உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரேழ்வரிப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈரேழ்வரிப்பா (sonnet) ஐரோப்பாவில் உருவான கவிதை வடிவங்களில் ஒன்று. 13ம் நூற்றாண்டில் தற்போது கொண்டிருக்கும் வடிவைப் பெற்றது. இவ்வகைக் கவிதைகள் பதினான்கு வரிகளையும் மாற்றக்கூடாத ஒலி இயைபு விதிமுறைகளையும், உள்ளமைப்பையும் கொண்டுள்ளன. சோனட் கவிதைகளின் மரபுகள் காலஓட்டத்தில் மாறியுள்ளன. சானட் எழுதுவோர் ”சானடியர்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள். வில்லியம் ஷேக்ஸ்பியர் இவர்களுள் மிகவும் புகழ் பெற்றவர். தற்கால ஆங்கில சானட்டின் வடிவமுறைகள் உருவாக்கியவர் இவரே.

தற்கால ஆங்கில சானட்டில் 14 வரிகள் உள்ளன. ஓவ்வொரு வரியிலும் பத்து அசைகள் உள்ளன. ஆங்கில சானட்டுகள் அயாம்பிக் பெண்டாமீட்டர் எனப்படும் குறில்-நெடில் ஈரசைச் சீர்வரிசை முறையை பயன்படுத்தி எழுதப்படுகின்றன. இவ்வகையில் எழுதப்படும் வரிகளைப் படிக்கும் போது அசைகளை ஒன்றை விட்டு ஒன்று அழுத்திப் படிக்க வேண்டும். சானட்டின் பதினான்கு வரிகளில் பின்வரும் ஒலி இயைபு முறை பயன்படுத்தப்படுகிறது - அ-ஆ-அ-ஆ, இ-ஈ-இ-ஈ, உ-ஊ-உ-ஊ, எ-எ; எடுத்துக்காட்டாக ஷேக்ஸ்பியரின் 116வது சானட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Let me not to the marriage of true minds (அ)
Admit impediments, love is not love (ஆ)*
Which alters when it alteration finds, (அ)
Or bends with the remover to remove. (ஆ)*
O no, it is an ever fixéd mark (இ)**
That looks on tempests and is never shaken; (ஈ)***
It is the star to every wand'ring bark, (இ)
Whose worth's unknown although his height be taken. (இ)***
Love's not time's fool, though rosy lips and cheeks (உ)
Within his bending sickle's compass come, (ஊ)*
Love alters not with his brief hours and weeks, (உ)
But bears it out even to the edge of doom: (ஊ)*
If this be error and upon me proved, (எ)*
I never writ, nor no man ever loved. (எ)*

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரேழ்வரிப்பா&oldid=3235101" இலிருந்து மீள்விக்கப்பட்டது