உகார் அசத்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உகார் அசத்லி
Vugar Asadli
நாடுஅசர்பைசான்
பிறப்பு9 October 2001 (2001-10-09) (வயது 22)
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2019)
பிடே தரவுகோள்2579 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2585 (அக்டோபர் 2021)[1]

உகார் அசத்லி (Vugar Asadli) அசர்பைசான் நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீரராவார். 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2019 ஆம் ஆண்டில் அசத்லிக்கு சதுரங்க கிராண்டு மாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது.[2][3] 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத் தரவுகளின்படி அசத்லி அசர்பைசான் நாட்டின் சதுரங்க தரவரிசையில் 9 ஆவது இடத்தில் இருந்தார்.[4]

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக இளைஞர் சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் 3 ஆவது பலகையில் விளையாடிய அசத்லி 6/8 புள்ளிகள் எடுத்தார். அதே சமயம் 2020 ஆம் ஆண்டு போர்ச்சுகல் திறந்தநிலை விரைவு சதுரங்கப் போட்டியில், இவர் 6.5/8 புள்ளிகள் பெற்று 9 ஆவது இடத்தில் இருந்தார்.[5] 2020 போர்ச்சுகல் திறந்தநிலை சதுரங்கப் போட்டியில் இவர் 7/9 புள்ளிகள் எடுத்தார். இயூகோ டென் எர்டாக்கு, எவ்கெனி அலெக்சீவ், எட்வர்டோ இடுரிசாகா, அலெக்சாண்டர் இண்ட்சிக்கு, ஆர்யன் தாரி, அலெக்சாண்டர் மோட்டிலெவ் மற்றும் திக்ரான் கமாரியன் ஆகியோருடன் 2 முதல் 9 ஆவது வரையிலான இடத்தில் இருந்தார்.[6] பக்கூ திரந்தநிலை சதுரங்கப் போட்டியில் 2019 ஆம் ஆண்டில் இவர் 7.5/9 புள்ளிகள் எடுத்து 3 ஆவது இடத்தைப் பிடித்தார்.[7]

அசாத்லி 2017 ஆம் ஆண்டில் பிடே அமைப்பிடமிருந்து பன்னாட்டு மாசுட்டர் பட்டத்தையும், 2015 ஆம் ஆண்டில் பிடே மாசுட்டர் பட்டத்தையும், 2014 ஆம் ஆண்டில் மாசுட்டர் பட்டத்தையும் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ratings Progress Chart: Asadli, Vugar". ratings.fide.com. பார்க்கப்பட்ட நாள் 17 November 2021.
  2. "Title application for Grandmaster" (PDF). ratings.fide.com. 1 August 2019.
  3. "Titles approved by Q3 2019 Presidential Board". FIDE. 25 September 2019.
  4. "Asadli, Vugar FIDE Chess Profile - Players Arbiters Trainers". ratings.fide.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.
  5. pedrograve (3 February 2020). "Portugal Open: Karen Grigoryan wins also in rapid – OPEN PORTUGAL 2020". portugalopen.fpx.pt (in ஐரோப்பிய போர்ச்சுகீஸ்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.
  6. pedrograve (2 February 2020). "Karen Grigoryan is the new King of Portugal Open – OPEN PORTUGAL 2020". portugalopen.fpx.pt (in ஐரோப்பிய போர்ச்சுகீஸ்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.
  7. "Chess-Results Server Chess-results.com - Baku Open 2019, group Open,". chess-results.com. 28 September 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.

புற இணைப்புகள்[தொகு]

  • Vugar Asadli rating card at FIDE
"https://ta.wikipedia.org/w/index.php?title=உகார்_அசத்லி&oldid=3857257" இலிருந்து மீள்விக்கப்பட்டது