இஸ்பார்டா மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஸ்பார்டா மாகாணம்
Isparta ili
துருக்கியின் மாகாணம்
துருக்கியில் இஸ்பார்டா மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் இஸ்பார்டா மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதிமத்திய தரைக்கடல்
துணைப் பகுதிஅந்தல்யா
அரசு
 • தேர்தல் மாவட்டம்இஸ்பார்டா
பரப்பளவு
 • மொத்தம்8,993 km2 (3,472 sq mi)
மக்கள்தொகை (2018)[1]
 • மொத்தம்4,41,412
 • அடர்த்தி49/km2 (130/sq mi)
தொலைபேசி குறியீடு0246
வாகனப் பதிவு32

இஸ்பார்டா மாகாணம் (Isparta Province, (துருக்கியம்: Isparta ili) என்பது தென்மேற்கு துருக்கியில் உள்ள மாகாணம் ஆகும். இது வடமேற்கில் அபியோன்கராஹிசர், தென்மேற்கில் பர்தூர், தெற்கில் அந்தால்யா, கிழக்கில் கொன்யா ஆகிய மாகாணங்களை எல்லையாக கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 8,993 கி.மீ2 ஆகும். மக்கள் தொகை 448,298 ஆகும். இதன் மக்கள் தொகை 1990 இல் 434,771 என்றிருந்து அதிகரித்துள்ளது. மாகாண தலைநகரம் இஸ்பார்டா ஆக்கும்.

ஆப்பிள், புளிப்பு செர்ரி, திராட்சை, ரோஜாக்கள் , ரோஜா பொருட்கள், தரைவிரிப்புகளுக்கு இந்த மாகாணம் நன்கு அறியப்படுகிறது. உலுபோர்லு என்ற பகுதியில் நல்ல வளமான நிலங்கள் உள்ளன. இந்த மாகாணம் துருக்கியின் மத்திய தரைக்கடல் பிராந்தியத்தின் குல்லர் பால்கேசி (ஏரிகள் பகுதி) இல் அமைந்துள்ளது மற்றும் பல நன்னீர் ஏரிகளைக் கொண்டுள்ளது.

மாவட்டங்கள்[தொகு]

இஸ்பார்டா மாகாணம் 13 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):

  • அக்ஸு
  • அட்டபே
  • இகிர்டிர்
  • கெலெண்டோஸ்ட்
  • கோனென்
  • இஸ்பார்டா
  • கெசிபோர்லு
  • சர்கிகராக்ஸ்
  • செனிர்கென்ட்
  • சாட்டலர்
  • உலுபோர்லு
  • யல்வசி
  • எனிசர்படிமி

காணத்தக்க தளங்கள்[தொகு]

மகாணத்தில் காணத்தக்க இடங்களாக கோவாடா ஏரி மற்றும் கோசால்டாஸ் தேசிய பூங்காக்கள், இஸ்பார்டா கோல்கே, அமியோல் மற்றும் குயுகாக் வன பொழுதுபோக்கு பகுதிகள், ஈயிர்டிர் ஓக் மற்றும் சாட்டலர் வனப் பாதுகாப்புப் பகுதிகள், ஈயிர்டிர், உலுபோர்லு மற்றும் யால்வா அரண்மனைகள், பிசிடியாவில் உள்ள அந்தியோகியா மற்றும் அப்பல்லோனியா பழங்கால நகரங்கள், இஸ்பார்டா ஹாசர் பே, குட்லு பே, ஃபிர்தேவ்ஸ் பே, எப்லிக், எயிர்டிர் ஹஸர் பே, பார்லா ஷானிகிர், உலூபே வேலி பாபா பள்ளிவாசல்கள், ஃபிர்தேவ்ஸ் பே பஜார், எயிர்டிர் இன் (காரவன்சா), ஹான்வார்ட், ஹான் எட்வான்சார்ட் போன்றவை ஆகும்.

2020 ஆம் ஆண்டில், யல்வாஸ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இருந்த குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த 10 மீட்டர் உயர பாறையானது புதையல் வேட்டைக்காரர்களால் சிதைக்கபட்டது. [2]

காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்பார்டா_மாகாணம்&oldid=3072585" இருந்து மீள்விக்கப்பட்டது