இலிங்கப்பா நாராயண சுவாமி
ஓய்வுபெற்ற நீதிபதி இலிங்கப்பா நாராயண சுவாமி L. Narayana Swamy | |
---|---|
தலைமை நீதிபதி, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் | |
பதவியில் 6 அக்டோபர் 2019 – 30 சூன் 2021 | |
பரிந்துரைப்பு | ரஞ்சன் கோகோய் |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
தலைமை நீதிபதி, கர்நாடக உயர் நீதிமன்றம் | |
பதவியில் 18 சனவரி 2019 – 9 மே 2019 | |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் 4 சூலை 2007 – 5 அக்டோபர் 2019 | |
பரிந்துரைப்பு | கொ. கோ. பாலகிருஷ்ணன் |
நியமிப்பு | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூலை 1959[1] பத்ராவதி, கர்நாடகா |
இலிங்கப்பா நாராயண சுவாமி (Lingappa Narayana Swamy) ஒரு இந்தியாவைச் சேர்ந்த ஒரு நீதிபதியாவார். 1959 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகவும் இருந்தார். இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி தினேசு மகேசுவரி பதவி உயர்வு பெற்ற பிறகு, 18 ஜனவரி 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 18 ஆம் தேதி முதல் 9 மே 2019 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி வரை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக [2][3] பணியாற்றினார்.
தொழில்
[தொகு]சுவாமி இளங்கலை பட்டம் பெற்ற பின்னர் சட்டப் பாடத்திலும் இளநிலை பட்டம் பெற்றார். வழக்கறிஞராக 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று பதிவு செய்தார். கர்நாடக உயர் நீதிமன்றம், கர்நாடக நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார். அவர் 4 ஜூலை 2007 ஆம் ஆண்டு சூலை மாதம் 4 ஆம் தேதியன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் நாள் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 18 ஆம் தேதியன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டார் [4] 6 அக்டோபர் 2019 முதல் இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 IANS (6 October 2019). "Justice Lingappa Narayana Swamy Takes Oath As Himachal Chief Justice". NDTV.com. https://www.ndtv.com/india-news/justice-lingappa-narayana-swamy-takes-oath-as-himachal-chief-justice-2112635. பார்த்த நாள்: 6 October 2019.
- ↑ "Lingappa Narayana Swamy J appointed Acting CJ of Karnataka HC". Bar & Bench. 17 January 2019. பார்க்கப்பட்ட நாள் 10 February 2019.
- ↑ "Orders of appointment of Shri Justice Lingappa Narayana Swamy Judge KHC as acting CJ of Karnataka HC" (PDF). பார்க்கப்பட்ட நாள் 10 February 2019.
{{cite web}}
:|archive-date=
requires|archive-url=
(help) - ↑ "Sitting Judges". High Court of Karnataka. பார்க்கப்பட்ட நாள் 7 June 2019.
{{cite web}}
:|archive-date=
requires|archive-url=
(help)