இராய்ப்பூர் ராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராய்ப்பூர் ராணி என்பது இந்திய மாநிலமான அரியானாவில் உள்ள பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள நகரமாகும் . இது சண்டிகர் - நஹான் - பயந்தா சாஹிப் - தேராதூன் நெடுஞ்சாலையில், சண்டிகர்- மொகாலி - பஞ்சகுலா நகர நகரங்களில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது தேரா பாஸி தொழில்துறை மண்டலத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், பார்வாலா தொழில்துறை மண்டலத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. அம்பாலா மாவட்டத்தில் உள்ள நாராயங்கர் இதன் அருகாமையில் உள்ள அடுத்த பெரிய நகரம் ஆகும்.

வரலாறு[தொகு]

இராய்பூர் ராணி நகரம் 1420 ஆம் ஆண்டில் இராவ் ராய் சிங் என்பவரால் நிறுவப்பட்டது. இவர் அஜ்மீரில் இருந்து வந்த ராணா ஹர் ராயின் மகன்களில் ஒருவராக இருப்பதாகக் கூறினார். ராவ் சாஹிப் என்று பெயரிடப்பட்ட அவரது சந்ததியினரால் இந்திய சுதந்திரம் அடையும் வரை ஆட்சி செய்யப்பட்டது. [1]

இராய்ப்பூர் ராணி கோட்டை[தொகு]

இராய்ப்பூர் ராணி கோட்டை அஜ்மீரில் இருந்து வந்து இந்திய சுதந்திரம் அடையும் வரை ஆட்சி செய்த சந்ததியினரால் கட்டப்பட்ட கோட்டையாகும். [2]

மக்கள் தொகையியல்[தொகு]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[3] இராய்ப்பூர் ராணி நகரத்தின் மக்கள் தொகை 7027 ஆகும். இதில் ஆண்கள் 54% ஆகவும் பெண்கள் 46% ஆகவும் உள்ளனர். இராய்ப்பூர் ராணி நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 69% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். இதில் ஆண் கல்வியறிவு 74%, பெண் கல்வியறிவு 63%. இராய்ப்பூர் ராணியில், 15% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள். இது புராண மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்கும் பெயர் பெற்றது. பத்தாவது சீக்கிய குரு, குரு கோபிந்த் சிங் இராய்ப்பூர் ராணியைப் பார்வையிட்டார் என்று நம்பப்படுகிறது, எனவே இந்த இடத்திற்கு ராணியின் பெயரை சூட்டினார்.

இது இயற்கையின் அருட்கொடையைக் கொண்ட ஒரு இடம். மோர்னி ஹில்ஸ் என்று அழைக்கப்படும் பிரபலமான சுற்றுலா இடமும் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சரசுவதி தேவி (மா சரஸ்வதி தேவி) கோயில் சோட்டா திரிலோக்பூர்[தொகு]

மா சரஸ்வதி தேவி கோயில் சோட்டா திரிலோக்பூர் மற்றும் சரசுவதி தேவி கோயில் சோட்டா திரிலோக்பூர் என்று அழைக்கப்படும் சரசுவதி தேவியின் புனித கோயில் சோட்டா திரிலோக்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் எல்லையில் உள்ள இராய்ப்பூர் ராணியில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தக் கோயில் அறிவு மற்றும் கற்றலின் தெய்வமான அன்னை சரசுவதிக்கு சொந்தமானது. ஸ்ரீ சரசுவதி தேவியின் இந்த புனித ஆலயத்தின் வரலாறு குறித்து பல வாய்வழி மரபுகள் நடைமுறையில் உள்ளன. இந்த கிராமம் பழைய நஹான் மாநிலத்தின் ஒரு பகுதியாக அமைந்தது.

2019 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட INR1200 கோடி திட்டத்தின் ஒரு பகுதியாக, அரியானா அரசு இந்த கோயிலை உருவாக்கி வருகிறது, இதில் கலேசர் மகாதேவ் கோயில், கபல் மோச்சன் தீர்த்தம், பசதியாவாலாவின் பஞ்சமுகி அனுமன் கோயில் மற்றும் பண்டா சிங் பகதூரின் லோகர் கோட்டை தலைநகரம் ஆகியவை அடங்கும்.[4]

கல்வி[தொகு]

இராய்ப்பூர் ராணி நகரம் கல்வி மையமாக வளர்ந்து வருகிறது. பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள 2018-19ல் ஒரு அரசு கல்லூரி (இணை) தொடங்கியது.மேலும் இராய்ப்பூர் ராணியில் ஆங்கிலம் மற்றும் இந்தி கல்வி இரண்டையும் வழங்கும் பல உயர் மற்றும் மூத்த மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசு மூத்த மேல்நிலைப் பள்ளிகளும் (இணைக் கல்வி) அடங்கும். 2 தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் உள்ளன.

சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் ஐ.டி கல்வியை வழங்கும் பல கணினி பயிற்சி மையங்களும் உள்ளன.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராய்ப்பூர்_ராணி&oldid=2891672" இருந்து மீள்விக்கப்பட்டது