உள்ளடக்கத்துக்குச் செல்

உசாக் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உசாக் மாகாணம்
Uşak ili
துருக்கியில் உசாக் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் உசாக் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பிராந்தியம்ஏஜியன்
துணைப் பிராந்தியம்மனிசா
அரசு
 • தேர்தல் மாவட்டம்உசாக்
பரப்பளவு
 • மொத்தம்5,341 km2 (2,062 sq mi)
இடக் குறியீடு0276
வாகனப் பதிவு64
இணையதளம்http://www.usak.gov.tr/

உசாக் (Uşak Province, துருக்கியம்: Uşak ili ) என்பது மேற்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும் . இதன் அருகில் உள்ள மாகாணங்களாக மேற்கில் மனீசா, தெற்கில் தேனிஸ்லி, கிழக்கில், அபியோன்கராஹிசர், வடக்கே கெட்டஹ்யா ஆகியவை உள்ளன. மாகாண தலைநகரம் உசாக் நகரமாகும். இதன் வாகன பதிவு குறியீடு எண் 64 ஆகும். மாகாணம் 5,341 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது.

துருக்கி மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு எதிர்வினையாக, 2018 ஆகத்தில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட முகநூல், கூகுள், இன்ஸ்ட்டாகிராம், டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் எண்ணியில் விளம்பரம் செய்வதை நிறுத்த மாகாணம் முடிவு செய்தது. ஆயர் ஆண்ட்ரூ பிரன்சனை தடுப்பில் வைத்திருப்பது தொடர்பாக அமெரிக்கா இந்த தடைகளை விதித்தது. [1]

மாவட்டங்கள்

[தொகு]

உசாக் மாகாணம் 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டப்பட்டுள்ளளது):

  • பனாஸ்
  • இஸ்மி
  • கரஹல்லே
  • சிவாஸ்லே
  • உலுபே
  • உசாக்

காட்சியகம்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உசாக்_மாகாணம்&oldid=3075433" இலிருந்து மீள்விக்கப்பட்டது