இராமச்சந்திர சாகராம் ரூய்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1995 ஆம் ஆண்டு இந்தியாவின் முத்திரையில் ரூய்கர்

இராமச்சந்திர சாகராம் ரூய்கர் (Ramchandra Sakharam Ruikar) இந்திய தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடியாக இருந்தார். 1895 ஆம் ஆண்டு சனவரி மாதம் 8 ஆம் தேதியன்று மகாராட்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள ரூய் என்ற இடத்தில் இவர் பிறந்தார். புனே மற்றும் நாக்பூரில் உள்ள கல்லூரியில் வரலாறு மற்றும் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். நாக்பூரில் ஒரு சட்ட சேவை அமைப்பை உருவாக்கினார். அங்கு இவர் நாக்பூர் நெசவாளர்கள் சங்கத்தை நிறுவினார். இதுவே தொழிற்சங்க சட்டத்தின் கீழ் முதலில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமாகும். இந்தியா முழுவதும் பல தொழிற்சங்கங்களை உருவாக்க உதவினார். அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் தலைவராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது நம்பிக்கைகளுக்காக பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1938 ஆம் ஆண்டில் இவர் அகில இந்திய பார்வர்டு பிளாக்கு கட்சியில் சேர்ந்தார், விரைவில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஆனார்.

1946 ஆம் ஆண்டில் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு மாநாட்டில் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் பிரதிநிதியாக ரூய்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

1948 ஆம் ஆண்டில் பார்வர்டு பிளாக்கு கட்சியில் பிளவு ஏற்படுத்தினார். மேலும் இவரது பிரிவு ஒரு தனி அகில இந்திய பார்வர்டு பிளாக் (ருய்கார்) கட்சியை அமைத்தது. டிசம்பர் 1948 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் இந்து மசுதூர் சபா தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவரானார். [2] பின்னர் இவரது கட்சி கலைக்கப்பட்டு பிரச்சா சோசலிசக் கட்சியில் சேர்ந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ornati, Oscar (1954). "Indian Trade Unions Since Independence". Far Eastern Survey 23 (8): 113–122. doi:10.2307/3024265. https://archive.org/details/sim_far-eastern-survey_1954-08_23_8/page/113. 
  2. Park, Richard L. (1949). "Labor and Politics in India". Far Eastern Survey 18 (16): 181–187. doi:10.2307/3024423. 

புற இணைப்புகள்[தொகு]