இளம் அறிவியலாளர் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளம் அறிவியலாளர் திட்டம் அல்லது யுவிகா (Young Scientist Programme) ("யுவ விக்யானி கரியக்ரம்" என்பதன் சுருக்கம்) என்பது இந்திய விண்வெளித் துறையின் நிதியுதவியுடன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆண்டுதோறும் வழங்கும் விண்வெளிக் கல்வி மற்றும் பயிற்சித் திட்டமாகும்.[1] இந்தியாவில் "இளைஞர்களிடையே இளம்வயதிலே விண்வெளி தொழில்நுட்பங்களில் ஆர்வத்தை உருவாக்க" இந்திய அரசு இத்திட்டத்தினை உருவாக்கியுள்ளது. அதிகாரப்பூர்வமாக 2019 சனவரி 18 அன்று அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தினை இசுரோ தலைவர் கே சிவன் 2019ஆம் ஆண்டு மே 17ம் நாளன்று துவக்கி வைத்தார்.

இளம் விஞ்ஞானி திட்டம் (Young Scientist Programme) (யுவிகா)
Mottoஇளைஞர்களிடையே விண்வெளி தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
Founderஇஸ்ரோ
நாடுஇந்தியா
துவங்கியது13 மே 2019; 4 ஆண்டுகள் முன்னர் (2019-05-13)
Closedயுவிகா 19 முடிவுற்றது30 மே 2019 (2019-05-30). வருடாந்திர நிகழ்வு
Fundingஇஸ்ரோ
தற்போதைய நிலையுவிகா 19, முடிவுற்றது

கண்ணோட்டம்[தொகு]

இந்த திட்டம் குறித்த அறிவிப்பினை இஸ்ரோ தலைவர் கே. சிவன் ஜனவரி 18, 2019 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நடத்திய மாணவர் அவுட்ரீச் திட்டத்தின் போது அறிவித்தார்.[2] இந்த திட்டத்தை வெற்றிகரமாக மாற்ற மாநில அரசுகள் மற்றும் கல்வித் துறைகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவிப்பில் சிவன் வலியுறுத்தினார்.[1][3]

வரலாறு[தொகு]

இந்த திட்டத்தின் நோக்கமானது, "இளம் மனதில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காகவும் வளர்ப்பதற்காகவும்" ஆகும்.[2] "கல்வி செயல்திறன் மற்றும் கல்வி சார்ந்த செயல்பாடுகள்" அடிப்படையில் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கிராமப்புற பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தேர்வில் முன்னுரிமை வழங்கப்படும்" என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.[4]

இந்த திட்டத்தில் பகுதியாக, தகைசால் அறிவியல் அறிஞர்களின் உரை, ஆய்வகங்களைச் சுற்றிப் பார்த்தலுடன் விண்வெளி தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடலுக்கான அமர்வுகளுடன் கூடியதாக இந்த பயிற்சி அமைக்கப்பட்டது.[5]

யுவிகா 19[தொகு]

ஒவ்வொரு கோடை விடுமுறை நாட்களிலும் இரண்டு வாரப் பயிற்சியாக இத் திட்டம் அமைந்தது. இத் திட்டத்தின் முதல் பயிற்சி, மே 13, 2019 அன்று தொடங்கியது. இத் திட்டத்தில் 2019–2020 கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.[6]

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இஸ்ரோவின் நான்கு மையங்களில் 2 வாரப் பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விக்ரம் சரபாய் விண்வெளி மையம் (வி.எஸ்.எஸ்.சி), திருவனந்தபுரம்; யு.ஆர்.ராவ் சேட்டிலைட் சென்டர் (யு.ஆர்.எஸ்.சி), பெங்களூரு; விண்வெளி பயன்பாட்டு மையம் (எஸ்ஏசி), அகமதாபாத் மற்றும் வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் (நேசாக்), ஷில்லாங் ஆகிய நான்கு மையங்களில் இளைஞர்கள் பயிற்சி பெற்றனர்.[7]

இந்த நிகழ்ச்சி 2019 மே 25 அன்று அந்தந்த மையங்களில் நிறைவடைந்தது. YUVIKA'19 பங்கேற்பாளர்கள் அனைவரும் 'RH200 ஒலி ஏவூர்தி' ஏவப்பட்டதைக் கண்டனர் .[8]</br>

யுவிகா'20[தொகு]

யுவிகா 20 மே 2020இல் நடைபெறவிருந்தது, ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.[9][10][11]

காலவரிசை[தொகு]

யுவிகாவின் வரலாறு
ஆண்டு முதல் வரை பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை சிறப்பு குறிப்புகள்
2019 மே 13 மே 25 111 மாணவர்கள் பங்கேற்பாளர்களுக்கு 'RH200 சவுண்டிங் ராக்கெட்' அறிமுகப்படுத்தப்பட்டது.
2020 மே 11 மே 22 113 மாணவர்கள் இந்தியாவில் COVID-19 தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. 2.0 2.1 "Young Scientist Programme". Current Affairs Today. 2019-01-19. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. "IN NEWS- YOUNG SCIENTIST PROGRAMME (YUVIKA)". www.insightsonindia.com. March 26, 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  5. https://www.careers360.com. "ISRO launches Young Scientist Programme for School Children; Registrations open till April 13 | Careers360". news.careers360.com. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02. {{cite web}}: External link in |last= (help)CS1 maint: numeric names: authors list (link)
  6. "Register for ISRO's Young Scientist Programme till April 3". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  7. "Young Scientist Programme (Yuvika-2019) concluded - ISRO". www.isro.gov.in. Archived from the original on 2019-08-30. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  8. "Young Scientist Programme (Yuvika-2019) concluded - ISRO". www.isro.gov.in. Archived from the original on 2019-08-30. பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  9. "ISRO Yuvika 2020: इसरो ने स्थगित किया युवा विज्ञानी कार्यक्रम". Hindustan (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2020-07-29.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  10. Desk, The Hindu Net. "Selection for ISRO’s Young Scientist Programme 2020 for school children is now open". https://www.thehindu.com/sci-tech/science/selection-for-isros-young-scientist-programme-2020-for-school-children-is-now-open/article30725486.ece. 
  11. "YUVIKA 2020 Postponed - ISRO". www.isro.gov.in. Archived from the original on 2020-08-12. பார்க்கப்பட்ட நாள் 2020-07-29.