போதகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு மெத்தடிஸ்ட் போதகர்

போதகர் என்பவர் ஒரு கிறிஸ்தவ சபையின் நியமிக்கப்பட்ட தலைவர் ஆவார். அவர் அந்தச் சமூகம் அல்லது சபையில் இருந்து வரும் மக்களுக்கு ஆலோசனையும் அளிப்பவராவார்.

இது இலத்தீன் வார்த்தையான pastor இல் இருந்து பயன்பாட்டிற்கு வந்தது. Pastor என்பதற்கு மேய்ப்பன் என்று பொருள்.[1] பெயருக்கு முன் பயன்படுத்தும்போது, "Ptr"/ "Pr" (ஒருமை) அல்லது "Ps" (பன்மை) எனும் சொற்களால் குறிக்கப்படும். எடுத்துக்காட்டு: Ptr. Benjamin.

வரலாறு[தொகு]

"போதகர்" என்ற வார்த்தை இலத்தீன் பெயர்ச்சொல் pastor இல் இருந்து உருவானது. அதாவது "மேய்ப்பர்" என்று பொருள்படும் இச்சொல் மற்றொரு வினைச்சொல்லான pascere – "மேய்ச்சலுக்கு வழிவகுக்கும், உணவளிக்கும்" என்பதிலிருந்து வந்தது.[2] "போதகர்" என்பது புதிய ஏற்பாட்டின்கீழ் மூப்பரின் பாத்திரத்தையும் தொடர்புபடுத்துகிறது, ஆனால் விவிலிய புரிதலான minister (மதகுரு) என்பதற்கு ஒத்ததாக இல்லை. பல சீர்திருத்த திருச்சபைத் தேவாலயங்கள் தங்கள் மதகுருக்களை "pastor" என்று தான் அழைக்கின்றன.

தற்கால பயன்பாட்டில் உள்ள பாஸ்டர் எனும் வார்த்தை விவிவியத்தில் உள்ள 'ஆடு மேய்க்கும்' என்ற உருவகத்தோடு வேரூன்றி உள்ளது. எபிரேய விவிலியம் (அல்லது பழைய ஏற்பாட்டில்) எபிரேய வார்த்தை רעה‎ ( roeheh ) என்பதை பயன்படுத்துகிறது, இது "மேய்ப்பர்" என ஒரு பெயர்ச்சொல்லாக பயன்படுத்தப்படுகிறது, மற்றும் "ஒரு மந்தையை பார்த்துக்கொள்வது போன்று" எனும் ஒரு வினைச்சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.[3] 144 பழைய ஏற்பாட்டு வசனங்களில் இது 173 முறை தென்படுகிறது, இவை யாவும் ஆதியாகமம் 29: 7 - இல் உள்ளபடி 'மந்தைக்கு உணவளிக்கும் என்ற இயல்பான பொருள்கொண்டே வருகிறது. எரேமியா 23: 4 இல், இரு அர்த்தங்களும் (ro'im என்பது "ஆடு மேய்ப்பவர்கள்" என்றும் yir'um என்பது "அவர்களை மேய்க்கும்" என்றும்) பயன்படுத்தப்படுகிறது.

எரேமியா 23:4 "அவைகளை மேய்க்கத்தக்கவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்."

பீட்டருக்கு கிறிஸ்து பொறுப்பு அளிப்பது ;ரபீல் ஓவியம், 1515. தம்முடைய ஆடுகளை மேய்க்கும்படி பேதுருவிடம் சொன்னபோது, கிறிஸ்து அவரை ஒரு போதகராக மேய்ப்பராக நியமித்தார்.

புதிய ஏற்பாட்டின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பொதுவாக கிரேக்க பெயர்ச்சொல் ποιμήν (poimēn) என்பதை "மேய்ப்பர்" என்றும் கிரேக்க வினைச்சொல் ποιμαίνω (poimainō) என்பதை "உண்பி/உணவளி" என்றும் மொழிபெயர்த்துள்ளது. இந்த இரண்டு வார்த்தைகளும் பெரும்பாலும் இயேசுவைக் குறிப்பிட்டு, புதிய ஏற்பாட்டில் மொத்தம் 29 முறை வருகின்றது. உதாரணமாக, இயேசு தன்னை 'நல்ல மேய்ப்பன்' என்று யோவான் 10:11 ல் குறிப்பிட்டார். கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகளில் ( லூக்கா 2) அதே வார்த்தைகள் அங்கிருந்த ஆடு மேய்ப்பர்களைக் குறிக்கின்றன.

ஆயினும் ஐந்து புதிய ஏற்பாட்டு பத்திகளில், இந்த வார்த்தைகள் திருச்சபை உறுப்பினர்களைக் குறிக்கின்றன :

 1. யோவான் 21:16 - இயேசு பேதுருவிடம், "என் ஆடுகளை மேய்ப்பாயாக" என்றார்
 2. அப்போஸ்தலர் 20:17 – அப்போஸ்தலனாகிய பவுல் எபேசுவில் உள்ள சபையின் மூப்பர்களுக்கு ஒரு கடைசி சொற்பொழிவைத் தர அழைக்கிறார்; அப்போஸ்தலர் 20:28 ல் அவர் பரிசுத்த ஆவியானவர் அவர்களை கண்காணிகளாக வைத்திருக்கிறார் என்றும், மேலும் அவர்கள் தேவனுடைய சபைக்கு ஆவிக்குரிய உணவளிக்க வேண்டும் என்றும் கூறுகிறார் .
 3. 1 கொரிந்தியர் 9: 7 – "எவன் மந்தையை மேய்த்து அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்?" என்று அப்போஸ்தலனாகிய பவுல் தன்னை குறித்தும் மற்ற அப்போஸ்தலர்களைக் குறித்தும்  கூறுகிறார்.
 4. எபேசியர் 4:13 - பவுல் இவ்வாறு எழுதினார்: "அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்".
 5. 1 பேதுரு 5: 1-2 - பேதுரு தனது வாசகர்களிடையே உள்ள மூப்பர்களிடம், "உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்" என்று கூறுகிறார்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. "pastor | Definition of pastor in English by Oxford Dictionaries".
 2. "pastor | Search Online Etymology Dictionary" (en).
 3. . 

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

 • NewAdvent.org, The Catholic Encyclopedia's entry on the term pastor.
 • LifeWay.com, Articles to help the pastor in the roles of preacher, missionary, leader, shepherd, and person.
 • Nacministers.com, Priesthood of All Believers: Explained and Supported in Scripture
"https://ta.wikipedia.org/w/index.php?title=போதகர்&oldid=2721936" இருந்து மீள்விக்கப்பட்டது