உட்கருப்பொருள் மாற்றம்
Appearance
உட்கருப்பொருள் மாற்றம் (ஆங்கில மொழி: Transubstantiation; இலத்தீன்: transsubstantiatio; கிரேக்கம்: μετουσίωσις metousiosis) என்பது "திருப்பலியில் பயன்படுத்தப்படும் அப்பமும், இரசமும் இயேசுவின் உண்மையான உடலாகவும், இரத்தமாகவும் மாறுகின்றன"[1][2] என்ற கத்தோலிக்க திருச்சபையின் நற்கருணை இறையியல் கோட்பாட்டை விளக்கும் சொல் ஆகும். அப்பத்தின் கருப்பொருளே கிறிஸ்துவின் உடலின் பொருளாகவும், திராட்சை இரசத்தின் கருப்பொருளே கிறிஸ்துவின் இரத்தத்தின் பொருளாகவும் மாறும்[3] அதேநேரத்தில், அவற்றின் வடிவம், சுவை, மணம் ஆகிய வெளிப்புற பண்புகளில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை[4][5][6] என இந்த நற்கருணை இறையியல் கோட்பாடு கற்பிக்கிறது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Richard A. Nicholas, The Eucharist as the Center of Theology (Peter Lang 2005 ISBN 978-0-82047497-7), p. 292
- ↑ Teresa Whalen, The Authentic Doctrine of the Eucharist (Rowman & Littlefield 1993 ISBN 978-1-55612558-4), p. 12
- ↑ According to Catholic theology, the body of the living Christ, into which the bread is changed, is necessarily accompanied by his blood, his soul and his divinity, and similarly his body, his soul and his divinity are present "by concomitance" where his blood is.
- ↑ Donald L. Gelpi, The Conversion Experience (Paulist Press 1998 ISBN 978-0-80913796-1), p. 160
- ↑ John W. O'Malley, The Jesuits (University of Toronto Press 1999 ISBN 978-0-80204287-3), p. 546
- ↑ Liam G. Walsh, Sacraments of Initiation (LiturgyTrainingPublications 2011 ISBN 978-1-59525035-3), p. 326