உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்யன் தாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்யன் தாரி
Aryan Tari
2015 உலக விரைவு சதுரங்க வெற்றியாளர் போட்டியில் தாரி
நாடுநோர்வே
பிறப்பு4 சூன் 1999 (1999-06-04) (அகவை 25)
இசுடாவஞ்சர், நார்வே
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2016)
பிடே தரவுகோள்2653 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2672 (சூலை 2022)
தரவரிசைஇல. 91 (திசம்பர் 2021)
உச்சத் தரவரிசைஎண். 74 (சூலை 2022)

ஆர்யன் தாரி (Aryan Tari) ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த நார்வே நாட்டு சதுரங்க வீரர் ஆவார். 1999 ஆம் ஆண்டு சூன் மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கிராண்ட்மாசுட்டர் பட்டம் பெற்றுள்ளார். 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நார்வே நாட்டு வெற்றியாளராக இருந்தார். 2017 ஆம் ஆண்டு உலக இளையோர் சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை வென்றார். 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி நடப்பு உலக சதுரங்க வெற்றியாளரான மேக்னசு கார்ல்சனுக்குப் பிறகு, நார்வேயில் இருந்து பிடே அமைப்பின் இரண்டாவது மிக உயர்ந்த தரவரிசை புள்ளிகள் கொண்ட வீரராக உள்ளார். சென்னையில் நடைபெறும் 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் கலந்துகொண்டு விளையாடுகிறார்.

சதுரங்க வாழ்க்கை

[தொகு]

ஐந்து வயதிலிருந்தே தாரி சதுரங்கம் விளையாடத் தொடங்கினார். 2012 ஆம் ஆண்டு நார்வே இளையோர் பிரிவு சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை வென்றார், [1] 2013 ஆம் ஆண்டு இலேண்ட்சுடர்னெரிங்கென் வெற்றியாளர் போட்டிக்குத் தகுதி பெற்றார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற இப்போட்டியில் எட்டாவது இடத்தையும் [2] 2014 ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தையும் பிடித்தார். [3] தாரி 2015 ஆம் ஆண்டு இப்போட்டியின் வெற்றியாளர் பட்ட்டத்தைப் பிடித்தார். 15 வயதில் வெற்றி பெற்ற அக்டெசுடீன் மற்றும் மேக்னசு கார்ல்சன் ஆகியோருக்குப் பிறகு, 16 வயதில் இந்த சாதனையை எட்டிய மூன்றாவது இளைய வீரர் என்ற சிறப்பு இவருக்குக் கிடைத்தது.

2013 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் பேகர்னெசு நகரில் நடந்த நார்வே திறந்தநிலை வெற்றியாளர் போட்டியில் தாரி ஏழாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் கிராண்ட்மாசுட்டர் பட்டத்திற்கான தகுதியைப் பெற்றார். அந்த நேரத்தில் இவ்வாறு தகுதிபெற்ற இரண்டாவது இளைய நார்வே வீரர் [4] என்ற சிறப்பும் கிடைத்தது.

2015 ஆம் ஆண்டு ரெய்காவிக்கில் நடந்த ஐரோப்பிய அணி சதுரங்க வெற்றியாஅளர் போட்டியில் ஒன்பது சுற்றுகளில் தாரி தனது இரண்டாவது கிராண்ட்மாசுட்டர் தகுதி நிலையைப் பெற்றார். அங்கு இவர் நார்வேயின் மூன்றாவது பலகையில் விளையாடி ஆறு புள்ளிகளைப் பெற்றார். [5] சிறப்பு கண்ட அணிகளுக்கு இடையிலான 20 ஆட்ட வெற்றியாளர் போட்டியில் [6] பேகர்னசின் விதிமுறையான 2500 பிடே மதிப்பீடு புள்ளிகள் பெற்று கிராண்ட்மாசுட்டர் பட்டம் வென்றார். இந்த வெற்றியாளர் தலைப்பு 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பிடே கூட்டத்தில் வழங்கப்பட்டது. இந்தப் பட்டத்தைப் பெறும் நார்வேயின் 12 ஆவது வீரர் தாரியாவார்.

2016 ஆம் ஆண்டு மே மாதம் 12 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற்ற ஐரோப்பிய தனிநபர் சதுரங்க வெற்றியாளர் போட்டியில் விளையாடிய தாரி தனது வாழ்க்கையில் 7½/11 (+5-1=5) என்ற முடிவுகளுடன் தனது சிறந்த போட்டி முடிவை அடைந்தார். இது அவருக்கு இருபத்தி இரண்டாவது இடத்தைப் பெற்றுத் தந்தது. இதனால் 2017 ஆம் ஆண்டு திபிலிசியில் நடந்த சதுரங்க உலகக் கோப்பையில் போட்டியில் விளையாட இவருக்கு இடம் கிடைத்தது, அங்கு அலெக்சாண்டர் லெண்டர்மேனிடம் 1½-½ என்ற கணக்கில் தோற்று இரண்டாவது சுற்றில் வெளியேறினார்.

2019/2020 பருவத்தில் தாரி செக் எக்சட்ராலிகா அணியான சுலாவியா கிரோமசுரிசுக்காக வெளிநாட்டவராக விளையாடினார். [7] [8] 2020/2021 ஆம் ஆண்டுகளில் எசுப்பானிய செக்லப் போட்டியில் இவர் சேத்ரெசு அவரென்சு அணிக்காக விளையாடினார். [9]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

தாரி இசுடாவஞ்சரில் [10] பாரனாக் மற்றும் சியாமக் தாரிக்கு பிறந்தார். இவர் பிறப்பதற்கு முன்பே இவருடைய பெற்றோர் நார்வேக்கு குடிபெயர்ந்த ஈரானைச் சேர்ந்தவர்கள் ஆவர்.[11]

குறிப்புகள்

[தொகு]
  1. "Landsturneringen 2012". Turneringsservice. 29 June 2014. பார்க்கப்பட்ட நாள் 18 July 2015.
  2. "Landsturneringen 2013". Turneringsservice. 17 July 2015. பார்க்கப்பட்ட நாள் 18 July 2015.
  3. "Landsturneringen 2014". Turneringsservice. 19 July 2014. பார்க்கப்பட்ட நாள் 18 July 2015.
  4. "Aryan Tari – GM Norm at thirteen". Chessbase. 7 April 2013. http://en.chessbase.com/post/aryan-tari--gm-norm-at-thirteen-090413. பார்த்த நாள்: 18 July 2015. 
  5. "Etcc 2015 - Open section". Chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 25 November 2015.
  6. "Table for Direct Titles effective from 1 July 2014". FIDE. பார்க்கப்பட்ட நாள் 25 November 2015.
  7. "Družstvo - Slavia Kroměříž".
  8. "Slávistické zbrojení a hartusení na sezónu 2019/2020".
  9. "CECLUB División de Honor - 2021".
  10. GM title application. FIDE.
  11. Nilsen, Bjørn Haakon (22 December 2013). "- JEG ER DEN NESTE SJAKK-KONGEN" (in Norwegian). Se og Hør. http://www.seher.no/kjendis/jeg-er-den-neste-sjakk-kongen-67835. பார்த்த நாள்: 18 July 2015. 

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆர்யன் தாரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்யன்_தாரி&oldid=3477964" இலிருந்து மீள்விக்கப்பட்டது