இலங்கை ஏற்றுமதிகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கை ஏற்றுமதிகள் அந்நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. சுற்றுலாத்துறை, வெளிநாட்டுத் தொழிலாளர்கள், வெளிநாடுகள் உதவி ஆகியவற்றுடன் ஏற்றுமதிகள் இலங்கைக்கு பெரும் தொகை அந்நியச் செலாவணியை ஈட்டுத் தருகின்றன.
முக்கிய பொருட்கள்
[தொகு]தேயிலை, ஆடைகள், சுவைப் பொருட்கள், மீன், தேங்காய் பொருட்கள், இரப்பர் உடைகள், அணிகலன்கள், கனிம கற்கள் ஆகியவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள். இலங்கை 7.076 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதி வாய்ந்த பொருட்களை ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்கிறது.
ஏற்றுமதி நாடுகள்
[தொகு]ஐக்கிய அமெரிக்கா (31.3%), ஐக்கிய இராச்சியம்(12.2%), இந்தியா (8.9%), ஜெர்மனி (4.3) ஆகிய நாடுகளுக்கு இலங்கை பெருமளவு ஏற்றுமதிகள் செய்கிறது.
ஐக்கிய ஒன்றியம் சலுகை
[தொகு]சுனாமியை அடுத்து இலங்கையில் இருந்து உடைகள் ஏற்றுமதியை ஊக்குவிக்க ஐக்கிய ஒன்றியம் சலுகை வழங்கி வருகிறது.
ஏற்றுமதியில் தமிழர் பங்கு
[தொகு]இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் கணிசமான பொருட்களை புகலிடத் தமிழ்நாட்டு தமிழர்கள் கொள்வனவு செய்கிறார்கள். பழகிய பொருட்களை தொடர்ந்து பயன்படுத்த தலைப்படுகிறார்கள். இந்த வருமானம் இலங்கை அரசு இலங்கைத் தமிழரை அழிக்கும் போரில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது என்று விமர்சனம் உண்டு.