உச்ச நீதிமன்ற அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உச்ச நீதிமன்ற அருங்காட்சியகம் (Supreme Court Museum) என்பது கூட்டாண்மை நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றுடன் இந்தியாவில் நீதித்துறையின் பயணத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் அரப்பன் முத்திரைகள், அசோகர் கல்வெட்டுகள், நாளந்தா செப்புத் தகடு போன்ற பொருட்களும் பிரித்தானிய ஆட்சியின் போது இருந்த இந்திய சட்ட அமைப்பு பற்றிய ஆவணங்கள் ஆகியவை இங்கு உள்ளன. முக்கிய தீர்ப்புடன் தொடர்புடைய பல நினைவுப் பொருட்களும் கோப்புகளும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.[1] இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி எம் என் வெங்கடாசலையாவின் ஆலோசனையின் படி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டில் ஆலோசனை வழங்கப்பட்டாலும் 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நிறைவேற்றப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் அருங்காட்சியகத்தில் சுமார் 1500 பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[2]

அருங்காட்சியகம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவு இந்தியாவில் நீதித்துறையின் பரிணாமங்கள் மற்றும் வளர்ச்சியைக் கையாள்கிறது. இரண்டாவது பிரிவு கூட்டாண்மை நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தைப் பற்றியதாகும்.

பிரகதி மைதான் மெட்ரோ வாயில் எண் 1 வழியாக வெளியேறி டெல்லி மெட்ரோ இரயில் வழியாக இந்த அருங்காட்சியகத்தை அடையலாம்.[3][4] செவ்வாய் முதல் ஞாயிறு வரை தினமும் 10 மணி முதல் 5 மணி வரை அருங்காட்சியகம் திறக்கப்படுகிறது. திங்கள் கிழமையும் இதர அரசு விடுமுறை நாட்களும் அருங்காட்சியகத்திற்கு விடுமுறை நாட்களாகும். நுழைவுக் கட்டணம் இல்லை. புகைப்படம் எடுத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.

சில குறிப்பிடத்தக்க ஆவணங்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Museum in Delhi : Supreme Court Museum". delhitourism.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-04-08.
  2. "At Delhi's Supreme Court Museum, relive the subcontinent's legal history". The Indian Express (in ஆங்கிலம்). 2020-02-07. பார்க்கப்பட்ட நாள் 2021-04-08.
  3. City, So (2016-11-15). "Proclaiming The Glory Of Our Fearless Judiciary: The Supreme Court Of India Museum". So City (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-08.
  4. Tripathi, Shailaja (2014-09-14). "Regal and supreme" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/metroplus/museum-musings-regal-and-supreme/article11134011.ece.