்கங்களை தொகுக்காதிருக்கும் வகையில் பாதுகாக்கவும், பல கொள்கை மீறல்கள் காரணமாக பயனர்களை தடை செய்யவும் அதிகாரம் உடையவர்கள். அவர்கள் பொதுவாக விக்கிப்பீடியா குமுகம்,விக்கிப்பீடியா:நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் போன்றவற்றின் மூலமாக தெரிவிக்கும் கருத்துக்களை நிறைவேற்றுபவர்கள்.

புகுபதிகை பயனர்களே நிர்வாகிகளாக தகுதி படைத்தவர்கள் என்பதில் கருத்து வேற்றுமை இல்லை. பொதுவாக நிர்வாகிகளாகத் தெரிந்தெடுக்கப்பட சில மாதங்கள் பகுதிநேர பங்களிப்பும் பிறருடன் இணக்கமான சூழலும் போதுமானதாக இருந்த போதிலும் தற்போது எதிர்பார்ப்புகள் கடினமாகி வருகின்றன.

நீங்கள் விக்கிப்பீடியா கணக்கு உடைய பயனராக இருந்து நிர்வாகியாக விரும்பினால், மேல் தகவல்களுக்கு விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தைப் பார்க்கவும்.

வாக்களிப்பு, தேர்தல்கள், கருத்துக்கணிப்பு, கோரிக்கைகள்

விக்கிப்பீடியா நடத்தும் கருத்துத் தேர்வுகளில் எவரும் தங்கள் கருத்தைப் பதியலாம் என்றாலும், கணக்கு உள்ள பயனரின் அடையாளம், பங்களிப்புகளின் தரம், போன்றவையால் புகுபதிகை செய்த பயனரின் கருத்துக்களுக்கு கூடுதல் மதிப்பு கொடுக்கப்படும். சில கருத்தெடுப்புகளில் புகுபதிகை செய்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவற்றிலும் கணக்கில்லாத பயனர்கள் தங்கள் கருத்துக்களை பதிய முடியும்.

விக்கிமீடியாவின் வாரியக்குழுவில் பயனர்களின் சார்பாக இருவர் உள்ளனர் - ஒருவர் அனைத்து பயனர்களின் சார்பாகவும், மற்றவர் கணக்கு உள்ள பயனர்களின் சார்பாகவும் பங்கேற்கின்றனர்.

புகுபதிகை பிரச்சினைகள்

எப்படி விடுபதிகை செய்வது ?

நீங்கள் புகுபதிகை செய்திருக்கும் பட்சத்தில் இந்த பக்கத்தின் வலது உச்சியில் உள்ள விடுபதிகை இணைப்பைத் தெரிவதன் மூலம் விடுபதிகை செய்ய முடியும்.

கணக்கு ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்களா ?

கணக்குத் துவங்க "இப்போதே கணக்குத் துவங்குங்கள்" இணைப்பைச் சுட்டினால் வரும் படிவத்தை நிரப்பிடுவீர்.. இது பதியப்பட்டு, பயனருக்கு அவருக்கான கணக்கு திறக்கப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதவி:புகுபதிகை&oldid=3838955" இலிருந்து மீள்விக்கப்பட்டது