ஈனாத்து பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈனாத்து பாலம்

ஈனாத்து பாலம் (Enathu Bridge) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ளது. பிரதான மத்திய சாலையில் உள்ள முக்கிய பாலங்களில் இதுவும் ஒன்றாகும். கேரளாவின் ஈனாத்து கிராமத்தில் இந்த பாலம் அமைந்துள்ளது. கொல்லம் மாவட்டத்தை பத்தனம்திட்டா மாவட்டத்துடன் இப்பாலம் இணைக்கிறது. கல்லாடா ஆற்றின் மீது 2017 ஆம் ஆண்டில் ஈனாத்து பாலம் கட்டப்பட்டது.[1]

வரலாறு[தொகு]

ஈனாத்து கிராமத்தில் முதல் பாலம் 1900 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது..[2] 1990 ஆம் ஆண்டுகளில் இந்தப் பாலம் பழமையானதாகக் கண்டறியப்பட்டது மற்றும் 1998 ஆம் ஆண்டில் பி.ஜே. ஜோசப் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது மூன்றாம் நாயனார் காலத்தில் புதிய கற்காரை பாலம் கட்டப்பட்டது.[3][4][5][6]

2017 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இந்தப் பாலத்தில் விரிசல்கள் கண்டறியப்பட்டு, பராமரிப்புக்காக மூடப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 31 ஆம் தேதியில் பாலம் பொது போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டது.[7][8][9] பாலத்தின் மறு கட்டுமானத்தின் போது, அடூர் மற்றும் கொட்டாரக்கரை இடையே போக்குவரத்தை எளிதாக்க ஈனாத்துவில் தற்காலிக பெய்லி பாலத்தை இந்திய இராணுவம் அமைத்தது.[10]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Enathu bridge reopened". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/enathu-bridge-reopened/article19598697.ece. பார்த்த நாள்: 1 September 2017. 
  2. "Enathu bridge: Minister to meet experts". Times of India. http://m.timesofindia.com/city/thiruvananthapuram/enathu-bridge-min-to-meet-experts/articleshow/56605854.cms. பார்த்த நாள்: 10 August 2017. 
  3. "Cracks detected on Enathu bridge, traffic regulated". தி இந்து. http://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/Cracks-detected-on-Enathu-bridge-traffic-regulated/article17022136.ece. பார்த்த நாள்: 10 August 2017. 
  4. "Enathu bridge closed for traffic". தி இந்து. http://www.thehindu.com/news/national/kerala/Enathu-bridge-closed-for-traffic/article17041081.ece. பார்த்த நாள்: 10 August 2017. 
  5. "Repair work on Enathu Bridge begins". தி இந்து. http://www.thehindu.com/news/national/kerala/Repair-work-on-Enathu-Bridge-begins/article17027091.ece. பார்த்த நாள்: 10 August 2017. 
  6. "Bridge repair progressing at Enathu". தி இந்து. http://www.thehindu.com/news/national/kerala/bridge-repair-progressing-at-enathu/article18475718.ece. பார்த்த நாள்: 10 August 2017. 
  7. "All set for the opening of Enathu Bridge". தி இந்து. http://www.thehindu.com/news/national/kerala/all-set-for-the-opening-of-enathu-bridge/article19588780.ece. பார்த்த நாள்: 31 August 2017. 
  8. "Enathu Bridge to get ready for traffic; Inauguration on Aug 31". Mathrubhumi. http://english.mathrubhumi.com/mobile/news/kerala/enathu-bridge-to-get-ready-for-traffic-inauguration-on-aug-31-reconstructed-bridge-pwd-works-kerala-1.2195921. பார்த்த நாள்: 31 August 2017. 
  9. "Enath bridge reopened after maintenance work". தி டெக்கன் குரோனிக்கள். http://www.deccanchronicle.com/nation/in-other-news/010917/enath-bridge-reopened-after-maintenance-work.html. பார்த்த நாள்: 1 September 2017. 
  10. "Kerala's first military-made Bailey bridge set to open in Enathu". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2023-09-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈனாத்து_பாலம்&oldid=3932323" இலிருந்து மீள்விக்கப்பட்டது