இரெண்டாலா மதுபாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரெண்டலா மதுபாலா
Rentala Madhubala
வாழிடம்
தேசியம்இந்தியர்
பணியிடங்கள்சவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்சவகர்லால் நேரு பல்கலைக்கழகம், ஐதராபாத்து பல்கலைக்கழகம்

இரெண்டாலா மதுபாலா (Rentala Madhubala) இந்தியாவைச் சேர்ந்த மூலக்கூற்று ஒட்டுண்ணியியல் மற்றும் செயல்பாட்டு மரபியல் ஆய்வுகள் மேற்கொள்ளும் ஒரு அறிவியலாளர் ஆவார். சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள கல்வியியல் பணியாளர் கல்லூரியின் இயக்குநராக உள்ளார். வாழ்க்கை அறிவியல் பள்ளியில் கல்வித் தலைவராகவும் அங்குள்ள மேம்பட்ட கருவி ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குநராகவும் இருந்தார்.[1]

மதுபாலா தில்லி பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் இளம் அறிவியல் மற்றும் முதுநிலை அறிவியல் பட்டங்களைப் பெற்றார். 1974 ஆம் ஆண்டு சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வாழ்க்கை அறிவியலில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை முடித்தார் 1983 ஆம் ஆண்டு ஐதராபாத்து பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[2] இந்தியன் அறிவியல் அகாடமி, தேசிய அறிவியல் அகாதமி, இந்திய அறிவியல் அகாதமி ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Prof. Rentala Madhubala Ph.D". Jawaharlal Nehru University. பார்க்கப்பட்ட நாள் 13 July 2016.
    - "Indian Inventors Develop Leishmaniasis Treating Method". US Fed News Service, Including US State News (subscription required). 9 March 2007. Archived from the original on 11 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
    - "Rentala Madhubala". பார்க்கப்பட்ட நாள் 13 July 2016.
  2. Madhubala, Rentala. "Prof. Rentala Madhubala". Jawaharlal Nehru University. பார்க்கப்பட்ட நாள் 24 February 2017.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரெண்டாலா_மதுபாலா&oldid=3927847" இலிருந்து மீள்விக்கப்பட்டது