உள்ளடக்கத்துக்குச் செல்

இரெனீ இலோசெக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரெனீ இலோசெக்
Renée Hložek
இரெனீ இலோசெக், டொராண்டோ, அக்தோபர் 2019
இரெனீ இலோசெக், டொராண்டோ, அக்தோபர் 2019
பிறப்பு 15 நவம்பர் 1983
Alma materகேப் டவுன் பல்கலைக்கழகம்

பிரெட்டோரியா பல்கலைக்கழகம்

ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
துறை ஆலோசகர்ஜோ தங்கிளே

இரெனீ இலோசெக் (Renée Hlozek) (பிறப்பு: நவம்பர் 15,1983) ஒரு தென்னாப்பிரிக்க அண்டவியலாளர் ஆவார் , டொராண்டோ பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் வானியற்பியலுக்கான டன்லாப் நிறுவனத்தில் வானியல் மற்றும் வானியல் இயற்பியல் பேராசிரியராகவும் , கனடிய உயர் ஆராய்ச்சி நிறுவனத்திற்குள் ஒரு அசுரியேலி குளோபல் அறிஞராகவும் உள்ளார்.[1] அவர் காஸ்மிக் மைக்ரோவேவ் பின்னணி வகை ஐஏ சூப்பர்நோவா மற்றும் பேரியான் ஒலி அலைவுகளைப் படிக்கிறார். அவர் ஒரு மூத்த TED ஆய்வுறுப்பினராகவும் 2020 இல் சுலோன் ஆய்வுறுப்பினராகவும் ஆனார். இலோசெக் இருபால் உறவு கொண்டவராக அடையாளம் காட்டுகிறார்.[2]

இளமையும் கல்வியும்

[தொகு]

இலோசெக் பிரிட்டோரியா பல்கலைக்கழகத்திலும் , கேப் டவுன் பல்கலைக்கழகத்திலும் கணிதத்தைப் படித்தார். 2008 இல் பட்டம் பெற்றார்.[3] அவர் 2011 ஆம் ஆண்டில் உரோடுசு அறிஞராக ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை முடித்தார்.[4][5] அவரது ஆய்வறிக்கை " தொடக்க கால புடவியிலும் இருண்ட ஆற்றலை பல கட்ட அண்டவியல் தரவுகளுடன் ஆய்வு செய்தல் " பற்றியதாகும். இதற்காக இவர்அடாகாமா அண்டவியல் தொலைநோக்கியையும், சுலோன்கணினி வான் அளக்கையையும் பயன்படுத்தினார்.[6] அவரது முனைவர் வழிகாட்டி ஜோ தங்கிளி ஆவார்.[6] ஆக்சுபோர்டில் இருந்த காலத்தில் அவர் கிறிசு இலின்டோட்டின் மக்கள் வானியல் காணொலிப் பர்ப்பிலும் வான்கணியவியலில் 365 நாள் நிகழ்விலும் தோன்றினார்.[7][8]

ஆராய்ச்சியும் தொழிலும்

[தொகு]

முனைவர் பட்டத்திற்குப் பிறகு , ஹ்லோசெக் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் இலைமான் சுபிட்சர் இளநிலை முதுமுனைவர் ஆராய்ச்சி ஊழியராக சேர்ந்தார்.[3] பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் துருவமுனைப்பு - உணர்திறன் கொண்ட அடாகாமா அண்டவியல் தொலைநோக்கிக்கு அவர் அணியமானார்.[3] 2012 ஆம் ஆண்டில் அவர் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் சுபிட்சர் - கோட்சன் ஆய்வுறுப்பினராக பணியமர்த்தப்பட்டார்.[3][9] பிரின்சுடனில் அவர் சிறை கற்பித்தல் முயற்சியில் பங்கேற்று, இளம் கறுப்பினப் பெண்களை பிரின்ஸ்டனின் வானியல் துறைகளுக்குள் கொண்டு வருவதற்காக கோப் - பிரின்சுடன் பரிமாற்றத்தை உருவாக்கினார்.[3][10] அவர் கதைசொல்லிக் கொலைடர் நிகழ்வில் பங்கேற்றார். 2013 ஆம் ஆண்டில் அவர் பிரின்சுடனில் உலூசியன் வாக்கோவிக்சு தொடங்கிய அறிவியல் தொடருந்தில் பங்கேற்றார் , அங்கு அவர் வானியல் பற்றி பொதுமக்களிடம் பேச, நியூயார்க் நகர சுரங்கப்பாதைக்குச் சென் று உரையாற்றினார்.[11]

அவர் 2016 ஆம் ஆண்டில் வானியல், வானியற்பியலுக்கான டன்லப் நிறுவனத்தில் சேர்ந்தார்.[12] பிளாங்க்- வில்கின்சன் நுண்ணலை சமச்சீரின்மை ஆய்கலம், பைசெப்(BICEP), கெக் அணி ஆகியவற்றின் தரவுகளுடன் அடாகாமா அண்டவியல் தொலைநோக்கியில் ஒளிமுனைமைக் கருவியுடன் அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.[13] அவர் அல்கோன்கின் 46 மீ கதிரலைத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, கதிரலையின் பெயர்நிலைக் குறிகைகளை வகைப்படுத்துகிறார்.[14] இவர் கோட்பாட்டு இயற்பியலுக்கான பெரிமீட்டர் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.[15] 2017 ஆம் ஆண்டில் கனடிய மேம்பட்ட ஆராய்ச்சி நிறுவனத்தில் காஸ்மோஸ் நிகழ்வை அவிழ்ப்பதில் பங்கேற்றார்.[16] 2020 ஆம் ஆண்டில் இவருக்கு சுலோன் ஆய்வுறுப்பினர் விருது வழங்கப்பட்டது.[17]

இலோசெக் 2012 இல் ஒரு TED ஆய்வுறுப்பினராகவும் , 2014 இல் ஒரு முதுநிலை ஆய்வுறுப்பினராகவும் தேர்வானார். TED கல்விப்பரப்பில் அவரது பங்களிப்பான " அண்டத்தின் இறப்பு " நிகழ்வு 11 இலட்சம் தடவைகள் பார்க்கப்பட்டுள்ளது.[18] வாங்கூவரில் நடந்த 2014 TED மாநாடு உட்பட பல TED நிகழ்வுகளில் அவர் பேசியுள்ளார்.[19][20][21][22] அறிவியலில் பாலினச் சமநிலையை மேம்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளில் அவர் பங்கேற்கிறார்.[23][24][25][26]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Meet the 2019-2021 cohort of CIFAR Azrieli Global Scholars". CIFAR (in ஆங்கிலம்). 4 September 2019. Retrieved 2019-10-24.
  2. "Renee Hlozek". 500 Queer Scientists (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-06-09.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 University, Princeton. "Renée Hlozek - Society of Fellows in the Liberal Arts". www.princeton.edu. Retrieved 2018-05-27.University, Princeton. "Renée Hlozek - Society of Fellows in the Liberal Arts". www.princeton.edu. Retrieved 27 May 2018.
  4. "Renee Hlozek | University of Oxford Department of Physics". www2.physics.ox.ac.uk (in ஆங்கிலம்). Archived from the original on 2021-05-01. Retrieved 2018-05-27.
  5. "Renée Hlozek | TED Fellow | TED". www.ted.com (in ஆங்கிலம்). Retrieved 2018-05-27.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. 6.0 6.1 "Theses | Atacama Cosmology Telescope". act.princeton.edu (in ஆங்கிலம்). Retrieved 2018-05-27.
  7. "365 Days of Astronomy". 365 Days of Astronomy (in அமெரிக்க ஆங்கிலம்). 14 November 2010. Retrieved 2018-05-27.
  8. "Welcome pubastronomy.com - BlueHost.com". www.pubastronomy.com (in ஆங்கிலம்). Archived from the original on 2020-10-25. Retrieved 2018-05-27.
  9. Hlozek, Renée (2014). "Small-scale CMB cosmology ACT, Planck and beyond" (PDF). Cornell University. Retrieved 2018-05-27.
  10. "Hope-Princeton Exchange | TED Blog". blog.ted.com (in ஆங்கிலம்). Retrieved 2018-05-27.
  11. Lemonick, Michael D. "Ride the Science Train—aka the New York Subway". Time (in அமெரிக்க ஆங்கிலம்). ISSN 0040-781X. Retrieved 2018-05-27.
  12. "Renée Hložek | Astrophysicist, Cosmology Theorist And Astrostatistics Expert |" (in en-US). 2015-11-13. http://successness.com/2015/11/renee-hlozek-interview-astrophysicist-cosmology-theorist-and-astrostatistics-expert/. [தொடர்பிழந்த இணைப்பு]
  13. "TAP Colloquium: Dr. Renée Hlozek | Lunar and Planetary Laboratory | The University of Arizona". www.lpl.arizona.edu (in ஆங்கிலம்). 2017-08-10. Retrieved 2018-05-27.
  14. "Renee Hlozek | SOSCIP" (in en-US). https://www.soscip.org/researchers/renee-hlozek/. 
  15. "Renee Hlozek - Inside The Perimeter" (in en-US). https://insidetheperimeter.ca/myfavouriteequation-scientists-share-their-fave-formulae/renee-hlozek/. 
  16. "Yesterday, Today and Tomorrow - CIFAR : CIFAR". www.cifar.ca (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2018-05-27.[தொடர்பிழந்த இணைப்பு]
  17. "Renée Hložek awarded Sloan Research Fellowship". www.utoronto.ca (in ஆங்கிலம்). Retrieved 2020-02-13.
  18. "The death of the universe - Renée Hlozek". TED-Ed (in ஆங்கிலம்). Retrieved 2018-05-27.
  19. TED Archive (2017-08-25), The making of cosmic soup | Renee Hlozek, retrieved 2018-05-27
  20. TED Archive (2017-12-12), Making sense of everything we know about space | Renée Hlozek, retrieved 2018-05-27
  21. TEDx Talks (2014-03-25), Disruptive cosmology | Renee Hlozek | TEDxPrincetonU, retrieved 2018-05-27
  22. TEDxYouth (2014-02-27), Cosmology- Discovering the Unknown: Renee Hlozek at TEDxSpenceSchool, retrieved 2018-05-27
  23. "032: Strong Women in Science: Cosmologist Prof. Renee Hlozek | The Strong Women's Club". www.thestrongwomensclub.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2018-05-27.
  24. "Women in Science, Interview with Renee Hlozek, Princeton University Cosmologist & TED Fellow | Lady Paragons". ladyparagons.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-05-01. Retrieved 2018-05-27.
  25. "The Real Deal: Renee Hlozek, Cosmologist". highheelsinthelab.blogspot.co.uk. 2013-09-30. Retrieved 2018-05-27.
  26. "The Strong Women's Club: Fitness business in depth. Health and wellness as tools for success for business women, corporations, female entrepreneurs. : 032: Strong Women in Science: Cosmologist Prof. Renee Hlozek". thestrongwomensclub.libsyn.com. Archived from the original on 2021-04-30. Retrieved 2018-05-27.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரெனீ_இலோசெக்&oldid=4109516" இலிருந்து மீள்விக்கப்பட்டது