இல்கல் புடவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இல்கல் புடவை நெசவு செய்யும் படம்
இல்கல் புடவை அணிந்துள்ள இந்திய பெண் பழ வியாபாரி

இல்கல் புடவை (Ilkal sari) என்பது ஒரு பாரம்பரிய புடவை வகையாகும். இது இந்தியாவில் பொதுவான பெண்களின் உடையாக விளங்குகிறது. இல்கல் புடவை இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள இல்கல் நகரத்திலிருந்து அதன் பெயரைப் பெற்றது. இல்கல் புடவை பருத்தியிலான பாவு, ஓரத்திற்கும், புடவையின் பல்லு பகுதிக்கும் செயற்கைப் பட்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி நெய்யப்படுகின்றன. சில சமயங்களில் செயற்கைப் பட்டுக்குப் பதிலாக தூயப் பட்டும் பயன்படுத்தப்படுகிறது. இல்கல் புடவைக்கு புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்டுள்ளது.[1] அதன் GI குறிச்சொல் எண் 76 [2] ஆகும்

வரலாறு[தொகு]

இல்கல் நகரம் ஒரு பண்டைய நெசவு மையமாக இருந்துள்ளது. இங்கு கி.பி 8 ஆம் நூற்றாண்டிலேயே நெசவு தொடங்கியுள்ளது.[3] இந்த புடவைகளின் வளர்ச்சிக்கு பெல்லாரி நகரமும் அதைச் சுற்றியுள்ள உள்ளூர் தலைவர்கள் வழங்கிய ஆதரவே காரணம். மேலும், உள்ளூரிலேயே மூலப்பொருட்கள் கிடைப்பதும் இந்தப் புடவையின் வளர்ச்சிக்கு உதவியது. இல்கல் நகரில் சுமார் 20000 பேர் புடவை நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.[4]

உற்பத்தி[தொகு]

இல்கல் புடவைகளை நெசவு செய்வது பெரும்பாலும் உள்ளரங்குகளிலேயே நடைபெறும் ஒரு செயலாகும். இது அடிப்படையில் பெண் உறுப்பினர்கள் பங்கேற்பதை உள்ளடக்கிய ஒரு வீட்டு நிறுவனமாகும். கைத்தறியின் உதவியுடன் ஒரு புடவை நெய்ய சுமார் 7 நாட்கள் ஆகும். விசைத்தறியின் உதவியாலும் நெசவு செய்யப்படுகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Rakesh Prakash (11 April 2008). "K'taka gets highest number of GI tags".
  2. List of Geographical Indications in India
  3. Brief history of Ilkal saris is provided by Kamala Ramakrishnan. "Southern legacy". Online edition of the Hindu, dated 1999-06-20. 1999, The Hindu. Archived from the original on 1 July 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-04-22. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. The history of Indian saris is discussed by SUBBALAKSHMI B M. "Between the folds". Online edition of the Deccan Herald, dated 2003-11-23. 1999 The Printers (Mysore) Private Ltd. Archived from the original on 2007-04-04. பார்க்கப்பட்ட நாள் 2007-04-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இல்கல்_புடவை&oldid=3856556" இலிருந்து மீள்விக்கப்பட்டது