இரிசோர்சுசாட்-2ஏ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இரிசோர்சுசாட் - 2ஏ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரிசோர்சுசாட் - 2ஏ
திட்ட வகைதொலையுணர்வு
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
காஸ்பார் குறியீடு2016-074A
திட்டக் காலம்5 வருடங்கள்
விண்கலத்தின் பண்புகள்
ஏவல் திணிவு1,235 கிலோகிராம்கள் (2,723 lb)[1]
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்Dec 7, 2016 (2016-12-07)
ஏவுகலன்பிஎஸ்எல்வி சி36
ஏவலிடம்சதீஸ் தவான் விண்வெளி மையம் முதல் தளம்
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemபுவி மைய வட்டப்பாதை
சுற்றுவெளிலியோ
அண்மைgee817 கிலோமீட்டர்கள் (508 mi)
கவர்ச்சிgee817 கிலோமீட்டர்கள் (508 mi)
சாய்வு98.72 degrees
சுற்றுக்காலம்102 minutes

இரிசோர்சுசாட் - 2ஏ (Resourcesat-2A) என்பது ஒரு இந்திய இயற்கை வள தொலையுணர்வு செயற்கைக்கோள் ஆகும். இதனை இந்திய விண்வெளி ஆய்வு மையம், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி புதன்கிழமை காலை 10.25 மணித்துளிகளுக்கு ஏவுகலம் சி36ன் மூலம் விண்ணில் ஏவியது. இதற்கு முன்னர் 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் மாதம் 2011 ஆம் ஆண்டும் இதேபோல் முறையே ஒரு தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. இதன் எடை 1,235 கிலோ கொண்டதாகும். [2] புதன் கிழமை காலை 10.25 விண்ணில் பாய்ந்த செயற்கைக்கோளானது சரியாக 18வது நிமிடத்தில் சூரிய துருவ சுற்றுவட்டப் பாதையில் 822 கிலோ மீற்றர்கள் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டது.

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "Resourcesat 2, 2A".
  2. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது தொலை உணர்வு 'ரிசோர்சாட்-2ஏ' செயற்கைக் கோள் தி இந்து தமிழ் 08 டிசம்பர் 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிசோர்சுசாட்-2ஏ&oldid=3533268" இலிருந்து மீள்விக்கப்பட்டது