இருபோரேன்(2)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருபோரேன்(2) (Diborane(2)) என்பது B2H2.என்ற வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் HBBH என சமச்சீராகப் பிணைக்கப்பட்ட சகப்பிணைப்பு அமைப்பைக் கொண்டுள்ளது. இரண்டு போரான் அணுக்களுக்கு இடையில் இரட்டைப் பிணைப்பும் ஒவ்வொரு போரான் அணுவுடனும் ஒரு ஐதரசன் அணுவும் இவ்வமைப்பில் உள்ளன. போரான் குழுவில் உள்ள பிற தனிமங்களுக்கான ஒத்த வாய்ப்பாடுகளுக்கு மத்தியில் இச்சேர்மத்தின் வாய்ப்பாடு தனித்து இருக்கிறது [1] மற்றும் இருபோரேன்(6) போன்ற உயர் போரேன்கள் போலவும் இல்லாமல் இருக்கிறது. அவற்றில் பாலமிட்டுள்ள ஐதரைடுகளுக்குப் பதிலாக இச்சேர்மத்தில் நேரடியாக போரான் – போரான் பிணைப்பு காணப்படுகிறது. இச்சேர்மத்தில் இருக்கும் போரான் – போரான் பிணைப்பு, நிகர சிக்மா பிணைப்புகளின் சேர்க்கை ஏதுமில்லாத தூய்மையான பை பிணைப்புக்கு ஒர் அரிய உதாரணமாகும்[2]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Treboux, Gabin; Barthelat, Jean Claude (1993). "X-X direct bonds versus bridged structures in group 13 X2H2 potential energy surfaces". J. Am. Chem. Soc. 115 (11): 4870–4878. doi:10.1021/ja00064a056. 
  2. Jemmis, Eluvathingal D.; Pathak, Biswarup; King, R. Bruce; Schaefer III, Henry F. (2006). "Bond length and bond multiplicity: σ-bond prevents short π-bonds". Chemical Communications: 2164–2166. doi:10.1039/b602116f. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபோரேன்(2)&oldid=1938967" இலிருந்து மீள்விக்கப்பட்டது