இ. சி. இரகுநாதையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இ. சி. இரகுநாதையர் 1667 இல் இலங்கையில் முதன்முதலாக வாக்கிய பஞ்சாங்கத்தைக் கணித்து வெளியிட்டவரான இராமலிங்க முனிவரின் வழி வந்தவர். இவரது பாட்டனாரான சந்திரசேகர ஐயர் இரகுநாதையர் காலயுக்தி வருடம் (1858 - 1859) முதலும், பின்னர் இவரது தகப்பனார் இ. சிவராமலிங்கையர் ஜய வருடம் (1894 - 1895) முதலும் கணித்து வெளியிட்டுவந்த இப் பஞ்சாங்கத்தைப் பொறுப்பேற்று, விக்கிரம வருடம் (1940 - 1941) முதல் குரோதி வருடம் (1964 - 1965)வரை கணித்து வெளியிட்டார். இவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்தவர்.

இவரது தந்தையார் காலத்தில் நிறுவப்பட்ட சோதிடப் பிரகாச அச்சியந்திரசாலை மூலமாகப் பஞ்சாங்கத்தை அச்சிட்டு வெளியிட்டு வந்தது மட்டுமன்றி வேறு பல நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

பதிப்பித்த நூல்கள்[தொகு]

  • ஆசௌச தீபிகை
  • சுப்பிரமணியர் கவசம்
  • சந்தான தீபிகை பொழிப்புரை (1940)
  • சனிதுதி
  • சிவசிராத்த விதி
  • சிவாலய தரிசனவிதி
  • செகராசசேகரமாலை தமது உரையுடன் (1942)
  • நல்வழி, (தத்துவார்த்த விளக்கவுரையுடன்)

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._சி._இரகுநாதையர்&oldid=3233371" இருந்து மீள்விக்கப்பட்டது